“சந்திரமுகி 2” திரைப்பட விமர்சனம்!

158

 

 

நடிகர் & நடிகைகள் :- ராகவா லாரன்ஸ்,கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ராவ் ரமேஸ், சுரேஷ் மேனன், விக்னேஷ், Y.G மகேந்திரன், ரவி மரியா, சுருஷ்டி டாங்கே, சுபீக்ஷா, சாய் ஐயப்பன், சத்ரூ, கார்த்திக் சீனிவாசன், C.ரங்கநாதன், தேவி, பாவனா, பேபி மானஸ்வி, மாஸ்டர் சஞ்ஜீவ், மாஸ்டர் தர்சித், பேபி தீக்ஷா, மற்றும் பலர் நடித்திருக்கிறனர்.

எழுத்து & இயக்கம் :- பி.வாசு.

ஒளிப்பதிவாளர் :- ஆர்.டி ராஜசேகர்.

படத்தொகுப்பு :- ஆண்டனி.

இசையமைப்பாளர் :- எம்.எம. கீரவாணி.

 

ராதிகா மற்றும் குடும்பத்தாருக்கு தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இதற்கு காரணம் குலதெய்வத்தை வழிபடாதது தான் என்று சாமியார் ஒருவர் சொல்கிறார். அதன்படி குலதெய்வத்தை வழிபடுவதற்காக ராதிகா மற்றும் குடும்பத்தார் வேட்டையபுரத்திற்கு செல்கிறார்கள். காதல் திருமணத்தால் ராதிகாவை விட்டு பிரிந்த அவரது மகளின் பிள்ளைகளும், அவர்களின் பாதுகாப்பாளரான ராகவா லாரன்ஸும் அவர்களுடன் வேட்டையபுரத்திற்கு செல்கிறார்கள். அவர்களுடைய குலதெய்வ கோவில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் இருக்கிறது. கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இறந்து விடுவதோடு, அந்த கோவிலில் வெளிச்சம் வருவதற்கு சந்திரமுகி விடமாட்டாள், மீறி முயற்சித்தால் மரணம் தான், என்று சாமியார் ஒருவர் எச்சரிக்கிறார். குலதெய்வ கோவிலில் பூஜை செய்தால் மட்டுமே குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும் என்பதால் எப்படியாவது பூஜை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ராதிகா குடும்பத்தாருக்கு ராகவா லாரன்ஸ் உதவ முன் வருகிறார். தனி ஒருவராக கோவிலை சுத்தப்படுத்த ராகவா லாரன்ஸ் கிளம்ப, அதன் பிறகு என்னவெல்லாம் கிளம்பியது, அதனால் ராதிகா குடும்பத்தார் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவற்றில் இருந்து அவர்களை ராகவா லாரன்ஸ் எப்படி காப்பாற்றுகிறார், என்ற ரீதியில் கதை நகர்கிறது.

 

கதாநாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாப்பத்திரத்தில் வீரத்தையும், பாண்டியன் கதாப்பத்திரத்தில் காமெடியையும் தனக்கே உரிய பாணியில் நடனம், ரொமான்ஸ் என அருமையாக நடிப்பில் கலக்கி இருக்கிறார். ஏற்கனவே இப்படிப்பட்ட படங்களில் நடித்துள்ளதால் வேட்டையன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவகையில் ஆக்ஷன், விறுவிறு நடை, கூர்மையான பார்வை என்று செங்கோட்டையன் எவ்வாறு வேட்டையனாக மாறும் தோற்றம் என்று அசத்தலுடன் நடித்துள்ளார்.

 

இந்த ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் கதாநாயகியாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். தேசிய விருது வென்ற இந்தி நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகியாக அழகிலும், நடனத்திலும் வசீகரிக்கிறார். சந்திரமுகி பயந்த சுபாவம் கொண்டவளை ஆக்ரோஷ மங்கையாக மாறுவதும், இவரின் அழகில் மயங்கி அடையத் துடிக்கும் வேட்டையனை எவ்வாறு எதிர் கொண்டு பழி வாங்குகிறார் என்பதை துள்ளும் நடனத்திலும், சண்டைக் காட்சிகளிலும் சரி நிகரான பங்களிப்பு  செய்து நடித்திருக்கிறார்.

 

லட்சுமி மேனன் பாவமாக வந்து சந்திரமுகியின் ஆத்மா தன்து உடம்பில் புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி அசர வைத்து இருக்கிறார்.

 

பணிப்பெண்ணாக வரும் மகிமா நம்பியார் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

 

துணிச்சலான பெண்ணாக வரும் சுபிக்ஷா நடிப்பு சிறப்பு.

 

ராதிகா சரத்குமார் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

 

சிருஷ்டி டாங்கே, ரவி மரியா, விக்னேஷ், ராவ் ரமேஸ், Y.G மகேந்திரன், சாய் ஐயப்பன், சத்ரூ, கார்த்திக் சீனிவாசன், C.ரங்கநாதன், தேவி, பாவனா, பேபி மானஸ்வி, மாஸ்டர் சஞ்ஜீவ், மாஸ்டர் தர்சித், பேபி தீக்ஷா உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

 

குறிப்பாக கதாநாயகன் ராகவா லாரன்ஸ் உடன் வடிவேலு பேசும் காட்சியில் திரையரங்குகளில் ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.. ‘சந்திரமுகி 2’  திரைப்படத்திற்கு பெரிய பலம் வடிவேலுவின் நடிப்பு.

 

ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு புதுமையாகவும் கலர்புல்லாகவும் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக அமைந்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் ஆண்டனியின் படத்தொகுப்பு பரபரப்பாகும் விறுவிறுப்பாகவும் கொடுத்து இருக்கிறது.

 

இசையமைப்பாளர் ஆஸ்கர் நாயகன் எம் எம் கீரவாணியின் இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.  பின்னணி இசையும் மிகப்பெரிய அளவில் ரசிக்க வைக்கிறது.

 

சந்திரமுகி முதல் பாகத்தில் இருந்த அரண்மனையில் ராதிகா மற்றும் குடும்பத்தினர் சென்ற பிறகு சந்திரமுகி ஆத்மாவால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி.வாசு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முதல் பாகத்தில் எவ்வளவு அருமையாக  சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாக இருந்ததோ அதேபோல் இரண்டாம் பாகத்தையும் ராகவா லாரன்ஸ் வைத்து மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

 

மொத்தத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சுவாரஸ்யம்தான்!

 

ரேட்டிங் 3.5/5