
சுரபி மோகன் தயாரிப்பில் நரேஷ் சம்பத் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ், ஆஷிமா நர்வால், யாஷிகா ஆனந்த், நாசர், அருவி மதன், கே எஸ். ரவிக்குமார்,ஷியாஜிசண்டே மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ராஜபீமா கதை சிறுவன் ராஜா அம்மாவை இழந்து மனவேதனையில் இருக்கிறான். அந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு ஆறுதல் தரும் விதமாக ஒரு யானையுடன் தொடர்பு உருவாகிறது. ராஜாவுக்கு யானையையும், யானைக்கு ராஜாவையும் பிடித்துப் போக, ராஜாவின் அப்பா யானையை வீட்டில் வைத்து வளர்க்க முடிவெடுக்கிறார். அதற்கான முறையான அனுமதியும் பெறுகிறார். யானைக்கு பீமா என பெயர் வைக்கப்படுகிறது. ராஜாவும் பீமாவும் உயிருக்கு உயிராக பழகுகிறார்கள். ராஜா வளர்ந்து வாலிபனாகிறான்.