“லவ்வர்” திரைப்பட விமர்சனம்!

149

 

 

சென்னை:

மில்லியன் டாலர்  ஸ்டுடியோஸ், எம் ஆர் பை என்டர்டெயின்மென்ட் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம்தான் “லவ்வர்” இப்படத்தில் மணிகண்டன்,   ஶ்ரீ  கவுரி பிரியா,  கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார்,  ரினி நிகிலா, அருணாசலேஸ்வரன் ம்ற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்க்கு பிரபு ராம் வியாஸ் கதை எழுதி இயக்கி இருக்கிறார்,

ஆறு வருடங்களாக நாயகன் மணிகண்டன் ஐடி கம்பெனியில் பணி புரியும் நாயகி ஸ்ரீ கௌரி பிரியாவை மனதார காதலிக்கிறார். இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடக்கிறது. டிசைனராக வேலை செய்யும் மணிகண்டன் ஒரு கட்டத்தில் உணவகம் வைக்கும் முயற்சியில் இறங்க இருக்கும் வேலையும் பறி போகிறது.

இதற்கிடையில் விரக்தியான வாழ்க்கையின் வலியை தன் காதலி மீது காண்பித்து அடிக்கடி போதையில் கோபமடையும் மணிகண்டன் பிரட்சனை ஓய்ந்தவுடன் மன்னிப்பு கேட்டு மீண்டும் சரணடைகிறார்.

இந்நிலையில் ஸ்ரீகௌரி பிரியா மணிகண்டனிடம் சொல்லாமல்

நண்பர்களுடன் வெளியூர் பயணம் ஜாலியாக செல்ல ஒரு கட்டத்தில் மணிகண்டனுக்கு உ ண்மை தெரிந்துவிடுகிறது.

மீண்டும் தொடர்ந்து போதையில் கோபமடைவதும் பின் மன்னிப்பு கேட்பதுமாக மனரீதியாக பிரச்சனை தொடர்வதால் காதலை வெறுத்து மணிகண்டனை பிரிந்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் ஸ்ரீ கௌரி பிரியா. தாம்பத்திய உறவுடன் கலந்த காதல் வாழ்க்கையுடன் வாழ்ந்து வந்த மணிகண்டனால் காதல் முறிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் மீண்டும் காதலியை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார் மணிகண்டன். கடைசியில் வழக்கம் போல் மணிகண்டனை மன்னித்து மீண்டும் காதல் வாழ்க்கையில் ஸ்ரீ கௌரி பிரியா இணைந்தாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘லவ்வர்’

வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல், சுய நம்பிக்கை இழந்து ‘பொசசிவ்னஸ்’ என்ற பெயரில் தன்னுடைய கட்டுப்பாட்டில் காதலி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காதல், சண்டை, எச்சரிக்கை, அழுகை, பிரிவு, ஏமாற்றம், அவ்வப்போது வெடிக்கும் கோபம் என அனைத்தும் உடல் மொழி, டயலாக் டெலிவரி மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் மணிகண்டன். என்ன ஒரு குறை என்றால் அவருடைய நடிப்பு அப்படியோ விஜய்சேதுபதியை பிரதிபலிக்கிறது. மேலும் படம் முழுக்க குடி மற்றும் புகை பிடிக்கும் காட்சிகள் 95 சதவீதம் உள்ளது. அதை மணிகண்டன் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

‘பொசசிவ்னஸ்’ என்ற பெயரில் தன்னை தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கும் காதலன் அருணை அவ்வப்போது மன்னித்து அவன் மீது அன்பு வைத்தால், தனக்கு விருப்பமானதை செய்ய ‘சுதந்திர’மான உலகைத் தேடும் திவ்யா கதாபாத்திரத்தில் ஸ்ரீ கௌரி பிரியா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி கண்களால் பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

மதன் அடக்கமான கதாபாத்தில் கண்ணா ரவி நேர்த்தியான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார். அழுத்தம் இல்லாத கதாபாத்திரத்தில் சரவணனின் பங்களிப்பு வீணடிக்கப்பட்ட உள்ளது.

கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், அருணாச்சலேஸ்வரன்.பா ஆகியோரின் கதாபாத்திரங்கள் கதையோடு ‘எங்கேஜிங்’ ஆகி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

 ஸ்ரேயாஸ் கிருஷ்ணா – அழகிய காட்சி கோணங்களுடன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். .

ஷான் ரோல்டன் பிண்ணனி இசை -ஈர்ப்பு மற்றும் இசையில் பாடல்கள் பரவாயில்லை.

இன்றைய காலகட்டத்தின் காதல், குறிப்பாக ஐடி உலகத்தில் குடி மற்றும் புகை பழக்கத்தின் கும்மாளம் போடும் கூட்டம், அதில் ஒரு சிலருக்கு ஏற்படும் காதல், அதன் பின் காதலி அவர்கள் ஆண் நண்பர்களுடன் சகஜமாக பழகும் போது காதலனுக்கு ‘பொசசிவ்னஸ்’ வினால் காதலி மீது ஏற்படும் சந்தேகத்தால் ஏற்படும் மன உளச்சள் விளைவு என்ன என்பதை திரைக்கதை அமைத்து படைத்துள்ளார். இயக்குனர் பிரபு ராம் வியாஸ். அதே நேரத்தில் திரைக்கதையில் க்ளைமாக்ஸில் நாயகன் நாயகி மீண்டும் சந்தித்து செல்லும் காட்சியை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம்.

மொத்தத்தில் நஸிரத் பசிலியன்மகேஷ் ராஜ் பசிலியன்யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள ‘லவ்வர்’ இளைஞர்களை கவர்ந்து இழுக்கும்.

 

 

ரேட்டிங் 3.5/5