‘நாங்கள்’- திரைப்பட விமர்சனம்!

112

 

 

நடிகர் & நடிகைகள் :- அப்துல் ரஃபி, மிதுன் வி, ரித்திக் மோகன், நிதின் டி, பிரார்த்தனா ஸ்ரீகாந்த், ஜான் எடத்தட்டில், ராக்ஷி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அவினாஷ் பிரகாஷ்.

ஒளிப்பதிவாளர் :- அவினாஷ் பிரகாஷ்.

படத்தொகுப்பாளர் :- அவினாஷ் பிரகாஷ்.

இசையமைப்பாளர் :- வேத் சங்கர் சுகவனம்.

தயாரிப்பு நிறுவனம் :- கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்

தயாரிப்பாளர் :- ஜி. வி. எஸ். ராஜு.

ரேட்டிங்:- 2.5./5.

ஊட்டியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருபவரான அப்துல் ரஃபி, கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் பிசினஸ் மற்றும் பள்ளி நிர்வாகம் போன்றவற்றால் நிறைய பண இழப்பு ஏற்படுகிறது.

அதன்காரணமாகவே, வீட்டிற்கு தண்ணீர் வரி, மின்சார கட்டணம் முதற்கொண்டு செலுத்தாமல் இருக்கிறார்.

இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளையும் மிகவும் கண்டிப்பாக வளர்த்து வருகிறார்.

மூன்று மகன்களும் சின்னஞ்சிறிய தவறு நடந்தாலும் கடுமையான தண்டனைகளை கொடுக்கிறார்.

தன் தந்தையின் மிரட்டலுக்கு மூன்று மகன்களும் பயந்து நடுங்குகிறார்கள்.

சொந்த வீட்டில் தந்தையின் கண்டிப்புக்கு பயந்து வேலையாட்கள் போல நடந்து கொள்ளும் மகன்கள் ஒருகட்டத்தில் தந்தை மீது கோபப்பட்டு கேரளாவில் உள்ள தனது தாய் பிரார்த்தனாவிடம் சென்று விடுகிறார்கள்.

ஆனால் தன் தாயின் கஷ்டத்தை உணர்ந்து மீண்டும் தந்தையிடம் திரும்பி வந்து விடுகிறார்கள்.

தன்னுடைய மூன்று மகன்களின் எதிர்காலத்துக்காக சில முடிவுகளை தைரியமாக சில முடிவுகள் எடுக்கும்போது அப்துல் ரஃபி உடன் பிரார்த்தனா வந்து சேருகிறார்.

அப்துல் ரஃபி பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை ஏற்றுக்கொண்டாரா? மனைவியை ஏற்றுக் கொள்ளவில்லையா? குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அப்துல் ரஃபி எடுக்கும் முடிவுகள் என்ன? என்பதுதான் இந்த மீதிக்கதை.

முன்று சிறுவர்களின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்துல் ரஃபி மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால் அந்த மூன்று சிறுவர்களும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள் என்று கூறுவதை விட கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இந்த திரைப்படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் அனைவருமே தங்களது கதாபாத்திரங்களை மிகவும் எதார்த்தமாக நடித்து அந்தந்த கதாபாத்திரமாகவே மாறியிருந்தார்கள்.

மூன்று சிறுவர்களின், அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரார்த்தனா மற்றும் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் என அனைவருமே தங்களது கதாபத்திரங்களை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அவினாஷ் பிரகாஷ் குளிப்பதைவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் வேத் சங்கர் சுகவனம் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

தந்தை மீது உள்ள பயத்தையும் தாயின் மீது உள்ள பாசத்தையும் நாயின் மீது வைத்திருக்கும் பாசத்தை ஒரு கணவன் மனைவி மீது இல்லாமல் போனதற்கான காரணத்தை சற்று விளக்கியிருந்திருக்கலாம்.

இந்த திரைப்படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொறுமை வேண்டும்.

மொத்தத்தில் நாங்கள் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பொறுமை வேண்டும்.

 

ரேட்டிங் 3/5