“THURITHAM” REVIEW

177

கதையின் நாயகி வானதி மதுரையிலிருந்து வந்து சென்னையில் தங்கி IT யில் வேலைசெய்துகொண்டிருக்கிறார், இவரின் அப்பா மிகவும் கண்டிப்பானவர் வானதி எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதை 1 மணிக்கு ஒரு தடவை விசாரித்து கொண்டிருப்பார் , வானதி மீண்டும் மதுரைக்கே போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

கதையின் நாயகன் மாரி நாயகியை வேளைக்கு கொண்டு போய் விடும் கார் டிரைவராக இருக்கிறார் , அவருக்கு வானதி மேல் ஒருதலை காதலும் இருக்கிறது, அப்படி வானதி மதுரைக்கு செல்ல வேண்டிய ரயிலை விட்டு விடுகிறார் , பிறகு மாரியின் உதவியுடன் மதுரைக்கு செல்ல திட்டமிடும் வானதி , செல்லும் வழியில் ஒரு சிக்கலில் சிக்கி கொள்கிறார். கடைசியில் வானதி அந்த சிக்கலில் இருந்து தப்பித்து தனது அப்பாவிடம் மாட்டாமல் வீட்டிற்கு சென்றாரா ? இல்லையா ? என்பதும் நாயகன் மாரி தனது காதலை வானதியிடம் வெளிப்படுத்தினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…இந்த கதையினை இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார் இவருக்கு இது இரண்டாவது படம் ஏற்கனவே சண்டியர் என்று ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் ஈடன், கதையோடு பயணிக்கும் வேடத்தில் நாயகியாக பளிச்சிடுகிறார். கண்டிப்பான அப்பாவுக்கு பயந்து வாழ்ந்தாலும், சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆசையோடு பரிதவிக்கும் காட்சிகளில் நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பால சரவணன் வரும் காட்சிகளில் சிரிக்க முடிகிறது. நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷின் கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர் நடித்த விதமும் பெண்களை அடிமைப்படுத்துபவர்களை பிரதிபலிக்கிறது.பூ ராமின் கதாபாத்திரம் திணிக்கப்பட்டது போல் இருந்தாலும் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்த உதவுகிறது. ராம்ஸ் கதாபாத்திரம் எதிர்பார்ப்போடு பயணிப்பதால், அவர் வரும் காட்சிகள் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

நாயகியின் தோழிகளாக நடித்திருக்கும் வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா ஆகியோரது நடிப்பு அளவு.ஒளிப்பதிவாளர்கள் வாசன் மற்றும் அன்பு டென்னிஸ் இருவரது கேமராவும் நெடுஞ்சாலைகளில் கச்சிதமாக பயணித்துள்ளது. முழுக்க முழுக்க நெடுஞ்சாலையில் பயணிக்கும் கதை என்பதால் இவர்களது கேமரா வேகமாக பயணித்தாலும், காட்சிகளையும், கதபாத்திரங்களின் உணர்வுகளையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.நரேஷின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. அளவான பின்னணி இசை படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

படத்தொகுப்பாளர்கள் நாகூரான் மற்றும் சரவணன் இருவரும் எளிமையான கதையை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் தொகுத்திருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் சீனிவாசன், பயண கதையை பரபரப்பான திரைக்கதையோடும், விறுவிறுப்பான காட்சியோடும் சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்.

சாதி பிரிவினையால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் கருவாக இருந்தாலும், அதை களமாக வைத்துக்கொண்டு ஒரு பயணத்தில் ஏற்படும் ஆபத்தை மிக சுவாரஸ்யமாக சொல்லி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், வேகம் நிறைந்த நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருக்கிறது இந்த ‘துரிதம்’.

rating: 3.5/5

Thanks,