‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – திரைவிமர்சனம்.!

208

 

 

CHENNAI:

நடிகர் & நடிகைகள் :- M சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் ஜெகன், யோகிபாபு, M.S. பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் (a) பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்‌ஷ்மி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அபிஷன் ஜீவிந்.

ஒளிப்பதிவாளர் :- அரவிந்த் விஸ்வநாதன்.

படத்தொகுப்பாளர் :- பரத் விக்ரமன்.

இசையமைப்பாளர் :- ஷான் ரோல்டன்.

தயாரிப்பு நிறுவனம் :- மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட்.

தயாரிப்பாளர் :- பசிலியன் நசரத், முகேஷ் ராஜ், யுவராஜ் கணேசன்.

கதாநாயகன் சசிகுமார் மற்றும் மனைவி சிம்ரன் அவர்களுடைய இரண்டு மகன்கள் ஒருவர் மிதுன் ஜெய் சங்கர் மற்றொருவர் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் இவர்கள் குடும்பத்துடன் விலைவாசி ஏற்றத்தால் இலங்கையில் வாழ முடியாமல் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு சட்டத்துக்குப் புறம்பாக கள்ளத் தோனியில் அகதிகளாக இந்தியாவில் உள்ள ராமேஸ்வரம் வந்து இறங்கிய அவர்களை யோகி பாபு  சென்னைக்கு அழைத்து வந்து, கேசவ நகரில் உள்ள ஒரு காலனியில் வீட்டை வாடைக்கு எடுத்துக் கொடுத்து அவர்களை தங்க வைக்கிறார்.

கதாநாயகன் சசிகுமார் குடியிருக்கும் வீட்டிற்கு எதிரில் உள்ள எம்.எஸ. பாஸகரிடம் கார் ஓட்டுனர் பணி புரிந்து கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றி  வருகிறார்.

 

 

ஒரு பக்கம் இருக்க  இலங்கையில் இருந்து தமிழகத்தில் அகதிகளாக வந்தவர்கள் என்பதை மறைத்து வாழ வேண்டிய சவால் இந்த குடும்பத்துக்கு, மற்றொரு பக்கம்  ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய அளவில் நிகழும் ஒரு குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டிய சவால் காவல்துறைககு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

ராமேஸ்வரத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்தார்களா? கைது செய்யவில்லையா?

இந்த குடும்பம் இலங்கையில் இருந்து வந்த அகதிகள் என்ற அடையாளம் தெரியாமல் வாழ்ந்தார்களா? இந்த இரு சவால்களும் ஒன்றுக்கொன்று எப்படி சம்பந்தப்படுகிறது? என்பதுதான் இந்த “டூரிஸ்ட் பேமிலி”  திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடித்திருக்கிறார். இந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் தர்ம தாஸ் என்ற கதாபாத்திரத்தில் மனைவிக்கு நல்லதொரு கணவனாக, இரண்டு மகன்களுக்கு நல்லதொரு தந்தையாக, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு நல்லதொரு சிறந்த மனிதனாக என தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். “அயோத்தி” திரைப்படத்திற்கு பின் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நடிகர் சசிக்குமாருக்கு மிகப்பெரிய பேரைப் பெற்று தரும் என்பது உறுதி.

இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் கதாநாயகியாக சிம்ரன் நடித்துள்ளார்.வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரனும் தனது கதாபாத்திரத்திற்கு எந்த விதமான குறையும் இல்லாமல் தனது நடிப்பின் மூலம் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

கதாநாயகன் சசிகுமார் மூத்த மகன் கதாபாத்திரத்தில் நங ஆவேஷம் திரைப்பட புகழ் மிதுன் ஜெய் சங்கர் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார்.

தந்தை மகனுக்குமான  நடக்கும் பாச உரையாடல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்து விடுகிறது.

கதாநாயகன் சசிகுமார் இரண்டாவது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இளங்கோ குமரவேல் மற்றும் ஸ்ரீஜா ரவி இருவருக்குமிடையே இருக்கும் காதல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை  கண்கலங்க வைக்கிறது.

இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தன் தாயை இழந்து தனிமையில் வாடும் ஒரு இளைஞனாக மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து கதாபாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார.

தாயிற்கு நினைவிழந்ததைக் கண்டு அழும் போது திரைப்படம் பார்க்கும் நம்மையும் அவரோடு சேர்த்து அழ வைத்துவிடுகிறார்.

யோகிபாபுவை மிகச்சரியாக நடித்திருக்கிறார்.

ரமேஷ் திலக், அன்பான ஒரு கதாபாத்திரமாக மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கண்டிப்புடன் கூடிய அன்பு கொண்டவராக எம் எஸ் பாஸ்கர், காவல்துறை ஆய்வாளராக பக்ஸ், அவரது மனைவியாக நடித்தவர் இவர்களது மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  யோகலெக்‌ஷ்மி என அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு மிகச் சரியான பொருத்தமாக பொருந்தியிருக்கிறார்கள்.

 

 

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதி மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன்
படத்தொகுப்பு சிறப்பாக உள்ளது.

அயோத்தி, குடும்பஸ்தன், லப்பர் பந்து உள்ளிட்ட சூப்பர் சூப்பர் ஹிட் நிரைப்படங்கள் இயக்குனர்களின் வரிசையில் இந்தத் திரைப்படம் மூலம் வெற்றி திரைப்பட இயக்குனர்கள் வரிசையில் இணைகிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.

தமிழ் திரைப்பட உலகில் எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் இப்படியொரு தரமான படைப்பைக் கொடுத்து தமிழ் திரை உலகை உள்ள  அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.

இப்படி ஒரு நல்ல கதையை கேட்டு  தரமான ஒரு திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட்.
பிரமாண்ட படைப்பையும் தாண்டி கதையும் கதைக்களமும் கொண்ட திரைப்படங்கள் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

ரேட்டிங் 4/5