
CHENNAI:
2 டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் சார்பில் ஜோதிகா – சூர்யா தயாரித்திருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இதில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், விது, கருணகரன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய தாதாவான ஜோஜூ ஜார்ஜ் தன் மனைவி ஸ்வாசிகாவுடன் வாழ்ந்து வரும் நிலையில் இவர்களிடத்தில் வேலை பார்க்கும் ஒருவர் இறந்து விட அவரது குழந்தையான .சூர்யாவை ஸ்வாசிகா மகனாக தத்து எடுத்து வளர்க்கிறார். தாய், தந்தை இல்லாத சூர்யா, தனது காதலி பூஜா ஹெக்டேவுக்காக அடிதடியை விட்டுவிட்டு அமைதியாக வாழ விரும்புகிறார். ஆனால், அதே காதலிக்காக தனது வளர்ப்பு அப்பாவின் கையை துண்டாக வெட்டுபவர், அவரது ஆட்களையும் கொலை செய்கிறார். இதனால், அவரிடம் இருந்து பூஜா ஹெக்டே விலகிச்செல்ல, சூர்யா சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்.
பூஜா ஹெக்டே அந்தமானில் இருக்கும் தகவல் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அவரை சமாதானப்படுத்தி அவர் விரும்பியது போல், அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அந்தமான் செல்லும் சூர்யாவுக்கு, அங்கே மிகப்பெரிய பொறுப்பும், யுத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் சூர்யாவின் வாழ்க்கை என்னவானது?, என்பதை மாஸாகவும், கிளாஸாகவும் சொல்வதே ‘ரெட்ரோ’.
இந்த மெட்ரோ திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்திருக்கிறார். தன்னை வளர்க்கும் தந்தையாக இருந்தாலும், அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் துணிச்சல் மிக்க மகனாகவும், காதல் தோல்வியால் இது வந்து போகும் காதலனாகவும் அதன், பிறகு தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளியாகவும், என ஒரே கதாபாத்திரத்திற்கு சூர்யாவின் நடிப்பின் மூலம் சிரிக்காமலேயே நடனம் ஆடுவது, ஆக்ஷன் காட்சிகளை ஸ்டைலிஷாக கையாள்வது என்று திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்திருக்கிறார்
இந்த மெட்ரோ திரைப்படத்தில் கதாநாயகியாக ஹெக்டே, நடித்துள்ளார். கதாநாயகி பூஜா ஹெக்டே, கதையின் மையப்புள்ளியாகவும், கதையை நகர்த்திச் செல்லும் வழக்கமான கதாநாயகியாக அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
கதாநாயகன் சூர்யா தந்தை மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பை கொடுத்து தமிழ் திரைப்பட ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.
கிங் மைக்கல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக எந்த ஒரு குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, மூலம் திரைப்படத்தை மிகநேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளை மிக ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் பின்னணி இசை மற்றும் பீஜியம்கள் திரைப்பட ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.
ரெட்ரோ காலக்கட்ட உலகை திரைப்படம் பார்க்கணும் ரசிகர்கள் கண் முன் நிறுத்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.
ரேட்டிங் 3.5/5