‘நறுவீ’ திரைப்பட விமர்சனம்!

208

 

 

CHENNAI:

சுபாரக் முபாரக் இயக்கத்தில் ஹரீஷ் அலக், விஜே பப்பு, பாடினி குமார், ஜீவா ரவி, ப்ரவீனா, காதே, முருகானந்தன், ப்ரதீப், மதன் ராஜா, சாரதா நந்தகோபால் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் நறுவீ.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அஸ்வத். மேலும், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆனந்த் ராஜேந்திரன்.

படத்தினை தயாரித்திருக்கிறார் அழகு பாண்டியன். சுபாரக் படத்திற்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

நீலகிரி மாவட்டம் அருகே ஒரு அழகியகிராமத்தில் கதை நகர்கிறது. பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராம வாசிகளிடையே ஒரு செய்தி உலவி வருகிறது.

அந்த கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் ஆண்கள் சென்றால், அவர்கள் மீண்டும் உயிரோடு வர மாட்டார்கள் என்றும், அந்த வனப்பகுதிக்குள் அமானுஷ்யம் உலவுவதாகவும் நம்புகின்றனர்.

இந்த சூழலில் தான், விஜே பப்பு, பாடினி குமார் உள்ளிட்ட ஐவர் அந்த கிராமத்திற்குச் செல்கின்றனர். அங்குள்ள வளங்களை பற்றி ஆராய்ச்சி செய்ய இக்குழு அங்கு பயணமாகிறது.

செல்லும் இடத்தில், அந்த குழுவினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் தெரியாமல் சென்று விடுகின்றனர். அதன்பிறகு நடக்கும் அசம்பாவிதங்களே படத்தின் மீதிக் கதை.

படத்தில் அறிமுக நாயகனாக, அக்கதாபாத்திரமாகவே ஜொலித்திருக்கிறார் நாயகன் ஹரீஷ் அலக். பயம், ஆச்சர்யம் என கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்து அசத்தியிருக்கிறார் ஹரீஷ்.

வி ஜே பப்பு மற்றும் பாடினி குமார் இருவரின் நடிப்பும் படத்திற்கு மிகப்பெரும் பலமாகவே இருந்தது. மேலும், படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் இயக்குனர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்கள்.

அமானுஷ்யம், திகில், த்ரில்லர் என இப்படியான நோக்கத்தில் இப்படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தின் கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாம் என்று எண்ண வைத்துவிட்டார்.

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று பலமாகவே இருந்தது. எடுத்த முயற்சிக்காக படக்குழுவினரை பாராட்டலாம்..