‘நேசிப்பாயா’ திரைப்பட விமர்சனம்!

120

 

CHENNAI:

நடிகர் & நடிகைகள் – ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், இளைய திலகம்’ பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, ஷிவ் பண்டிட், கல்கி கோய்ச்லின், ஜார்ஜ் கோரா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – விஷ்ணு வரதன்.

ஒளிப்பதிவாளர் – கேமரூன் எரிக் பிரிசன்,

படத்தொகுப்பாளர் – அ.ஸ்ரீகர் பிரசாத்.

இசையமைப்பாளர் – யுவன் ஷங்கர் ராஜா.

தயாரிப்பு நிறுவனம் – எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ்.

தயாரிப்பாளர்கள் – சேவியர் பிரிட்டோ, சினேகா பிரிட்டோ.

கதாநாயகன் ஆகாஷ் முரளி மற்றும் கதாநாயகி அதிதி ஷங்கர் இருவரும் கண்டதும் காதல் கொண்டு கல்லூரி காலங்களில் காதல் தொல்லைக் கொடுத்து ஒரு வழியாக தனது காதல் வலையில் விழ வைத்து காதலித்து வருகின்றார்.

கதாநாயகன் ஆகாஷ் முரளி மற்றும் கதாநாயகி அதிதி ஷங்கர் இருவரும் இடையே திடீரென்று பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட, கதாநாயகி அதிதி ஷங்கர் போர்ச்சுக்கல் நாட்டில் வேலை கிடைக்க வேலைக்கு சென்று விடுகிறார்.

கதாநாயகன் ஆகாஷ் முரளி உள்ளூரில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்.

இதற்கிடையே, போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்ற கதாநாயகி அதிதி ஷங்கர் ஒரு கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு போர்ச்சுக்கல் உள்ள சிறைச் சாலையில் அடைக்கப்படுகிறார்.

தகவல் அறிந்த் கதாநாயகன் ஆகாஷ் முரளி, கதாநாயகி அதிதி ஷங்கரை காப்பாற்றுவதற்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கிறார்.

கதாநாயகன் ஆகாஷ் முரளி, கதாநாயகி அதிதி ஷங்கரை காப்பாற்றினரா?, காப்பாற்ற வில்லையா?, கொலைக்கான பின்னணி, என்ன? அதில் கதாநாயகி அதிதி ஷங்கர் அந்தக் கொலையில் சிக்கியது எப்படி? என்பதுதான் இந்த ‘நேசிப்பாயா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக ஆகாஷ் முரளி நடித்திருக்கிறார்.

அறிமுக கதாநாயகன் ஆகாஷ் முரளி தனக்கு கிடைத்த வாய்ப்பை தன்னுடைய முழு திறமையையும் வெளிக்காட்டி அனைத்து காட்சிகளிலும் நடிப்பு மூலம் ம்க சரியாக வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார்.

ஆறடி உயரத்தில் ஆக்‌ஷன் கதாநாயகனுக்கான அத்தனை அம்சங்களும் கொண்ட அறிமுக கதாநாயகன் ஆகாஷ் முரளி நிச்சயம் தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வருவார் என்பது உறுதி.

இந்த நேசிப்பாயா திரைப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர் கல்லூரி மாணவி மற்றும் வாழ்க்கையை உணர்ந்த முதிர்ச்சியான பெண் என ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், சில காட்சிகளில் அவரது நடிப்பு செயற்கை தனமாக இருப்பதோடு, திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை சற்று எரிச்சலடையவும் செய்கிறது.

சரத்குமார், குஷ்பு சுந்தர், ராஜா, பிரபு, கல்கி கோச்சலின் ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா, என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில்  நடித்திருப்பவர்கள் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எரிக் பிரைசன் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எரிக் பிரைசன் சேசிங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் ஹாலிவுட் திரைப்படங்களின் உள்ளது போல் மிகப் பிரம்மாண்டமாக திரைப்படமாக்கப்பட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமாராகதான் உள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து இருக்கிறார்.

வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்லும் கதாநாயகிக்கு பிரச்சனை, வர அதில் இருந்து அவரை காப்பாற்றும் கதாநாயகன், என்ற ஒரு சின்ன் கதையை வைத்துக்கொண்டு, காதல், ஈகோவால் ஏற்படும் பிரிவு, கொஞ்சம் ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் ஆகியவற்றை கலந்து மிக அருமையான திரைக்கதையில் பிரமாண்டமான கமர்ஷியல் மற்றும் மென்மையான காதல் திரைப்படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் விஷ்ணு வர்தன்.