காமி விமர்சனம்

140

 

 

ஆன்மிகம், அறிவியல், உளவியல் பறக்கும் கார்கள், கலர் பொடிகள், ஓடும் ரயிலைக் கையால் நிறுத்தும் சாகஸம், திரையில் வழிந்தோடும் ரத்தம் என பார்த்துப் பழகிய தெலுங்குப் படங்களுக்கு மத்தியில் ஒரு மாறுபட்ட விஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் தெலுங்கு படமாக வந்திருக்கிறது ‘காமி’ திரைப்படம். விஸ்வக் சென், சாந்தினி சவுத்ரி, நாடோடிகள் அபிநயா நடித்துள்ள இப்படத்தை வித்யாதர் காகிடா இயக்கியுள்ளார்.
கங்கை கரையில் அகோரியாக வாழும் ஷங்கருக்கு மற்ற மனிதர்கள் ஸ்பரிசம் பட்டாலும் அலர்ஜி ஆகி மயங்கி விழும் நோய் உள்ளது. இந்தப் பிரச்னை தீர இமயமலை உச்சியில் உள்ள மூலிகையால்தான் முடியும். சென்று மூலிகை தேடு என்று கட்டளையிடுகிறார் அகோரிகளின் குரு. ஷங்கர் மூலிகையைத் தேடி செல்கிறார். ஷங்கர் செல்லும் வழியில் ஒரு பெண் இணைந்துகொள்கிறார். உயிரைப் பணயம் வைத்து செல்லும் இவருக்கு மூலிகை கிடைத்ததா என்பதே  கதை.
கதையில் தொடர்ந்து குழப்பம், இசை சரியில்லை, தொகுப்பு பணி தொங்கிவிட்டது என்றே சொல்லலாம்.
இந்த “காமி” தன் குப்பை கதையை காமித்துவிட்டது…..
தியேட்டருக்கு போனா தூக்கம் உறுதி ரசிகர்களே……
Rating: 1.5/5