‘முபாசா: தி லயன் கிங்’ (ஆங்கில பட விமர்சனம்)

119

 

 

CHENNAI:

படம்: முபாசா: தி லயன் கிங்

நடிப்பு: காட்டு ராஜா சிங்கம் மற்றும் கூட்டாளிகள்

தயாரிப்பு; வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்

இசை:: டேவ் மெட்ஸ்கர், லின் மானுவல் மிராண்டா

ஒளிப்பதிவு: ஜேம்ஸ் லேக்ஸ்டன்

இயக்கம்: பேரி ஜென்கின்ஸ்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா ( தமிழ்)

2019ம் ஆண்டு திரைக்கு வந்த.தி லயன் கிங் படத்தின் 2ம் பாகமாக வெளியாகியிருக்கிறது முபாசா தி.லயன் கிங்

எளிய சிங்க குடும்பத்தில். பிறந்த முபாசா தனது தாய் சொல்லின்படி அழகிய பசுமை.பிரதேசமான மிலேலே பகுதிக்கு போகும் வழியில்.காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தாயை.விட்டு பிரிந்து வெகுதூரம் செல்கிறது.  மற்றொரு சிங்க குடும்பத்தை சேர்ந்த டாக்கா முபாசாவை காப்பாற்றி தன் கூட்டத்துக்கு அழைத்து வருகிறது. முபாசாவை தன் கூட்டத்தில் சேர்க்க  சிங்க ராஜா.மறுக்கிறது. கூட்டத்தில் சேர்க்க சிங்க ராஜா வைக்கும்  போட்டியில் முபாசா ஜெயித்தால் அந்த கூட்டத்தில் சேர அனுமதி தருகிறது. போட்டியில் ஜெயிக்கும் முபாசா கூட்டத்தோட சேர்க்கப்பட்டாலும் அந்நியப்பட்டு தான் இருக்க வேண்டி இருக்கிறது. ஒரு சமயம் முபாசா  வெள்ளை நிற சிங்க கூட்டத்தின்  குட்டியை கொலை செய்கிறது.  இது தெரிந்ததும் வெள்ளை நிற சிங்க கூட்டம் முபாசாவின் மொத்த சிங்கக்  கூட்டத்தையும் அழிக்க புறப்பட்டு வருகிறது. இந்த இரண்டு சிங்க கூட்டத்திற்கிடையில் நடக்கும் மோதல்தான் கதை.

முபாசா தி  லைன் கிங் படம் தொடக்கம் முதல் இறுதிவரை நம்மை காட்டுப் பிரதேசத்துக்குள் கொண்டு போய் நிறுத்துகிறது. தொடுவானத்துக்கு அந்த பக்கம் இருக்கும் மிலேலே பகுதிக்கு தன்னுடய  அப்பா அம்மாவோடு போகும் முபாசா காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வெள்ளத்தோடு அடித்துச்செல்வதெல்லாம். ரொம்ப தத்ரூபமாக படமாகப்பட்டிருக்கிறது.

வெண்  சிங்க கூட்டம் முபாசா  கூட்டத்தை சுற்றி வளைத்து தாக்குவதும் அந்த தாக்குதலிலிருந்து முபாசாவும், அதனுடைய நண்பனும் தப்பித்து  பனிமலையில்  பதுங்குவதெல்லாம் கண்கொள்ளா காட்சிகள்.

மிலேலே பகுதி பற்றி ஆரம்பத்திலிருந்து தரப்படும் வர்ணனை அந்த இடத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பை  ஏற்படுத்துகிறது  கற்பனையாக ஒரு பெயரைச் சொல்லி ஏமாற்றுவார்களோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் பசுமையான அந்த பகுதியை காட்டும் போது கண்களுக்குள் குளிர் தென்றல் வீசுகிறது.

சிங்க கூட்டங்களுக்கு இடையே நடக்கும் மிருகத்தனமான  சண்டை  ஒரு பதட்டத்தை படர விடுகிறது.

நட்பு, காதல், பாடல், ஆக்சன்  என ஒரு பக்கா கமர்சியல் தமிழ் படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அத்தனை அம்சமும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது. குழந்தைகள் மிகவும் விரும்பி பார்க்கும் படமாக உருவாகி இருக்கிறது.  அதே சமயம் தி லயன கிங் ரசிகர்களுக்கும் இது ஒரு விருந்து.

ஹாலிவுட் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு புரிவதற்காக தமிழில் டப்பிங் செய்யப்பட்டிருப்பது கதை புரிதலை எளிதாக்கி இருக்கிறது. நாசர் ,  அசோக் செல்வன், அர்ஜுன் தாஸ், ரோபோ சங்கர், சிங்கம் புலி, வி டிவி கணேஷ் ஆகியோர்  சிங்கம், குரங்கு, பன்றி  உள்ளிட்ட மிருகங்களுக்கு குரல் கொடுத்து பேசியிருக்கிறார்கள். கதையை சிதைக்காமல் இருந்தாலும் காமெடி காட்சிகளை தங்கள் இஷ்டத்துக்கு பேசி படத்தின் ஒரிஜினாலிட்டியை குறைத்திருக்கிறார்கள்.

வால்ட்.டிஸ்னி இந்த படத்தை தயாரித்திருக்கிறது.

பேரி ஜென்கின்ஸ் படத்தை ரசனையுடன் இயக்கியிருக்கிறார்.

ரேட்டிங் 3/5