‘ரெஜினா ‘

159

 

 

சிறுவயதில் அப்பாவை அநியாயமாக இழந்து இருளில் தவிக்கும் சுனைனாவுக்கு வெளிச்சமாக ஒரு கணவர் வருகிறார். அவரும் திடீரென கொல்லப்படுகிறார். அதனால் நிலைகுலையும் சுனைனா, கணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு சட்டப்படியான முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் அம்முயற்சிகள் வீணாவதால் அவரே களமிறங்குகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான்  ‘ரெஜினா ‘ படத்தின் கதை.


ரெஜினா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சுனைனா, முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிப்பதால் அவரே டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால், அந்த வார்த்தைகளில் எந்த வித உணர்வும் இல்லாமல் ஏதோ மனப்பாடும் செய்து ஒப்பிப்பது போல் தான் இருக்கிறது. கொலை செய்யப்பட்ட கணவனை நினைத்து கதறும் காட்சிகளிலும், கணவனின் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக களத்தில் இறங்கி மிரட்டும் காட்சிகளிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

 

ரித்து மந்த்ரா, ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா, நிவாஸ் அதித்தன், பாவா செல்லதுரை, தீனா, கஜராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை முழுமையாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் பவி கே.பவன், படம் முழுவதையும் ஆக்‌ஷன் உணர்வோடு பயணிக்க வைத்திருக்கிறார்.

 

சதிஷ் நாயரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது.

 

படத்தொகுப்பாளர் டோபி ஜான் காட்சிகளை வேகமாக நகர்த்தினாலும், ஏதோ பெரிய படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் டோமின் டி சில்வா, வழக்கமான ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் கதையை நாயகியை மையப்படுத்தி சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், வழக்கமான பழிவாங்கும் கதையை அதே பழைய பார்முலாவில் பார்க்க வைக்கிறது இந்த ‘ரெஜினா’

 

 

RATING: 2/5

 

THANKS,