“மாரீசன்” திரை விமர்சனம்!

105

 

 

CHENNAI:

படம்: மாரீசன்

நடிப்பு: பகத் பாசில், வடிவேலு, கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், பி எல் தேனப்பன், பைவ் ஸ்டார் கிருஷ்ணா, ஹரிதா

தயாரிப்பு:  சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சௌத்ரி

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: கலைச்செல்வன் சிவாஜி

இயக்கம்: சுதீஷ் சங்கர்

பிஆர்ஓ: யுவராஜ்

ஜெயிலிலிருந்து விடுதலை ஆகி வரும் பகத் பாசில் மீண்டும் ஒரு வீட்டிற்குள் திருடுவதற்கு நுழைகிறார். அங்கு கைவிலங்குடன் வடிவேலு அதிர்ச்சி தருகிறார்.  என் கைவிலங்கை அவிழ்த்து விட்டால் உனக்கு பணம்  தருகிறேன் என்கிறார் வடிவேலு. பணத்துக்கு ஆசைப்பட்டு கைவிலங்கை அவிழ்த்து விடுகிறார் பகத். ஏடிஎம்மில் சென்று வடிவேலு பணம் எடுக்கும் போது அவரிடம் 25 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் இருப்பதைக் கண்டு ஷாக்காகும் பகத் மொத்த பணத்தையும் எடுக்க திட்டமிடுகிறார். அதற்காக வடிவேலு எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு அவரை தன்னுடைய டூ வீலரிலேயே அமர்த்தி அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களை போலீஸ் தேடுகிறது.  போலீஸ் இவர்களை எதற்காக தேடுகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

மாமன்னன் படத்தில் குணச்சித்திர நடிப்பில் வடிவேலுவை ரசிகர்கள் பார்த்தார்கள். இதில் ஞாபக மறதி வடிவேலுவை ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள்.

நான் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும் என்று கூறி பகத் மோட்டார் சைக்கிளில் வடிவேலு  ஏறி அமர்ந்ததும்  இதுவொரு பயண கதையாக போகப்போகிறது என்றுதான் தோன்றுகிறது.

படத்தின் முதல்பாதி வரை வடிவேலுவின் ஞாபக மறதியும், அவரிடம் இருக்கும் பணத்தை எப்படியாவது ஆட்டையை போட வேண்டும் என்று பகத் பாசில் போடும் திட்டங்களும் டாம் அண்ட் ஜெர்ரி கதையாக ஜாலியாக செல்கிறது. திடீரென்று ஒரு கிரைம் ஸ்டோரி  குறுக்கிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் இடைவேளயின் போது  அதிர்ச்சியில் நிறுத்துவது எதிர்பாராத திருப்பம்.

பகத்தும் வடிவேலுவும் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு  கொலை நடக்கிறது அந்த கொலையை செய்வது யார் என்ற சஸ்பென்ஸ்தான் படத்தின் திருப்புமுனை.   அது என்ன என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த இடத்தில் அந்த சஸ்பென்சை உடைத்து ஸ்பாய்லர் ஆக விரும்பவில்லை.

பகத்தின் நண்பராக விவேக் பிரசன்னா  சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வடிவேலு ஜோடியாக சித்தாரா நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு டி ராஜேந்திரன் அறிமுக நடிகை ரேணுகாவை காண முடிகிறது.

இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

ஒரு மலையாள கிரைம் திரில்லரை பார்த்த அனுபவமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார்  சுதீஷ் சங்கர்.

யுவன் சங்கர் ராஜா இசை ஓவர்லேப் செய்யாமல் காட்சிகளோடு இணைந்திருப்பது அழகு.

ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி கேமரா ஒரு கொரியன் படத்தை பார்த்தது போன்ற காட்சி பதிவுகளை செய்திருக்கிறது.

 

ரேட்டிங் 3/5