‘ஜமா’ திரைவிமர்சனம்!

152

 

 

நடிகர் & நடிகைகள் :- அம்மு அபிராமி, சேத்தன், பாரி இளவழகன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாரி இளவழகன்.

ஒளிப்பதிவாளர் :- கோபால கிருஷ்ணா.

படத்தொகுப்பாளர் :- பார்த்தா எம்.ஏ.

இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர் :- எஸ். சாய் தேவானந்த், எஸ். சசிகலா, எஸ். சாய் வெங்கடேஸ்வரன்

ரேட்டிங் :- 4.25./5.

திருவண்ணாமலை அருகில் உள்ள ராமச்சந்திரா நாடக சபாவில் நாட்டுப்புற கலை என்று கூறப்படும் தெருக்கூத்தில் பதினாறு கலைஞர்களை வைத்து கொண்டு மகாபாரதம், வள்ளி திருமணம், அரிச்சந்திரா மற்றும் கடவுள்களை மையப்படுத்தி நடத்தும் தெருக்கூத்து ஜமாவிற்க்கும் சேத்தன் வாத்தியாராக தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தி சென்று கொண்டிருக்கிறார்.

இந்த ராமச்சந்திரா நாடக சபாவில் இளம் தெரு கூத்து கலைஞரான கதாநாயகன் பாரி இளவழகன் தெருக்கூத்துகளில் வரும் அனைத்து பெண் கதாபாத்திரங்களான திரௌபதி, குந்தி தேவி மற்றும் பல பெண்கள் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராமச்சந்திரா நாடக சபாவில் நாட்டுப்புற கலை நடத்தும் தெருக்கூத்து ஜமாவில் பெண் கதாபாத்திரங்கள் போடும் இளம் தெரு கூத்து கலைஞரான கதாநாயகன் பாரி இளவழகன் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கியமான கதாபாத்திரங்கள் போட்டு நடிப்பதோடு, மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் தான் இருக்கும் தெருக்கூத்து ஜமாவை வாத்தியாராக தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்பதுதான் அவன் எதிர்கால ஆசையாக விரும்புகிறார்.

ராமச்சந்திரா நாடக சபாவில் நாட்டுப்புற கலை, அந்த ஜமாவின் வாத்தியாரான சேத்தன், இளம் தெரு கூத்து கலைஞரான கதாநாயகன் பாரி இளவழகன் வளர்ச்சியை தடுக்கும் வகையில் தொடர்ந்து இடையூறு செய்து கொண்டு வருகிறார்.

எப்படிப்பட்ட இன்னல்கள் வந்தாலும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து ராமச்சந்திரா நாடக சபாவில் நாட்டுப்புற கலை, அந்த ஜமாவில் தொடர்ந்து பயணிக்கும் இளம் தெரு கூத்து கலைஞரான கதாநாயகன் பாரி இளவழகன், தான் நேசிக்கும் தெருக்கூத்து கலைக்காக வாழ்க்கையில் பல இழப்புகளை சந்தித்து, பல அவமானங்களை எதிர்கொண்டாலும், தனது திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இளம் தெரு கூத்து கலைஞரான கதாநாயகன் பாரி இளவழகன், திறமையை நிரூபிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததா?, கிடைக்கவில்லையா ?, அந்த ஜமாவின் வாத்தியாராக வேண்டும் என்ற கனவில் இருந்த கதாநாயகன் பாரி இளவழகன், வாத்தியாராக வேண்டும் என்ற கனவு நிறைவேறியதா?, நிறைவேறவில்லையா?, என்பதுதான் இந்த ஜமா திரைப்படத்தில் மீதிக்கதை.

இந்த ஜமா திரைப்படத்தில் கதையின் நாயகனாக பாரி இளவழகன் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன், கல்யாணம் என்ற கதாபாத்திரத்தில் மூலம் திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்திருக்கிறார்.

தெருக்கூத்தில் பெண் கதாபாத்திரம் போட்டு ஆடும் போது அவர் வெளிப்படுத்தும் உடல்மொழிகள், அவர் இயல்பாக இருக்கும் போதும் அவ்வபோது எட்டிப்பார்ப்பது, கோபம் வந்தாலும் சரி,  சோகமாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி உடல்மொழியில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் சிறு சிறு அசைவுகளை கூட மிக நுணுக்கமாக செய்திருக்கும் கதையின நாயகன் பாரி இளவழகன் சிறந்த நடிகருக்கான விருதுகளுக்கு மிகவும் தகுதியானவர் என்பதை இந்த ஜமா திரைப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை எதார்த்தம் மீறாமல் இயக்கியிருப்பதோடு, கதையின் நாயகனாகவும் மண் மணம் மாறாமல் நடித்திருப்பதும் அதைஇதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் திரைப்படமாகவும் ஒரு ஜனரஞ்சக திரைப்படமாகவும் கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் மற்றும் நடிகர் பாரி இளவழகனுக்கு தமிழ் திரைப்பட உலகம் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் என எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த ஜமா திரைப்படத்தில் கதையின் நாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி அதிரடியான கதாபாத்திரத்தில் நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.

கோபக்கார தந்தையை எதிர்த்து நிற்கும் தைரியமாக பேசும் கதாபாத்திரத்தில் கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

ராமச்சந்திரா நாடக சபாவில் நாட்டுப்புற கலை, அந்த தெருக்கூத்து ஜமாவின் தலைமை தாங்கி நடத்தி வரும் வாத்தியாராக தாண்டவம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேத்தன், கதையின் நாயகனுக்கு இணையாக போட்டி போட்டு நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

இத்தனை ஆண்டு காலங்கள் தமிழ் திரைப்பட உலகம் ஏன் சேத்தன் அவர்களை என் பயன்படுத்தவில்லை? என்ற கேள்வியை இந்த ஜமா திரைப்படம் பார்ப்பவர்கள் மனதில் எழுப்பியிருக்கும் சேத்தனுக்கு இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய இடத்தை பெற்று தரும் என்பது உறுதி சேத்தன் போல் நல்ல நடிகர்களை தமிழ் திரைப்பட உலகம் பயன்படுத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

கதையின் நாயகன் பாரி இளவழகனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தயாள், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிமேகலை, பூனை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் திரைப்படம் பார்க்கவும் ரசிகர்கள் நினைவில் நிற்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு மூலம் தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் கிராமத்து எளிமையை அழகாகவும் அருமையாகவும் காட்சிப் படுத்தியிருப்பதோடு மட்டுமல்லாமல் அதில் நடித்து இருக்கும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

படத்தொகுப்பாளர் பார்த்தா எம்.ஏ, இது ஒரு கலை படைப்பாக இருந்தாலும், படத்தொகுப்பு மூலம் கமர்ஷியல் திரைப்படங்களுக்கு நிகராக திரைப்படத்தை மிகவும் விறுவிறுப்பாக பயணிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தெருக்கூத்தில் இடம்பெறும் பாடல்களை தேவையான அளவு பயன்படுத்தியிருப்பதோடு, இறுதிக் காட்சியில் அந்த பாடலையே பின்னணி இசையாக பயன்படுத்தியிருப்பது, தெருக்கூத்து கலை மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆர்வத்தை தூங்கும் வகையில் இசையமைத்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜா இசையமைத்த அனைத்து திரைப்படங்களிலும் இல்லாத இசையை இந்த திரைப்படத்தில் மிக அருமையாக கொடுத்திருக்கிறார்.

இந்த ஜமா திரைப்படத்திற்கு கண்டிப்பாக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் தமிழக அரசு வழங்க வேண்டும்.