“தி ரோடு” – திரைவிமர்சனம்

159

 

சென்னை:

திரிஷா, “டான்சிங் ரோஸ்” ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, M.S. பாஸ்கர், வேலராமமூர்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அருண் வசீகரனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “தி ரோட்”.இப்படத்திற்கு கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

திரிஷா, சந்தோஷ் பிரதாப் ஜோடிக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இரண்டாவது கர்ப்பமடைகிறார் திரிஷா. தனது மகன் பிறந்தநாளுக்காக சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு காரில் பயணப்படுகின்றனர் சந்தோஷ் பிரதாப்பும் அவரது மகனும்.

மதுரை அருகே செல்லும் வழியில் எதிரில் வந்த கார் நிலை தடுமாறி, சந்தோஷ் பிரதாப் வரும் வழியில் வந்து மிகப்பெரும் விபத்தை ஏற்படுத்திவிடுகிறது. இந்த விபத்தில் சந்தோஷ் பிரதாப்பும் அவரது மகனும் இறந்துவிடுகின்றனர்.

இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் திரிஷாவிற்கு கர்ப்பமும் கலைந்துவிடுகிறது. தனிமரமாக நிற்கதியாக நிற்கிறார் திரிஷா. தனது கணவர் இறந்த இடத்திற்குச் செல்லும் போது சிறிதாக ஒரு சந்தேகம் எழுகிறது. கணவன் மற்றும் தனது செல்ல மகன் இருவரும் விபத்தில் மரணம் அடைந்த துக்கம் தாங்க முடியாமல் தவிக்கும் கதாநாயகி திரிஷா, விபத்து நடந்த பகுதியை பார்வையிடும் போது அங்கே அவருடைய கண் முன் ஒரு விபத்து நடக்கிறது.

கண் முன் நடந்த விபத்தில் சிக்கியவரை கதாநாயகி திரிஷா காப்பாற்ற முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளான கார் மற்றும் அதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபர் திடீரென்று மாயமாகி விடுகிறது. இந்த விபத்து பற்றி கதாநாயகி திரிஷா அந்த ஊரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்த இடத்தை காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடும் போது விபத்து நடந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் அங்கு காணப்படவில்லை.

அதிர்ச்சியாகும் கதாநாயகி திரிஷா, விபத்து நடந்த இடத்தில் எதுவும் இல்லாததால் அந்த இடத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதை உணர்வதோடு, அடிக்கடி விபத்து நடக்கும் இடமாக இருக்கிறது. அதன் பின்னணியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

அங்கு என்ன நடக்கிறது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.

இந்த தி ரோடு திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். கதாநாயகி திரிஷா வை 10 வயது சிறுவனுக்கு தாய் என்றால் ரசிகர்களால் நம்ப முடியவில்லை. கதாநாயகி திரிஷாவின் கணவராக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், ஒரு சில காட்சிகள் வந்தாலும் தனது வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்.

இந்த தி ரோடு திரைப்படத்தில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டான்சிங் ரோஸ் ஷபீர், நடிப்பில் மிரட்டுகிறார். கதாநாயகி திரிஷாவின் தோழியாக வரும் மியா ஜார்ஜ், மிக அருமையாக நடித்திருக்கிறார்.

மியா ஜார்ஜ் கணவராக வரும் விவேக் பிரசன்னா, கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார். கான்ஸ்டேபிளாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார். டான்சிங் ரோஸ் ஷபீர் தந்தையாக வரும் வேல ராமமூர்த்தி மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் மட்டும் அனைத்து கதாபாத்திரங்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கே.ஜி. வெங்கடேஷ் இரவு நேரக் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, விபத்து காட்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தி அருமையாக அசத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.

பின்னணி இசை பேர் சொல்லாமலேயே சாம்.சி.எஸ் இசை என்று சொல்லும் அளவுக்கு வழக்கமான சத்தத்துடன் பயணித்திருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்களை மையமாக வைத்து இயக்குநர் அருண் வசீகரன் கதை மற்றும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், அதில் இருக்கும் சஸ்பென்ஸை அவர் ஆரம்பத்திலேயே திரைப்படம் பார்ப்போம் ரசிகர்களுக்கு புரியும் வகையில் காட்சிகளை நகர்த்தியிருப்பது திரைப்படத்தை தொய்வடைய செய்கிறது.

மொத்தத்தில், ‘தி ரோட்’ திரைப்படம் மர்மம் நிறைந்த படம்.

 

ரேட்டிங் 3.5/5