
சென்னை:
திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பவர் பொன் முருகேசன். இவர் பிரபல கதாசிரியரும், பத்திரிக்கையாளரும் கூட… இவர் நூறறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி முடித்து நூறாவது நூல் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்களால் வெளியிட மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார். தற்போது இவர் பொன் முகில் என்ற பெயரில் சோஸியல் மீடியாவில் நிறைய படைப்புக்களை படைத்து வருகிறார். இவரது படைப்புக்களில் குறிப்பிட்டு சொல்லும் படியான ‘வடிவேல்- பார்த்திபன்’ காமெடி அதாவது திரைப்படங்களில் வராத இவருடைய சொந்த கற்பனையில் உருவாகும் காமெடி இதுவரை 300 எபிசோடுகளுக்கு மேல் யூடிப்பில் பதிவு செய்திருக்கிறார்.
தவிர காதல் எனும் ‘நூடுல்ஸ்’ தொடர் அதாவது இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும் ஒரு சீரியல் அது. தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இவற்றை தொடர்ந்து தற்போது பிப்ரவரி 14 வரும் காதலர் தினத்தன்று ‘சிக்னல்’ எனும் ஒரு மினி சீரியலை பதிவு செய்ய காத்திருக்கிறார். வாய் பேசாத காது கேளாத ஒரு ஆண் பெண் இருவரது உணர்வுபூர்வமான காதல்தான் இந்த ‘சிக்னல்’ வசனங்கள் ஏதும் இன்றி இசையாலேயே அனைவரது மனதை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் வித்தியாசமான இந்த ‘சிக்னல்’ மினி சீரியல் அவரது பொன் முகில் யூடியூப் சேனலில் பிப்ரவரி 14 அன்று தொடங்க இருக்கிறது. இவர் யூடியூப் சேனல் தொடங்கிய இந்த 14 மாதங்களில் மூன்று லட்சத்திற்கு மேல் பார்வையாளர்களையும், ஆயிரத்திற்கு மேல் சந்தாதாரர்களையும் ஈர்த்துள்ளார்.
இவரிடம் ‘திரைத்துறைக்கு முயற்சித்து வரும் நீங்கள் ஏன் சோசியல் மீடியாவில் முழு பிசியாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது,
‘சினிமாவிற்கான ஒரு மிகப்பெரிய பிளாட்பார்மாக இன்றைக்கு சோசியல் மீடியா விளங்குகிறது. நமது திறமைகளை எதில் வெளிப்படுத்தினால் என்ன? அது சரியான ஆட்களுக்கு போய் சேர்ந்தாலே வெற்றி நம்மை தேடி வரும் என்று மிக அழகாக ரத்தின சுருக்கமாக முடித்துக் கொண்டார்’. உண்மைதானே! முன்பு நம் திறமைகளை பல சினிமா கம்பெனிகளில் தேடி தேடி போய் சொல்ல வேண்டி இருக்கும். ஆனால் இந்த சோசியல் மீடியாவில் உங்கள் பதிவு நன்றாக இருக்குமாயின் அது பல்லாயிரக் கணக்கானவர்களை போய் சென்றடையும். அப்படித்தான் பொன்முகிலின் படைப்புகளும் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. மிக விரைவில் ஏதாவது அவரது படைப்பு ஒன்று திரைப்படமாகும் என்கிற ஆர்வத்தில் பதிவிட்டு வருகிறார். பொன்முகிலின் முயற்சியை நாமும் பாராட்டுவோம். ‘சிக்னல்’ தொடரை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். இது ஒரு புது அனுபவமாக சோசியல் மீடியாவை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் என்பது பொன்முகிலின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவரது நம்பிக்கையை நாமும் பாராட்டுவோம்..