“லெவன்” திரைப்பட விமர்சனம்!

114

 

 

CHENNAI:

நடிகர் & நடிகைகள் – நவீன் சந்திரா, அபிராமி, திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜய், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – லோகேஷ் அஜ்ல்ஸ்.

ஒளிப்பதிவாளர் – கார்த்திக் அசோகன்.

படத்தொகுப்பாளர் – ஸ்ரீகாந்த். என்.பி .

இசையமைப்பாளர் – – டி.இமான்.

தயாரிப்பு நிறுவனம் – – ஏஆர் என்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர்கள் – அஜ்மல் கான் & ரேயா ஹரி.

காவல்துறை உயரதிகாரியான கதாநாயகன் நவீன் சந்திரா, மிகவும் நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும் வருகிறார். அனைத்து வழக்குகளை திறம்பட பணிபுரியும் காவல்துறை அதிகாரியாகவும் தன்னுடைய திறமையால் திறம்பட கையாண்டு வழக்குகளை உடனடியாக முடித்து வைக்கிறார்.சென்னை, சிட்டிக்குள் தொடர்ந்து அடுத்தடுத்து சில நபர்கள் உடல்கள் முழுவதுமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மர்மமான முறையில் கொலை செய்வது அடிக்கடி நடந்து வருகிறது.

அடிக்கடி நடக்கும் மர்மமான முறையில் நடக்கும் கொலை வழக்கை விசாரிக்கும் மற்றொரு காவல்துறை அதிகாரியான ஷாஷாங் கெலை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கொலைகள் நடந்த கொண்டே இருக்கிறது. இந்நிலையில், கொலை வழக்கை விசாரித்து வரும் மற்றொரு காவல்துறை அதிகாரியான ஷாஷாங் ஒரு பெரும் விபத்தில் சிக்கிக் கோமாவிற்கு செல்கிறார்.

அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கை கதாநாயகன் நவீன் சந்திரா விசாரித்து வருகின்றார். அவருக்கு துணையாக துணை ஆய்வாளர் திலீபனும் வருகிறார்.

இந்த நிலையில், இந்தத் தொடர் கொலையை செய்து வரும் அந்த கொலைகாரன் யார்.? இந்த தொடர் கொலைகளுக்கு காரணமாக இருக்கும் அந்த கொலைகாரன் யார்.? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த “லெவன்” திரைப்படத்தில் கதாநாயகனாக நவீன சந்திரா நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நவீன சந்திரா திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில் மாஸான எண்ட்ரீ கொடுத்து அசத்தியிருக்கிறார்.

கதாநாயகன் நவீன சந்திரா காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை தன்னுடைய பார்வையாலும் தனது உடல் மொழியாலும் மிக எளிதாக அரவிந்தன் கதாபாத்திரத்தோடு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பயணிக்க வைத்து விட்டார். மேலும், நடை, உடை, மிடுக்கான தோற்றம், வசன உச்சரிப்பு, ஆக்ஷன் காட்சிகள் என கதாநாயகன் நவீன சந்திரா தனக்கே உரித்தான பாணியில் மிகச் சரியாக தனது கதாபாத்திரத்தை செய்து முடித்திருக்கிறார்.

தொடர்ந்து, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாஷாங் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திலீபன் இருவருக்கும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கனகச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

நடிகை அபிராமி சிறப்புத் தோற்றத்தில் வந்து தனது கதாபாத்திரத்தை மிக அழகாக நடிப்பை கொடுத்து சிறப்பு சொத்து இருக்கிறார்.

ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜய், இவர்கள் அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் இளம் வயது கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு சினிமா தினம் இல்லாத ஒரு சினிமாவை மிக அழகாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் டி இமானின் இசையில் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் பார்த்திராத ஒரு கதையை மிக கவனமாக கையாண்டு அதை தெளிவாக காட்சிப்படுத்தி அழகான படைப்பாக படைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் அஜ்ல்ஸ்.

அருமையான கதை, திரைக்கதையின் வேகம் நம்மை எந்த ஒரு காட்சியிலும் கண்களை திரையை விட்டு விலகாமல் பார்த்துக் கொண்டது இய்க்குனரின் திறமை மட்டுமல்லாமல் சீரியல் கில்லிங் இன்வஸ்டிகேஷன் திரைப்படமான இதை மிகவும் நேர்த்தியாக கையாண்டு, தான் ஒரு மிகச் சிறந்த இயக்குனராக தன்னை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் லோக்கேஷ் அஜ்லஸ்.

 

 

ரேட்டிங் 3/5