
CHENNAI:
படம்: டிராகன்
நடிப்பு: பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயது லோஹர், வி ஜே சித்து, ஹரிஷ் கான், கே. ரவிக்குமார், மிஷ்கின் , மரியம் ஜார்ஜ்
தயாரிப்பு: ஏ ஜி எஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம், எஸ் கணேஷ், எஸ் சுரேஷ்
அர்ச்சனா கல்பாத்தி (கிரியேட்டிவ் புரொடியூசர்)
இசை: லியோன் ஜேம்ஸ்
ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி
இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
பி ஆர் ஓ: நிகில் முருகன்
என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ராகவன் ( பிரதீப் ரங்கநாதன்) படிக்காமல் நணபர்களுடன் சேர்ந்து ரவுடியிஸம் செய்வது, தம்மடிப்பது, சைட் அடிப்பது என்று சுற்றுகிறார். 48 அரியர்ஸ் வைத்திருக்கும் அவரை எல்லோரும் டிராகன் என்று பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள். அவரது சேட்டைகளை பார்த்து சக மாணவி கீர்த்தி (அனுபமா பரமேஸ்வரன்) காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் கீர்த்திக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். காபி ஷாப்புக்கு ராகவனை அழைத்து பிரேக் அப் செய்கிறார். இதில் மனம் நொந்த ராகவன் எப்படியாவது பெரிய கம்பெனியில் சேர்ந்து அனுபமா கணவர் சம்பாத்தியத்தை விட அதிக சம்பாத்தியம் பெற வேண்டும் என்று முயல்கிறார். இதற்காக போலி சான்றிதழ் கொடுத்து அமெரிக்கா கம்பெனியில் சேர்கிறார். இந்த விஷயம் கல்லூரி பிரின்ஸ்பாலுக்கு தெரிய வர அவர் ராகவனை அழைத்து மிரட்டல்
விடுக்கிறார். போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்ததை நிறுவன எம்டியிடம் கூறி வேலையை விட்டு தூக்கி விடுவேன். நீ கல்லூரியில் எழுதாமல் விட்ட 48 அரியர் பேப்பர்களை எழுதி முறைப்படி பாஸ் செய் என்று கண்டிஷன் போடுகிறார். இதற்கிடையில் ராகவனுக்கு பெரிய குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்யும் வாய்ப்பும் வருகிறது. இந்த சூழலில் ராகவன் எடுத்த முடிவு என்ன? மீண்டும் கல்லூரிக்கு சென்று படித்தானா? வேலை என்னவாயிற்று? திருமணம் என்ன ஆனது என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
லவ் டுடே படத்தில் நடித்து ஸ்கோர் செய்த பிரதீப் ரங்கநாதனுக்கு இரண்டாவது படமாக வந்திருக்கிறது டிராகன். லவ் டுடே படம் போல் இந்த படமும் அவருக்கு கை கொடுக்குமா என்று பார்த்தால் நிச்சயம் கை கொடுக்கும் என்று தெரிகிறது.
48 அரியர் வைத்து கெத்தாக கல்லூரியில் சுற்றிவரும் டிராகன் ராகவனாக படுஅலப்பறை செய்து நடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
பிரதீப்பின் ரகளைகளை ரசிக்கும் அனுபமா அவர் மீது காதல் கொண்டு சுற்றினாலும் எப்படியும் இந்த காதல் ஒர்க்கவுட் ஆகாது என்று முதலிலேயே தெரிந்து விடுகிறது. பிரதிப்பை அவர் பிரேக் அப் செய்யும்போது படம் சோகமான பாதையில் திரும்பி விடுவோமோ என்று எண்ண வைத்து மீண்டும் ஒரு எழுச்சியுடன் வெவ்வேறு கோணத்தில் காட்சிகள் பறப்பது படத்தை ஜிவ்வென கடைசி வரை
கொண்டு செல்கிறது.
டூப்ளிகேட் சர்டிபிகேட் கொடுத்து அமெரிக்க கம்பெனியில் சேரும் பிரதீப் ஒரே பாடலில் பணக்காரன் ஆவது போல் பெரும் பணக்காரர் ஆகி விடுவது ஆச்சரியம் தான். வாழ்க்கை ஜாலியாக சென்று கொண்டிருக்கிறது என்று எண்ணும்போது திடீரென்று என்ட்ரி கொடுக்கும் கல்லூரி பிரின்சிபல் மிஷ்கின் பிரதீப்பின் சொகுசு வாழ்க்கையை கவிழ்த்து போடுகிறார்.
“நீ டூப்ளிகேட் சர்டிபிகேட் கொடுத்து சேர்ந்த வேலையை விட்டு உன்னை தூக்கி விடுவேன் என்று மிரட்டும் மிஷ்கின் மீண்டும் பிரதீப்பை கல்லூரிக்கு வந்து படித்து 48 அரியரையும் கிளியர் செய் என்று கண்டிஷன் போடுவதும் அதன்படி பிரதீப் மீண்டும் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதும் காட்சிகள் ரகளையோ ரகளை.
அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் என்ட்ரீ கொடுத்திருக்கிறார். இது அவருக்கு நிச்சயம் பெரிய ரீ என்ட்ரீயாக இருக்கும்.
கயது லோஹர் பிரதீப்பை மணக்கும் மணப்பெண்ணாக வந்து அடிக்கடி பிரதிப்பை டெஸ்ட் வைத்து சீண்டி பார்ப்பது காட்சிகளை வேகப்படுத்துகிறது.
படத்தில் பிரதீப் சிகரெட் புகைக்கும் காட்சி நாயகிகள் தண்ணி அடிக்கும் காட்சி போன்றவற்றை நீக்கியிருந்தால் இன்னும் கூட கிளீன் படம் என்று கூறியிருக்கலாம்.
கே எஸ் ரவிக்குமார் பந்தாவாக நடித்திருக்கிறார். பிரதீப்பின் தந்தையாக ஜார்ஜ் மரியும் சென்டிமென்ட்டை உருக்கி தள்ளுகிறார். பி. எல். தேனப்பன் சிறிய பாத்திரத்தில் வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
லியோன் ஜேம்ஸ் இசை இளமை துள்ளல்.
நிகேத் பொம்மி ஒளிப்பதிவு கலர்ஃபுல்.
காதல், சென்டிமெண்ட் கலந்து கண்களை குளமாக்கும் படமாக டிராகனை தந்திருக்கிறார் இயக்குனர்
அஸ்வத் மாரிமுத்து .
ரேட்டிங் 4/5