’லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ திரைப்பட விமர்சனம்!

29

 

CHENNAI:

படம்: எல் எஸ் எஸ் (லவ் ஷேர் சப்ஸ்கிரைப் )

நடிப்பு: ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித் தனஜெயன், முத்து புவன்

தயாரிப்பு: பி ரகு

இசை: அஸ்வ மித்ரா

ஒளிப்பதிவு என் எஸ் சதீஷ் குமார்

இயக்கம்: ஆர் மகாலட்சுமி முருகன்

பி ஆர் ஓ : சதீஷ் (AIM )

சென்னையில் வசிக்கும் வட இந்தியாவைச் சேர்ந்த வசதியான வீட்டுப் பெண் நாயகி சிம்ரன். தாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், தந்தை அரவணைப்பில் வளர்கிறார்.அப்படிப்பட்ட சிம்ரன் கல்லூரியில் படிக்கும் ஆதவ் கிருஷ்ணாவை விரும்புகிறார். ஒரு புரிதலுக்குப் பிறகு அவர்களுக்குள் காதல் மலர்கிறது. ஆதவ் கிருஷ்ணாவின் பெற்றோருக்கு சிம்ரனைப் பிடித்து விடுகிறது. இந்த சூழலில் ஆதவ் கிருஷ்ணாவின் பெற்றோரை சந்தித்து, தங்களது காதலுக்கு சம்மதம் பெறும் சிம்ரன், தன்னையும், தனது தந்தையையும் விட்டு பிரிந்து சென்ற தனது தாயை சந்தித்து, தனது காதல் பற்றி தெரிவிக்க விரும்புகிறார். இதற்கு தந்தை எதிர்க்க, அவருக்கு தெரியாமல் காதலன் ஆதவ் கிருஷ்ணாவுடன் சேர்ந்து தன் தாயை காண காசிக்குச் செல்கிறார். காசியின் புனிதமான கங்கை கரையில் அவர்கள் தங்களது காதல் பயணத்தைத் தொடங்க,  இருவரும் காசியை சுற்றி பார்க்கின்றனர். இந்நிலையில் ஆதவ் கிருஷ்ணாவை தவிர்த்து தாயின் அழைப்பின்  பேரில் தனியாக செல்லும் சிம்ரன்  அங்கு எதிர்பாராத விதமாக ஒரு பயங்கர விபத்தில் சிக்கி கானாமல் போய் விடுகிறார். மறுபக்கம் காணாமல் போன காதலியை தேடும் ஆதவ் கிருஷ்ணாவும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார். அந்த சிக்கலில் இருந்து மீண்டு காதலி சிம்ரனை எப்படிக் காப்பாற்றினான்? காசியின் பின்னணியில் ஏற்பட்ட விபத்தின் மர்மம் என்ன? என்பதுதான் “எல் எஸ் எஸ் (லவ் ஷேர் சப்ஸ்கிரைப் ) படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆதவ் கிருஷ்ணா புதுமுக நடிகராக இருந்தாலும்  நம்பிக்கையோடு நடித்துள்ளார். மிதமான துள்ளல் தோற்றம் நடிப்பு என்று அந்தக் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக அவர் வெளிப்பட்டுத்தியுள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சிம்ரன், புத்துணர்ச்சியோடும், துடிதுடிப்போடும் நடித்து கவனம் ஈர்க்கிறார். காதலனிடம் மட்டும் இன்றி, அவரது பெற்றோரிடத்திலும் தன் காதலை விவரித்து சம்மதம் பெறும் காட்சிகளில் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்.

நாயகனின் பெற்றோராக நடித்திருக்கும் படவா கோபி, வினோதினி ஆகியோர் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர்,  மற்றும் ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட அனைவரும் தங்களது பணியை நிறைவாக செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார், சென்னை மற்றும் காசியை இயல்பாக படமாக்கி திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

அஸ்வமித்ரா இசையில் பாடல்கள் காதல் உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

காதல் கதையை கிரைம் சாயலுக்கு மாற்றி விறுவிறுப்பு கூட்டி இருக்கிறார் இயக்குனர் ஆர் மகாலட்சுமி முருகன்.  காதல் கதை என்றாலும், அதனுள் இருக்கும் திருப்பங்களை மிக சரியாக கையாண்டு படத்தை சுவாரஸ்யமாக  நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.காதலிக்க இருவர் மட்டும் போதாது பெற்றோர், குடும்பம், சுற்றியுள்ள சமூகம் போன்றவற்றின் பங்கு என்ன என்பதற்கான காட்சிகளும் இதில் உள்ளன. எனவே இந்தப் படத்தை இளைஞர்கள் மட்டுமல்ல பெரியோர்களும் பார்த்து ரசிக்கலாம்.

மொத்தத்தில், ‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ படம் இளைஞர்களுக்கு பிடிக்கும்.

ரேட்டிங் 3/5.