‘முத்து என்கிற காட்டான்’ – வெப் சீரிஸ் விமர்சனம்!

 

CHENNAI:

  விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா ,பாலாஜி சக்திவேல் ,சிந்து, இர்ஷாத் அலி, அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர் அமரேந்திரன், சாதனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இணையத் தொடர் ‘முத்து என்கிற காட்டான்’. இந்த இணைய தொடர் மணிகண்டன் – பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
மதுரைக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு சிறிய காவல் நிலையம், கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த வழக்கும் இல்லாததால் மூடப்படும் நிலையில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அங்குள்ள பொட்டல் வெளியில் பாறைகள் நடுவே ஒரு தலை வெட்டப்பட்டு செங்குத்தாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.ஆடு மேய்க்கும் ஒருவன் தகவல் சொல்லவே, காவல் நிலையத்தில் பரபரப்பு பற்றிக் கொள்கிறது. அதற்குப் பிறகு அதற்கான விசாரணையில் இறங்குகிறது காவலர் குழு. அந்த சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை தலையை கைப்பற்றி உடலை தேடுகிறது. உடல் கிடைக்காத நிலையில், ஒரு கடிதமும், பணமும் அங்கிருந்து கைப்பற்ருகிறார்கள். அந்த கடிதத்தில் “என் தலையை அடக்கம் செய்துவிட்டு, இந்த பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனால் காவல்துறையினர் என்ன செய்வது என்று புரியாமல் கொலை செய்யப்பட்டது யார் என்பதை விசாரிக்கும் போது விஜய் சேதுபதியின் பெயர் முத்து என்பது தெரிய வருகிறது.
அதன்பிறகு விஜய் சேதுபதி பற்றி விசாரணை செய்து, தேடுதல் வேட்டையில் இறங்குபவர்கள் மதுரை, கேரளா என்று பயணப்படுகிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் பிளாஷ் பேக் கதைகள் சுவாரசியமாக காவல்துறைக்கு கிடைக்கின்றன. ஒரு சாதாரண வாட்ச் கடையில் வேலை செய்யும் மனிதனாகவும் முத்து, உள்ளுக்குள் மிகப் பெரிய மனிதநேயத்தை கொண்ட அவர் தவறுதலாக தங்க கட்டிகள் அடங்கிய பையை கண்டுபிடித்து அதன் உரிமையாளரிடம் நேர்மையாக திருப்பி கொடுப்பதும், மதுரையில் கண்மணிநடனக் குழுவில் ஆடும் பெண் அவமானப்படுத்தும் போது திடீரென்று உள்ளே நுழைந்து தனது முரட்டுத்தனத்தைக் காட்டுவதும், ஒரு ஓட்டல் அதிபரிடம் லட்சக் கணக்கில் பணத்தைக் கொடுத்து அங்கு பணி புரியும் வயதான பெரியவருக்கு உதவி செய்து உரிமையாளர் ஆக்குவதும் என பல நன்மைகளை செய்யும் முத்து எதற்காக கொலை செய்யப்பட்டார்? இந்த முத்து யார் ? என்ற கேள்வியை நோக்கி பயணிக்கும் காவல்துறைக்கு, அவரைப் பற்றிய பல நம்ப முடியாத  தகவல்கள் தெரிய வருகிறது. இறுதியில் விஜய்சேதுபதியின் தலை மட்டும் ஓரிடத்தில் கிடைக்கிறது.அவருடைய உடல் எங்கே? என்கிற காவல்துறையின் தேடலில், அவரது உடல் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் ” ‘முத்து என்கிற காட்டான்’.தொடரின் மீதிக் கதை.
பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வரும் பல்வேறு பின்புலக் காட்சிகள் நல்ல காட்சி அனுபவம். அங்கே நடக்கும் சம்பவங்கள் சுவாரசியத்தையும் பரபரப்பையும் தூண்டுகின்றன. இப்படி ஒரு கலகலப்பான பரபரப்பான சுவாரசியமான காட்சிகளின் தொகுப்பாக இந்த இணைய தொடர் உருவாகி இருக்கிறது.
  முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியை. அவர் நல்லவரா கெட்டவரா என்று புரியாத நிலையில்  கடிகாரம் பழுது நீக்கும் கடைப் பணியாளர், யானைப் பாகன், சரக்கு வாகன ஓட்டுநர், பெண் நடனக் கலைஞர்களின் பாதுகாவலர் எனப் பல கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி அதன்   தன்மையை உணர்ந்து  கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி,  பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு மர்மமான மனிதனாகத் தொடரை தன் தோளில் சுமந்து தாங்கிப் பிடிக்கிறார்.

சிட்டு எனும் துறுதுறுவான பெண் வேடத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்திருக்கிறார் அபி நட்சத்திரா.ரிஷாஜேகப்ஸும் அவருக்கு இணையாக நடித்திருக்கிறார். லலிதா எனும் மதுரைப்பெண் வேடமேற்று அதற்குத்தக்க மாறியிருக்கிறார் வி.ஜே.பார்வதி.

மிலிந்த் சோமன்,முத்துக்குமார்,சிங்கம்புலி,வடிவேல் முருகன்,பாலாஜி சக்திவேல், சிந்து உள்ளிட்டோரும் தொடருக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை, கதையின் உணர்ச்சிகளை மேலும் உயர்த்தி இந்த தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

கதை பல்வேறு பகுதிகளில் பயணித்தாலும், சிறந்த காட்சிகளுடன்  வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும் வகையில் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள் மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம்.

இயக்குநர் மணிகண்டன், தனது வழக்கமான எதார்த்தமான பாணியிலேயே தனக்கான ஒரு தனியான திரை மொழி கொண்டவர் என்பதால் அந்தத் தனித்துவத்தை இந்தத் தொடரிலும் வெளிப்படுத்தி உள்ளார். இணையத் தொடருக்கான சஸ்பென்ஸுடன் திரைக்கதையை நகர்த்திச் சென்றாலும், எளிய மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகளின் மூலம் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார். ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்குகிற இடமும் முடிகிற இடமும் முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப எழுதி,  விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்திக் கொண்டு போயிருப்பது கூடுதல் சிறப்பு.

மொத்தத்தில் இந்த  ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸை கண்டிப்பாக பார்க்கலாம்.

ரேட்டிங் 3.5/5.

Featured
Comments (0)
Add Comment