
CHENNAI:
படம்: மிஸ்டர் எக்ஸ்
நடிப்பு: ஆர்யா, கௌதம், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட், ஜெயப்ரகாஷ் இவர்களுடன் முக்கிய வேடத்தில் சரத்குமார்
தயாரிப்பு: எஸ் லட்சுமண் குமார், வினித் ஜெயின்
இசை: திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்
இயக்கம்: மனு ஆனந்த்
பிஆர்ஓ : A ஜான்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து ஒரு நியூக்ளியர் டெஸ்ட் நடத்த முயற்சிக்கின்றன. ஆனால் எதிர்பாராத பனிச்சரிவால் அந்த நியூக்ளியர் டிவைஸ் அங்கேயே காணாமல் போகிறது. இதையறிந்த எதிரி நாடுகள் அந்த டிவைஸை கைப்பற்றி அதை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த முயல்கிறார்கள். இதைப் பகிரங்கமாக சொல்ல முடியாத நிலையில் இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ரா, இதை கண்காணிப்பதற்காகவும், மீட்பதற்காகவும் அதிகாரி சரத்குமாரை நியமிக்கி
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்யா தனது கட்டுமஸ்தான உடலுடன் பிரமிப்பாக அறிமுகமாகிறார்.காதலில் உருகுவது அவருக்குக் கைவந்த கலை. இன்னும் கூடுதலாக சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
மிஸ்டர் எக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார், முற்றிலும் மாறுபட்ட தோற்றம் மாறாத கம்பீரத்துடன் வந்து வரவேற்புப் பெறுகிறார் அதே சமயம், கிளைமாக்ஸில் எதிர்பார்க்காத திருப்பத்தை ஏற்படுத்தும் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அசத்தி இருக்கிறார்.
உளவாளியாக அறிமுகமாகி வில்லனாக மிரட்டும் கெளதம் கார்த்திக், தனது உருவத்திற்கு பொருந்தாத ஒரு கதாபாத்திரத்திற்கு தன்னால் முடிந்தவரை நடிப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறார்.
ரா அமைப்பு அதிகாரியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், ரெய்சா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், அனேகா, ஜெயப்பிரகாஷ் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், யாரும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் பிரமாண்டமான லொக்கேஷன்கள் மூலம் காட்சிகளை பிரமாண்டமாக காட்டியிருக்கிறார்.
திபு நினன்தாமஸ் இசையில் ஒரு காதல் பாடல் இருக்கிறது நன்றாக இருக்கிறது. பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.
நாம் ஏற்கனவே பல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் ஸ்பை படங்களை பார்த்திருப்பதால், இதில் வரும் பல ட்விஸ்ட்களும் முன்கூட்டியே கணிக்கக்கூடியதாக தெரிகிறது. உளவுஅமைப்புகளின் செயல்பாடுகளை முன்னிறுத்தி உலக நாடுகளுக்கிடையேயான அணுஆயுதப் போட்டிகள், அணுஆயுதங்கள் ஏற்படுத்தக்கூடிய பெருந்தீமைகள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தி எழுதி இயக்கியிருக்கும் மனு ஆனந்த், இப்படத்தின் உலகத் தர தொழில்நுட்ப சாத்தியங்களை இந்த பட்ஜெட்டுக்குள் கொண்டு வந்து ஒரு முழுமையான பரபரப்பான திரில்லர் அனுபவத்தைக் கொடுத்துள்ளார்.
மொத்தத்தில், ‘மிஸ்டர்.எக்ஸ்’ திரில்லர் ரசிகர்களுக்கு விருந்து.
ரேட்டிங் 2.5/5.