வித்தைக்காரன்’ திரைப்பட விமர்சனம்

134

 

Chennai:

நடிகர் & நடிகைகள் :- சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா, ஜான் விஜய், பாவெல் நவகீதன், ஜப்பான் குமார், மாரிமுத்து, சாம்ஸ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வெங்கி.

ஒளிப்பதிவாளர் :- யுவ கார்த்திக்.

படத்தொகுப்பாளர் :- அருள் இளங்கோ சித்தார்த்.

இசையமைப்பாளர் :- விபிஆர்.

தயாரிப்பு நிறுவனம் :- ஒயிட் கார்பெட் பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- கே.விஜய் பாண்டி.

ஏமாற்றுவது தவறல்ல, ஏமாற்றப்படுவதுதான் தவறு என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் தான் கதாநாயகன் சதீஷ். ஒரு மேஜிக் மேனான இவர் நகரின் மிகப் பெரிய மாஃபியா கேங் தலைவர்களான மாரி கோல்ட் சுப்ரமணிய சிவா கல்கண்டு ரவி மதுசூதனன் ராவ் டாலர் அழகு ஆனந்தராஜ் மூவரின் வாழ்க்கையிலும் குறுக்கிடுகிறார்.

தொழில் செய்து வந்த மாஃபியா கேங் தலைவர்களான மாரி கோல்ட் சுப்ரமணிய சிவா, கல்கண்டு ரவி மதுசூதனன் ராவ் டாலர் அழகு ஆனந்தராஜ் ஆகியோர் தனித் தனியாக பிரித்து தொழில் செய்து வருகிறார்கள்.மூவருக்கும் தனித்தனியே உதவும் கதாநாயகன் சதீஷ்., அவர்களுக்கு தெரியாமல் சில வேலைகளையும் செய்கிறார். இவர்களில் டாலர் அழகு ஆனந்தராஜ் தங்கம் கடத்துவதற்கு கதாநாயகன் சதீஷ் உதவி செய்கிறார்.

இந்நிலையில் விமான நிலையத்தில் ரூபாய் 25 கோடி மதிப்புள்ள வைரத்தை கல்கண்டு ரவி மதுசூதனன் ராவ் கடத்துவதை கதாநாயகன் சதீஷ் தெரிந்துக் கொள்கிறார். இதை டாலர் அழகு ஆனந்தராஜ் கும்பலுடன் சேர்ந்து வைரத்தை அபேஸ் பண்ண கதாநாயகன் சதீஷ் திட்டம் போடுகிறார்.

இறுதியில் வைரத்தை டாலர் அழகு ஆனந்தராஜ் கும்பலுடன் சேர்ந்து கதாநாயகன் சதீஷ் வைரத்தை கொள்ளை அடித்தாரா? கொள்ளையடிக்க வில்லையா? கதாநாயகன் சதீஷ் ஈடுபடுவதற்கான காரணங்கள் என்ன, கதாநாயகன் சதீஷின் நோக்கம் நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? என்பதுதான் இந்த ‘வித்தைக்காரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த வித்தைக்காரன் திரைப்படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்திருக்கிறார். திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சதீஷ், மிகவும் யதார்த்தமாக நடித்து, காமெடியில் சில காட்சிகளில் சிரிக்க வைத்து இருக்கிறார்.

இந்த வித்தைக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடித்திருக்கிறார். பூதக்கண்ணாடி என்கின்ற பத்திரிக்கையில் பத்திரிகை நிருபராக  இருக்கிறார். ரசிகர்களை கவர முயற்சி செய்து இருக்கிறார்.

பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டிய நடிகர் ஆனந்தராஜ், சமீபகாலமாக காமெடி கதாபாத்திரத்தில் தமிழ் திரைப்பட உலகில் கலக்கி கொண்டு வருகிறார். இந்த வித்தைக்காரன் திரைப்படத்தில் டாலர் அழகு என்ற காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார். சில காட்சிகளில் சிரிக்க வைத்து இருக்கிறார்.

ஆனந்தராஜ் மற்றும் டான்சர் ஜப்பான் குமார் காமெடியில் கவனிக்க வைத்து இருக்கிறார்கள். மதுசூதனன் ராவ், இயக்குனர் சுப்ரமணிய சிவா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கிறது.

இந்த வித்தைக்காரன் திரைப்படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் யுவ கார்த்திக் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக தெளிவாக அமைந்து இருக்கிறது.

இசையமைப்பாளர் விபிஆர் இசையில் சுனாமிகா பாடல் கேட்பதற்கு இதமாக இருக்கிறது. பின்னணி இசை திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த வித்தைக்காரன் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கி.

ஆக்‌ஷன் த்ரில்லர் காமெடி ஜானர் கதை என்றாலும், கதாநாயகன் சதீஷ் என்பதற்காக முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் காட்சிகளை வடிவமைத்திருநதாலும் முதல் பாதி திரைப்படத்தில் கொள்ளை சம்பவங்களை சுவாரஸ்யமாக திரைக்கதையின் மூலம் நகர்த்தி சென்று, இரண்டாம் பாதி  கலக்கல் காமெடி  திரைப்படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் வெங்கி.

 

ரேட்டிங் 2.5/5