
இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பாபா பிளாக் ஷீப். இந்த படத்தில் அம்மு அபிராமி, போஸ் வெங்கட், அபிராமி, வினோதினி,ஜி பி முத்து, வெங்கட், விக்னேஷ்காந்த், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், அதிர்ச்சி அருண், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெளியாகி இருக்கும் பாபா பிளாக் ஷீப் படம் ரசிகர்கள் மதியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.