
நடிகர் & நடிகைகள் :- தமன் குமார், வேல. ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, பழ. கருப்பையா, தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக், விக்னேஷ் ஆதித்யா, கஜராஜ், கருப்பு நம்பியார், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பி. மணிவர்மன்.
ஒளிப்பதிவாளர் :- கே.ஜி.ரத்தீஷ்.
படத்தொகுப்பாளர் :- எஸ். குரு சூர்யா.
இசையமைப்பாளர் :- சஞ்சய் மாணிக்கம்.
தயாரிப்பு நிறுவனம் :- மதுரை அழகர் மூவிஸ் & ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- அழகர்.ஜி & கே.ஜி. ரத்தீஷ்.
அதாவது நமது வாழ்க்கையில் ஒரு நொடியில் வாழ்க்கை தலைகீழாக மாறலாம் இன்று நம் அடிக்கடி பேசுவது உண்டு ஏனென்றால் நாம் ஒரு நொடியில் எடுக்கும் முடிவு அல்லது நிகழ்வு பல மாற்றங்களை தரக் கூடும்.
அதை போல் நொடிக்கு நொடி சஸ்பென்ஸ், ட்விஸ்ட் என எதிர்பார்க்காத பல விஷயங்களை கொடுத்திருக்கிறார். ஒரே ஒரு நொடி’யில் நடக்கும் நிகழ்வு பலரின் வாழ்க்கை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதை க்ரைம் த்ரில்லர் ஜானரில் சொல்லும் திரைப்படம்தான் ’ஒரு நொடி’.
இந்த ஒரு நொடி திரைப்படத்தில் மதுரை அலங்காநல்லூர் பகுதியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தன் கணவர் எம்.எஸ்.பாஸ்கரை காலையில வீட்டை விட்டு சென்ற என கணவர் காணவில்லை என அந்த ஊரில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்கிறார் எம்.எஸ்.பாஸ்கார் மனைவி ஸ்ரீ ரஞ்சனி.
கந்து வட்டி தொழில் செய்து வரும் வேலா ராமமூர்த்தி மீது எனது கணவரை கடத்தி வைத்திருப்பார் என சந்தேகம் இருப்பதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கிறார். எம் எஸ் பாஸ்கர் வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் காவல்துறை ஆய்வாளர் கதாநாயகன் தமன் குமார், நேரடியாக வேலா ராமமூர்த்தியை நெருங்க, அங்கு தொடங்கும் பரபரப்பு திரைப்படம் முடியும் வரை தொடர்கிறது.
அது ஒருபுறம் இருக்க, திடீரென்று நடக்கும் இளம் பெண் நிகிதாவை கொலை செய்து தென்னந்தோப்பில் கிடக்க அந்த நிகிதாவின் கொலை வழக்கையும் கையில் எடுக்கும் காவல்துறை ஆய்வாளர் கதாநாயகன் தமன் குமாரின் இரண்டு வழக்குகளையும் இணைத்து அதிரடியாக நடவடிக்கையில் இறங்குகிறார்.
காணாமல் போன எம்.எஸ். பாஸ்கரை காவல்துறை ஆய்வாளர் கதாநாயகன் தமன் குமார் கண்டு பிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? இளம் பெண் நிகிதாவை கொலை கொலை செய்தது யார் கொலை குற்றவாளியை கண்டு பிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ஒரு நொடி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஒரு நொடி திரைப்படத்தில் தமன் குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் பரிதி இளமாறன் கதாபாத்திரத்தில் மிடுக்கான தோற்றம், மிகவும் பக்குவமான நடிப்பு என காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக இருக்கிறார்.
கதாநாயகன் தமன் குமாரின் வசனம் பேசும்போது அவருடைய குரல் பிளஸ் ஆக அமைந்து உள்ளது.
காணாமல் போன எம் எஸ் பாஸ்கர் வழக்கு இளம் பெண் நிகிதாவின் கொலை வழக்குகள் என அவர் எதிர்கொள்ளும் விதம் மற்றும் எம்.எல்.ஏ, கந்து வட்டி ரவுடிகள் போன்றவர்களை விசாரிக்கும் விதங்களை தனது அளவான நடிப்பை கொடுத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.
தன்னை ஒரு நடிகனாக நிரூபிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகப்பெரிய அளவில் தமன் குமார் மிகசரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.,
இந்த ஒரு நொடி திரைப்படம் அவரது தமிழ் திரையுலகப் பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என்பது நிச்சயமாக உறுதி செய்யப்பட்டுள்ளது..
கதை கருவின் மையப்புள்ளியாக சேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், தனது அனுபவமான நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.கந்து வட்டி தொழில் நடத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேலா ராமமூர்த்தி, தனது வழக்கமான முறைப்போடு நடித்தாலும், காவல்துறை அதிகாரியிடம் தனது கோபத்தையும், திமிரையும் வெளிப்படுத்தும் விதம் மிகவும் மிரட்டலாக உள்ளது..
எம்.எல்.ஏ- கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பழ. கருப்பையாவின் அறிமுகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவருடைய நடிப்பில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திய இருக்கலாம்.
நகை கடையில் வேலை பார்க்கும் கதாபாத்திரத்தில் இளம் பெண்ணாக நடித்திருக்கும் நிகிதா, மிகவும் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனி உணர்ச்சிகரமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.சலூன் கடைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்னேஷ் ஆதித்யாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
நிகிதாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிப்பு அளவாக இருந்தாலும், நிகிதாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா சங்கர் கொஞ்சம் ஓவராக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரத்தீஷ் தனது ஒளிப்பதிவு மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையில், பாடல்கள் பின்னணி இசை காட்சிகளின் பரபரப்பையும், பதற்றத்தையும் ரசிகர்களுக்கு ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் எஸ்.குரு சூர்யா, திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே ரசிகர்களை கதைக்குள் அழைத்துச் சென்று விடுவதோடு, அடுத்தடுத்த காட்சிகளை மிகவும் வேகமாக நகர்த்தி சென்றாலும், திரைகக்தையில் இருக்கும் எமோஷ்னலான விசயங்களை மிக அழகாக படத்தொகுப்பு மூலம் மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்திருக்கிறார்.சாதாரண விசயம் என்றாலும், ஒரு நொடியில் மோசமான விஷயங்களை நல்ல விஷயங்களும் நடந்துவிடும் என்ற உண்மையை மிகவும் சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதையை அதை மிக உணர்வுப்பூர்வமாகவும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் பி.மணிவர்மன்,
ரேட்டிங் 3.5/5