
ஒரு புறம், தன் வாழ்நாள் முழுதும் புறக்கணிக்கப்பட்டு, நாளை என்பது நிச்சய மில்லாமல், தோல்விகளைப் பழகிக்கொண்ட ஓர் ஆண் சச்சின்.
இன்னொரு புறம், வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் அதீத வெற்றியில் திளைத்து, உணர்வுகளுக்கு இடமளிக்காத ஒரு பெண் ரீனு.
கதை மாந்தர்களின் இயல்பு, கதை நகரும் களங்கள், அவற்றின் பின்புல மனிதர்கள் எனச் சின்ன சின்ன நுணுக்கங்களையும் பதிவு செய்திருக்கிறது திரைக்கதை. ஒரு நிகழ்வில், சச்சினும் அவனுடைய நண்பன் அமலும் குடித்துவிட்டு, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றெண்ணிச் செய்யும் சலம்பல் குறிப்பிட வேண்டிய காட்சி.
இவர்களை, ஹைதராபாத் நகரம் ஒரே புள்ளியில் இணைக்கிறது. அதன் பிறகு அவர்களின் பயணம் என்னவானது என்பதுதான் கதை.
எல்லா மொழிகளிலும் பார்த்துச் சலித்த கதை தான்.
இந்த பிரேமலு சலிப்பின் உச்சம்! வேண்டாம் ரசிகர்களே!!!
Rating: 3/5