
CHENNAI:
இரண்டாம் உலகப்போர் 1943ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கதை மற்றும் திரைக்கதைக்கு நடப்பது போல் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் மன்னர்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் ஜப்பான் நாட்டுப் படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தும் எதிரி நாட்டு படைகள், மதராஸ் மாகாணத்தில் குண்டு வீச திட்டமிடுகிறது.
மதராஸ் மாகாணத்தில் குண்டு வீச போவதாக தகவல் மக்களிடையே மிகப்பெரிய அளவில் பரவ, தங்களையும் தங்களது உடைமைகளையும் பாதுகாப்புக்காகவும் தப்பிப்பதற்காகவும் பலர் மதராஸ் மாகாணத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.
மீனவர் இருக்கும் பலர் தங்களது படகுகள் மூலம் நடுக்கடலுக்கு சென்று தப்பித்துக்கொள்ள முயற்சி செய்து கொள்கிறார்கள். அதன்படி, காசிமேடு பகுதி மீனவரான கதாநாயகன் யோகி பாபு மற்றும் தன் பாட்டி குலப்புளி லீலா, இருவரும் தப்பித்து தன்னுடைய துடுப்பு படகில் நடுக்கடலுக்கு செல்ல முயற்சி செய்கிறார்.
கதாநாயகன் யோகி பாபு, குலப்புளி லீலா, கிளம்பும் படகில் கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்- ஆலன், வெவ்வேறு மொழி பேசும் கதாநாயகன் யோகி பாபு பயணிக்கும் படகில் தப்பிப்பதற்காக ஏறி கொள்கிறார்கள். நடுக்கடலுக்கு சென்றதும் படகு பழுதடைந்து விடுகிறது.
அதனால், தொடர்ந்து பயணிக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கும் படகை திரும்பி கரைக்கு செலுத்த வேண்டும் என்றால், படகில் இருப்பவர்களில் மூன்று பேர் வெளியேற வேண்டும், என்று படகின் கதாநாயகன் யோகி பாபு கூறுகிறார். நடுக்கடலில் பழுதடைந்து நிற்கும் படகில் இருந்து எப்படி வெளியேற முடியும், என்று படகில் பயணிக்கும் அனைவரும் யோசிக்க, அவர்களை சுற்றி மற்றொரு ஆபத்து மிகப்பெரிய அளவில் உருவாகிறது.
படகில் பயணிக்கும் அனைவரும் மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பித்தார்களா?, தப்பிக்கவில்லையா?, படையில் பயணித்த அனைவரும் கரைக்கு வந்தார்களா? வரவில்லையா? பொழுதடைந்த படகில் இருந்து அந்த மூன்று பேரை வெளியேற்றிவிட்டு மற்றவர்கள் தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் இந்த போட் திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக காசிமேடு பகுதி மீனவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, தனது வழக்கமான கேலி கிண்டல் என நகைச்சுவை வசனங்களை கைவிட்டுட்டு, இயக்குநர் சிம்புதேவன் என்ன கூறினாரோ அதை மட்டுமே பேசி நடித்திருப்பது கதைக்கு மிகப்பெரிய பலமாகவும், ரசிகர்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆறுதல் அளித்திருக்கிறது. உள்ள
கதாநாயகன் யோகி பாபுடன் படகில் பயணிக்கும் கதாநாயகன் யோகி பாபுவின் பாட்டி குல்லபுலி லீலா, கெளரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாரா, ஜெஸ்ஸி, அக்ஷத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி வசனங்களை சரியாக உச்சரித்து கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்..
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு மூலம் படகை மட்டுமே சுற்றி வலம் வந்தாலும், கடலின் வெவ்வேறு வண்ணங்களையும், அதன் பிரம்மாண்டத்தையும் தனது ஒளிப்பதிவின் மூலம் திரையில் கொண்டு வர அதிக அளவில் கஷ்டப்பட்டு இருப்பது ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.
நமது உள்நாட்டு அரசியலையும், உலக அரசியலையும் ஃபேண்டஸி மற்றும் காமெடி கலந்து தனது திரைப்படங்களில் பேசும் இயக்குநர் சிம்புதேவன், அதே பாணியில் பூர்வகுடிகளின் உரிமை மற்றும் அவர்களை அவர்களுடைய நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் வியாபார நகரங்களின் முன்னேற்ற அரசியலை நடுக்கடலில் பேசியிருப்பது தான் ‘போட்’.
மொத்தத்தில், இந்த ‘போட்’ திரைப்படத்தை பார்க்கலாம்.
ரேட்டிங் 3.5/5