
படம் ரூட் நம்பர் 17
நடிப்பு: ஜித்தன் ரமேஷ், அஞ்சு ஓன்டியா, ஹரிஷ் பெராடி, டாக்டர் அமர் ராமச்சந்திரன், ஜெனிபர், மாஸ்டர் நிஹால், டிட்டுஸ் ஆப்ரகாம், பெரோலிக் ஜார்ஜ், அகில் பிரபாகர்
தயாரிப்பு: நேநி என்டர்டெயின் மென்ட் அமர் ராமச்சந்திரன்
இசை:அவுசி பச்சான்
ஒளிப்பதிவு: பிரசாந்த் பிரணவம்
இயக்கம்: அபிலாஷ் ஜி தேவன்
பி ஆர் ஒ: ஏ.ஜான்.
முன்னாள் அமைச்சர் ஹரிஷ் பெராடியின் மகன் கார்த்திக். இவரது காதலி அஞ்சு. இருவரும் ஒரு காரில் காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்களை, ஜித்தன் ரமேஷ் கடத்துகிறார். ஒரு பாதாள அறையில் வைத்து கொடுமை செய்கிறார். இந்த சூழலில் காணாமல் போன காதல் ஜோடியை தேடி, காவல்துறை களம் இறங்குகிறது. அப்போதுதான், அந்த காட்டுப் பகுதியில் இதுபோல் பல மர்ம சம்பவங்கள் நடந்திருப்பது தெரிய வருகிறது. அந்தக் கடத்தலைச் செய்வது ஜித்தன் ரமேஷ் என்பது தெரியாத சூழ்நிலையில் அந்த பகுதிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த காதல் ஜோடியை தேடி வருகிறார். அவரையும் மர்ம மனிதன் கடத்து கிறான். இந்த விஷயத்தில் புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் ஆர்வம் காட்டாததால் போலீஸ் கான்ஸ்டபிள் களத்தில் இறங்கி காணாமல்போனவர்களை மீட்க போராடுகிறார். அவரால் அவர் களை மீட்க முடிந்ததா? மர்ம மனிதனின் கதி என்ன? என்ற கேள்விகளுக்கு “ரூட் நம்பர் 17” படம் பதில் அளிக் கிறது
ஜித்தன் ரமேஷ் என்றால் ஜித்தன் படத்தில் அப்பாவியாக நடித்த முகம்தான் நினைவுக்கு வரும். அதை முற்றிலும் மறக்கச் செய்யும் விதமாக இப்படத்தில் அவர் தோற்றம் அமைந்திருக்கிறது. தோற்றத்திற்கேற்ற முரட்டுத்தனத்தை நடிப்பிலும் காட்டி வியக்க வைத்திருக்கிறார்.அவர் மாற்றத்திற்கான காரணத்தைச் சொல்லும் கதையில் அவரா இவர்? என்று ஆச்சரியப்படுமளவுக்கு வேறு தோற்றம் வேறு நடிப்பு என மாறி நிற்கிறார்.
நாயகியைப் பார்த்தால் சந்தோசம் வரவேண்டும் இப்பட நாயகி அஞ்சுவைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டியிருக்கிறது.காட்டிலும் சேற்றிலும் புரட்டி அடித்திருக்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் வேடத்தில் கச்சிதமாக இருக்கிறார் ஹரிஷ்பெரேடி. காவல்துறை அதிகாரியாக வரும் அமர் இராமச்சந்திரன் விறைப்புடன் இருக்கிறார். உடன்வரும் அருவிமதன் நேர்த்தியான நடிப்பு அனைவரையும் கவர்கிறது..
ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவம், வனப்பகுதி மற்றும் பாதாள அறைக் காட்சிகளைப் படபடப்புடன் பார்க்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அவுசப்பச்சன், மிகுந்த அனுபவஸ்தர் என்பதை பாடல் மூலம் காட்டியிருக்கிறார். கதைக்குத் தேவையான அளவு பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார்.
அபிலாஷ் ஜி.தேவன் எழுதி இயக்கியிருக்கிறார். யூகிக்கக்கூடிய கதை என்றாலும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சியமைப்புகளில் வேறுபாடு காட்டி, படத்தை எடுத்துக் கொண்ட பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5