‘சொர்க்கவாசல்’ திரைப்பட விமர்சனம்!

144

 

 

CHENNAI:

படம்: சொர்க்கவாசல்

நடிப்பு: ஆர் ஜே பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், சானியா ஐயப்பன், சராபுதீன், காக்கா கோபால் , பொற்கொடி, சந்தான பாரதி

தயாரிப்பு: திங்க் ஸ்டுடியோஸ், ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ்

இசை: கிறிஸ்டோ சேவியர்

ஒளிப்பதிவு: பிரின்ஸ் ஆண்டர்சன்

இயக்கம்: சித்தார்த் விஸ்வநாத்

பி ஆர் ஓ: நிகில் முருகன்

தள்ளு வண்டியில் இட்லி சுட்டு விற்கும் ஆர்ஜே பாலாஜி கொலை வழக்கு சம்பந்தமாக திடீரென்று போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைச்சாலையில் உள்ள இரண்டு ரவுடி கேங்க்  இடையே சிக்கிக் கொள்ளும் ஆர் ஜே பாலாஜி சிறையில் இருந்து எப்போது வெளியில் வருவோம் என்று எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறார். ஒரு கட்டத்தில் சிறையில் கடும் கலவரம் மூள்கிறது. போலீசுக்கும், கைதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடக்கிறது. இந்த கலவரத்திற்கு என்ன காரணம் இதிலிருந்து ஆர் ஜே பாலாஜியால் உயிர் பிழைக்க முடிந்ததா என்ற கேள்விகளுக்கு கிளைமேக்ஸ் பதில் அளிக்கிறது

சிறைச்சாலைக்குள் கைதிகள் நடத்தும் கலவரம் என்பது சென்னை சென்ட்ரல் சிறைச்சாலையில் சில வருடங்களுக்கு முன்பு  நடந்த ஒரு கலவரம் தான். அந்த உண்மை சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு சொர்க்கவாசல் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. படம் தொடங்கி சிறிது நேரம் ஆர் ஜே பாலாஜி, சானியா ஆகிய இருவரின் சில காதல்  சிலுமிஷயங்கள் சுவாரசியத்தை தூண்டிக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று சிறைச்சாலை கலவரம், வெட்டு,  குத்து,  துப்பாக்கி சூடு என்று படத்தின் பெரும் பகுதி ரத்த களரியாகி விடுகிறது.

சிறைச்சாலையில் இரண்டு ரவுடி கூட்டத்துக்கு இடையே சிக்கிக் கொள்ளும் ஆர் ஜே பாலாஜி தாறுமாறாக அடிவாங்கி ரத்தம் சொட்ட சொட்ட நிற்பதெல்லாம் அச்சத்தை படர விடுகிறது.

செல்வ ராகவன் சிறைச்சாலைக்குள் ரவுடியாக வலம் வருவது வித்தியாசம். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் உருவத்தில் ஆஜானபாகு இல்லை என்றாலும் அதட்டலாக நடித்து மிரட்டி இருக்கிறார்.

கருணாஸ் மாறுபட்ட வேடத்தில் நிமிர்ந்து நிற்கிறார்.

திகார் சிறையில் இருந்து  மாற்றலாகி வரும் சிறை அதிகாரியின் ஆர்ப்பாட்டம் ஒரு பக்கம் கலவரத்துக்கு நீர் வார்க்கிறது.

ஜெயிலில் நடக்கும் கிளைமாக்ஸ் நெருக்க கலவரக் காட்சி சுமார் 15 நிமிடத்திற்கு மேல் அரங்கை நிசப்தம் ஆக்மாக்கிவிடுகிறது.

கிறிஸ்டோ சேவியர் ஒளிப்பதிவுக்கு பசுமை என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாத அளவுக்கு ரத்தமும் ரத்த சகதியுமாக காட்சிகள் திடுககிட வைக்கின்றன.

பிரின்ஸ் ஆண்டர்சன் இசை துப்பாக்கி சத்தத்தை காது துளைக்கும் அளவுக்கு  வெடித்து தலை பாரத்தை ஏற்றுகிறது.

கமல் நடித்த விருமாண்டி பாணியில் திரைக்கதை அமைத்து  கவர பார்த்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத்

சொர்க்கவாசல் என்பதற்கு பதிலாக சிறை நரகம் என டைட்டில் வைத்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘சொர்க்கவாசல்’-  கலவரமான படம்.

 

ரேட்டிங் 3/5