லால் சலாம் திரைப்பட விமர்சனம்!

162

 

லால் சலாம் கதை: கிரிக்கெட், மதம், அரசியல், ஊரில் நடக்கும் தேர் திருவிழா, ஊருக்குள் நடக்கும் மதக்கலவரம், அதன் மூலம் நடத்தப்படும் மதநல்லிணக்க பாடம் என இந்த கதையை உருவாக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இடையே ஏற்படும் மோதல் குறித்து வலுவான காட்சி அமைப்புகள் இல்லாதது கதையில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இஸ்லாமியரான விக்ராந்த் மீது இந்து மதத்தை சேர்ந்த விஷ்ணு விஷால் கோபம் கொள்வது போன்ற காட்சிகள் குறியீடாக வைக்கப்பட்டது போலவே தெரிந்தாலும், அதில் சரியான அழுத்தம் இல்லாதது போன்றே திரையில் தெரிகிறது.
சிறு வயதில் இருந்தே விஷ்ணு விஷாலுக்கும் விக்ராந்துக்கும் ஆகாத நிலையில், விக்ராந்த் தனக்கு எதிராக ஆடுவது விஷ்ணு விஷலுக்கு பிடிக்கவில்லை. இவர்களுக்குள் நடக்கும் சண்டையை சிலர் பயன்படுத்தி பிரச்சனையை பெரிதுபடுத்த முயலும் போது, தனது மகனுக்கு எதிராக விஷ்ணு விஷால் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் அதே பிரச்சனையுடன் ஊர் மக்கள் ஏன் சண்டை போடுகின்றனர். இது தப்பாச்சே என மொய்தீன் பாய் பாடம் நடத்துவது தான் இந்த படத்தின் கதை.

 

ரேட்டிங் 3.5/5