
படம்: ‘அங்காரகன்’
நடிப்பு: ஶ்ரீபதி, நியா , மகேஷ், அப்புகுட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் இவர்களுடன் நெகடிவ் வேடத்தில் சத்யராஜ்
தயாரிப்பு: ஜூலியன் அண்ட்.ஜெரோம் இண்டர்நேஷனல்
இசை: கு.கார்த்திக்
ஒளிப்பதிவு இயக்கம்: மோகன் தச்சு
பி ஆர் ஒ: ஏ.ஜான்
குறிஞ்சி மலை காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடியினர் பிரிட்டி ஷாருக்கு பயப்படாமல் அவர்களை எதிர்க்கின்றனர். அந்த இடத்தை பிடித்த ராணி, மக்களை தாக்கி அழித்து கைவசப்படுத்து கிறார்.ஒரு கட்டத்தில் அந்த ராணி எரிக்கப்படுகிறார். அந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட இங்குள்ள ரிசார்ட் ஒன்று தற்போது வாடிக்கையாளர் யாருமின்றி மூடும் நிலைக்கு செல்கிறது. அதற்கு மேனேஜர் பொறுப்பு ஏற்று நிர்வகிக்கிறார் சிவா ( மகேஷ்). சில வாடிக்கையா ளர்கள் வருகின்றனர். கொண்டாட்டம் ஒன்றுக்காக மூடப்பட்டிருந்த ராணி அறை திறக்கப்படுகிறது. அதன் பிறகு அமானுஷ்யங்கள் நடக்கிறது. இரண்டு பெண்கள் காணாமல். போகின்றனர். அதுபற்றி விசாரிக்க போலீஸ் அதிகாரி அதிவீரபாண்டியன் (சத்யராஜ்) வருகிறார். அமானுஷ்யம், போலீஸ் விசாரணையில் திருப்பங்கள் என பல நிகழ்வுகள் அரங்கேற்கின்றன அதன் முடிவு எதிர்பாராத திருப்பமாக அமை கிறது அது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
சமீபத்திய படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த சத்யராஜ் இப்படத்தில் தனது ஆரம்ப கட்ட வேடமான வில்லன் வேடத்துக்கு மாறியிருப்பது பழைய நினைவுகளை கண்முன் கொண்டு வருகிறது. போலீசாக வந்தாலும் அவர் வில்லனாக கிளைமாக்சில் மாறுவது ஷாக்.
மலைப்பகுதி ஓட்டல் ரிசார்ட் கதையென்றாலே அங்கு அமானுஷ்யத்துக்கு குறையிருக் காது. இதிலும் அப்படித்தான் எரிந்த முகத்துடன் வரும் பேய் அடிக்கடி தோன்றி பயமுறுத்து. கிறது.
ஹீரோ ஶ்ரீபதி, மனைவி மீது சந்தே கப்படுபவராக வந்து எந்நேரமும் குடித்துவிட்டு தன் மனைவியிடம் பேச முயலும்.மற்றொரு வாலிபரை கழுவி கழுவி ஊற்றுகிறார். ஹீரோ என்பதால் நடனமும் ஆடுகிறார். டூயட்டும் உண்டு. குடிக்கு அலைப வராக காட்டியதற்கு பதில் அவரது வேடத்தை இன்னமும் பெருகேற்றி யிருந்தால் அவரது நடிப்பில் வேறு பரிமாணம் கிடைத்திருக்கலாம். ஆனாலும் கிளைமாக்சில் அங்காரகன் பேயாக மிரட்டுகிறார்.
குடிகாரனாக இருந்தாலும் கணவரை விட்டுக்கொடுக்காத மனைவியாக வரும் நியா சில இடங்களில் கவர்ச்சி காட்டி கிளுகிளுப்பு ஏற்படுத்துகிறார். ரெய்னா காரத் வெள்ளைக்கார ராணியாக வந்து ஸ்கோர் செய்கிறார்.
ஜூலியன் அண்ட்.ஜெரோம் இண்டர்நேஷனல் தயாரித்தி ருக்கிறது
கு.கார்த்திக் பாடல் எழுதி இசை அமைப்பாளராக அறிமுகமாகி யிருக்கிறார்.
ஒளிப்பதிவு இயக்கம் என இரு பணிகளை மோகன் தச்சு கையாண்டிருக்கிறார். இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் பெண்கள், ரிசார்ட்டில் கைபந்தா டுவது, பந்தை தேடி இருளுக்குள் செல்வதெல்லாம் திக் திக் காட்சிகள். திரைக்கதையில் இன்னமும் கவனம் செலுத்தியி ருந்தால் காட்சிகள் வேற லெவலுக்கு சென்றிருக்கும்.