
CHENNAI:
சிட்டு எனும் துறுதுறுவான பெண் வேடத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்திருக்கிறார் அபி நட்சத்திரா.ரிஷாஜேகப்ஸும் அவருக்கு இணையாக நடித்திருக்கிறார். லலிதா எனும் மதுரைப்பெண் வேடமேற்று அதற்குத்தக்க மாறியிருக்கிறார் வி.ஜே.பார்வதி.
மிலிந்த் சோமன்,முத்துக்குமார்,சிங்கம்பு
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை, கதையின் உணர்ச்சிகளை மேலும் உயர்த்தி இந்த தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
கதை பல்வேறு பகுதிகளில் பயணித்தாலும், சிறந்த காட்சிகளுடன் வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும் வகையில் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள் மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம்.
இயக்குநர் மணிகண்டன், தனது வழக்கமான எதார்த்தமான பாணியிலேயே தனக்கான ஒரு தனியான திரை மொழி கொண்டவர் என்பதால் அந்தத் தனித்துவத்தை இந்தத் தொடரிலும் வெளிப்படுத்தி உள்ளார். இணையத் தொடருக்கான சஸ்பென்ஸுடன் திரைக்கதையை நகர்த்திச் சென்றாலும், எளிய மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகளின் மூலம் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார். ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்குகிற இடமும் முடிகிற இடமும் முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப எழுதி, விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்திக் கொண்டு போயிருப்பது கூடுதல் சிறப்பு.
மொத்தத்தில் இந்த ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸை கண்டிப்பாக பார்க்கலாம்.
ரேட்டிங் 3.5/5.