“ஜவான்” திரை விமர்சனம்!

150

 

பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள இயக்குனர் அட்லி முதன் முதலில் இயக்கியுள்ள படம் “ஜவான்” . ஷாருக்கான் கதாவாக நடிக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முதன்மை ரோலில் நடித்துள்ளனர்.

ஆற்றில் அடிபட்டு மிதந்துவரும் விக்ரம் ரத்தோரை (ஷாருக்கான்) பார்டரில் உள்ள மக்கள் மீட்டு காப்பாற்றுகின்றனர் . அந்த ஊரை தீவிரவாதிகள் தாக்குகின்றனர் அவர்களிடம் ஆவேசமாக மோதி மக்களை காப்பாற்றுகிறார் விக்ரம். திடீரென்று விவசாய அமைச்சரை கடத்தும்  விக்ரம் அவரை விடுவிக்க 40 ஆயிரம் கோடி கேட்கிறார். அந்த பணத்தை ஆயுதம் தயாரிக்கும் தொழில் அதிபர் காளியிடமிருந்து (விஜய சேதுபதி)  அதிகாரிகள் பெற்றுத் தருகின்றனர். அடுத்த  நொடி அந்த பணம் மூலம் ஏழை விவசாயி களின் கடன் அடைக்கப்படுகிறது. விக்ரமை பிடிக்க நர்மதா ராய் ( நயன்தாரா)  படைகளுடன் விரைகி றார். விக்ரமை சுற்றி வளைத்தும் அவரைப் பிடிக்க முடியவில்லை. இதுபோல் மேலும் சில அதிரடிக ளை நடத்தும்  விக்ரம் யார் என்பதை கண்டுபிடிக்க நர்மதா ஒரு கைதியாக சிறைக்கு செல்கிறார். அங்குதான் விக்ரமுக்கு உதவும் அதிரடி பெண்கள் 6 பேர் இருக்கின்றனர். அவர்களிடம் விக்ரம் பற்றிய  உண்மைகளை  கேட்ட.றிகிறார். அதன் பிறகு நடப்பது என்ன? விக்ரமுக்கும் , காளிக்கும் இடையே இருக்கும் விரோதம் என்ன என்பதற்கு படம் ஆக்ஷன் கலக்கலுடன் பதில் அளிக்கிறது.

விஜய் நடித்த  தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கிய அட்லி முதன்முறையாக இந்திக்கு சென்று இந்தி கிங்காங் ஷாருக் கானை வைத்து ஜவான் படத்தை. இயக்கியிருக்கிறார். கமர்ஷிய லாக ரசிகர்களுக்கு எவ்வளவு ஆக்ஷன் தீனி போட.முடியுமோ அவ்வளவும் போட்டிருக்கிறார் இயக்குனர்.

விக்ரம் ரத்தோர் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் ஆக்ரோஷ ஹீரோ வாக அதிரடி காட்டுகிறார்.  தீவிர வாதிகளை தாக்கி அழிக்கச் செல்லும் ஷாருக்கான் படையினர் திடீரென்று கையில் வைத்தி ருக்கும் மிஷின் கன் வேலை செய்யாமல் போய்விட சாதுர்யமாக மோதி தீவிரவாதிகளை அழிக்கும் ஷாருக் பின்னர் துப்பாக்கிகள் சரியான நேரத்தில் சுடாமல் போனதுபற்றி  ராணுவ கோர்ட்டில் புகார் அளிக்க அவர்கள் துப்பாக்கி தயாரித்த தொழில் அதிபர் விஜய் சேதுபதியை அழைத்து விசாரித்து கம்பெனியின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதும் அந்த கோபத்தில் ஷாருக்கை விஜய்சேதுபதி பழி வாங்கி சுட்டு தள்ளுவதும் அதிர்ச்சி.

தொடக்கத்திலேயே ரயிலில் “பாட்டு பாடவா பாடம் சொல்லவா” பாடல்பாடி மினிஸ்டரிடம் ஷாருக் பணம் கறக்கும் பரபரப்பு  ஒருபுறம் இருந்தாலும் பாட்டு பாடவா பாடலுக்கு ஷாருக் போடும் அந்த அழகான  ஸ்டெப்ஸ் கண்களிலேயே நிற்கிறது.

ஜெயிலர் ஆசாத் என்ற மற்றொரு இளமை தோற்றத்திலும் ஷாருக் நடித்து கவர்கிறார். படத்தில் ஷாருக் மட்டும்தான் இந்தி ஹீரோ மற்ற எல்லா நட்சத்திரங்களுமே  தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான முகங்களே. குறிப்பாக காளியாக விஜய் சேதுபதி வில்லத்தனத்தில் தனது வழக்கமான முத்திரையை பதித்து அசத்துகிறார்.ஷாருக்,

விஜய் சேதுபதி இரு ஆவேசங்கள் மோதிக்கொள் வதற்கே  சீன்கள் பறந்து விடுவ தால் நயன்தாராவுக்கு பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. தீபிகா படுகோன் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக வந்து போகிறார்.

 

10 வருடமாக ஆட்சியிலிருந்தும் மக்களுக்கும்,  அரசு மருத்துவ மனைகளுக்கும் அரசாங்கம்  ஒன்றும் நல்லது செய்யவில்லை என்று ஷாருக் பேசும் வசனங்கள்  மத்திய ஆட்சியை நேரடியாக தாக்கி  அதிரவிட்டிருக்கிறது.

ஜவான் இந்தி டப்பிங் என்றாலும் அந்த உணர்வே வராமல் நேரடி தமிழ் படத்தை பார்த்ததுப்போல காட்சிகளை இயக்குனர் அட்லி அமைத்திருப்பது பிளஸ்.

அனிருத் ஆட்டம் போட வைக்கும் இசை அமைத்திருக்கிறார். ஆனால் ஷாருக் போட்டிருக்கும் ஆட்டம் அளவுக்கு நயன்தாரா,  தீபிகாவை நடனத்துக்கு அட்லி பயன்படுத்தாது ஏனோ.

ஜி.கே விஷ்ணு கேமிரா பிரமாண்டத்தை காட்டியிருக்கிறது.

 

ரேட்டிங் 4/5