‘ஆலகாலம்’ திரைவிமர்சனம்!

140

 

 

CHENNAI:

 

கதாநாயகன் ஜெய கிருஷ்ணமூர்த்தி தன் அம்மா ஈஸ்வரி ராவுடன் ஏழ்மையான நிலையில் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க அந்த கல்லூரி சேர்ந்து படிப்பதற்காக தனது கிராமத்திலிருந்து கதாநாயகன் ஜெய கிருஷ்ணமூர்த்தி சென்னைக்கு வருகிறார். தனது மகன் கதாநாயகன் ஜெய கிருஷ்ணமூர்த்தி சென்னையில் உள்ள பெரிய கல்லூரியில், சேர்ந்து பெரிய படிப்பு படிப்பதால், அவனுடைய படிப்பு முடிந்ததும் தங்களது ஏழ்மையான நிலை மாறிவிடும், என்ற நம்பிக்கையில்

கதாநாயகன் ஜெய கிருஷ்ணமூர்த்தியின் அம்மா ஈஸ்வரி ராவ் வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையே, கதாநாயகன் ஜெய கிருஷ்ணமூர்த்தியின் ஒழுக்கம், படிப்பு திறன் நடவடிக்கை அனைத்திலும் பிடித்துப் போக நட்பு உருவாகி அதன் பின் கதாநாயகி சாந்தினிக்கு அவர் மீது காதல் கொள்கிறாள். கதாநாயகி சாந்தினி காதலை கதாநாயகன் ஜெய கிருஷ்ணமூர்த்தி சொல்ல அந்தக் காதலை ஏற்றுக்கொள்கிறார்.

நட்பு காதலாக மாற, ஒரு கட்டத்தில் கதாநாயகி சாந்தினியை திருமணம் செய்து கொள்கிறார்.

இந்த கதாநாயகி சாந்தினியின் காதலால் கதாநாயகன் ஜெய கிருஷ்ணமூர்த்தி வாழ்வில் கல்லூரியில் படிக்கும் நண்பர்களின் சூழ்ச்சியால்  மிகப்பெரிய அளவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது

குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடும் கதாநாயகன் ஜெய கிருஷ்ணமூர்த்தி அவருடைய அம்மாவின் கனவு நிறைவேறியதா? நிறைவேறவில்லையா?

ஒரு இளைஞனின் படிப்பு லட்சியமும் எப்படி சிதைக்கப்படுகிறது, என்பதுதான் இந்த ‘ஆலகாலம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஆலகாலம் திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக ஜெய கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார். புதுமுக கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெய கிருஷ்ணமூர்த்தி கல்லூரி மாணவராக அப்பாவித்தனமான சிரிப்போடு ஒரு குழந்தைக்கு தகப்பனாகவும் மிகப்பெரிய குடிகாரனாகவும் மிகவும் இயல்பாக நடித்து தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

புதுமுக கதாநாயகனாக ஜெய கிருஷ்ணமூர்த்தி இடைவேளைக்குப் பின் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மனிதராக வெளிப்படுத்திய நடிப்பு அசுரத்தனமாக இருப்பதோடு, ரசிகர்களை எழுந்து நின்று கைதட்டவும் வைக்கிறது.

இந்த ஆலகாலம் திரைப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சாந்தினி, கல்லூரி மாணவி மற்றும் குடும்பத் தலைவி என இரண்டுவிதமான கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்துவதோடு, இரண்டு கதாபாத்திரங்களிலும் பொருத்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

கதாநாயகனின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், “சாமியே கேட்டாலும் நான் மதுவை வைத்து படையல் போட மாட்டேன்” என்று பேசிவிட்டு, தனது மகனின் நிலையை பார்த்து அவருக்காக மதுக்கடையில் மது வாங்கி கொடுக்கும் காட்சி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை நிச்சயம் கண்கலங்கி விடுவார்கள்.

கதாநாயகி சாந்தினிக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் தீபா சங்கர், கதாநாயகனை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் கதாபாத்திரத்தில் தங்கதுரை, கட்டிட மேஸ்திரி ஆக கதாபாத்திரத்தில் சிசர் மனோகர், ஊரில் குடிகாரன் கதாபாத்திரத்தில் கோதண்டம் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவரும்  திரைக்கதையோட்டத்திற்கு துணைபுரிந்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கா.சத்தியராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கதையின் ஓட்டத்திற்கும், நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்துவிட்டார்.

இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தனின் இசை மற்றும் அழுத்தமான கதைக்கு பொருத்தமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை மிகவும் அருமையாக கொடுத்திருக்கிறார்.

திரைப்படத்தின் கதாநாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் என்று முதல் திரைப்படத்திலேயே மூன்று பணிகளை மேற்கொண்டிருக்கும் ஜெய கிருஷ்ணமூர்த்தி, இந்தத் திரைப்படத்தில் முன்று பணிகளிலும் முத்திரை பதித்திருப்பதோடு, தனது முதல் திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து, அதில் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

தமிழக அரசு தமிழக மக்களுக்கு கொடிய விஷம் என்று தெரிந்தும் டாஸ்மார்க் என்ற பெயரில் விற்பனை செய்து தமிழக அரசு கல்லா கட்டுகிறது.

இந்த தமிழக அரசுக்கு மக்களின் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் பணம் மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு தமிழக மக்களை இந்த தமிழக அரசு சீர்திருத்தி விடுகிறார்கள்.

மது கொடிய விஷம் என்று தெரியாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி பலர் தங்களது வாழ்க்கையை எப்படி சீரழித்துக் கொள்கிறார்கள், என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கும் இந்த திரைப்படம் தற்போதைய தற்போதைய தமிழக அரசுக்கும் குடி என்று கிடைக்கும் குடிகாரர்களுக்கும் காலில் கிடந்ததை எடுத்து அடிப்பது போல் திரைப்படத்தை மக்களின் மீது அக்கறை கொண்டு இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெய கிருஷ்ணமூர்த்தி.

ரேட்டிங் 2.5/5