குஜராத் முந்த்ரா (Mundra) துறைமுகத்தில் வழியாக மிகப்பெரிய ஹெராயின் போதைப்பொருள் கடத்த திட்டம் தீட்டுகிறது
கடத்தல் கும்பல்.
.காதர் பாய்(லால்)
லிங்கா(ஜே.டி சக்கரவர்த்தி)
இருவரும் இணைந்து இந்த கடத்தலுக்கு திட்டம் தீட்டி காய் நகர்த்து கின்றார்கள்.
அதன் மதிப்பு 25,000 கோடி ரூபாய் .
மற்றொரு புறம்
தன்னுடைய வீட்டை மீட்பதற்காகவும், தன்னையே நம்பி இருக்கும் அம்மாவை நன்றாக வாழ வைக்கவும், அமர்,(சக்தி சரண்)
லிங்கா விடம் ,
வேலைக்கு சேர்ந்து
அந்த
25,000, கோடி ஹெராயின் போதை பொருளை சுங்கத்துறையில் இருந்து மீட்டுக் கொண்டு வருகிறேன். என்று தன்னுடைய நண்பன்
தீனா(பால சரவணன்)சேர்ந்து
சரக்கைக் கடத்து
கிறார்கள்.
அதை தடுக்கவும், கண்டுபிடிக்கவும், சிறப்பு சுங்கத்த்துறை அதிகாரியாக, முரளி கிருஷ்ணாவும், (சமய முரளி) அவரது டீமும்.
கடத்தல் கும்பல் வளைத்து பிடிக்கிறார்கள்.
ஒருபுறம் காதர் பாய், இன்னொரு புறம் லிங்கா, இன்னொருபுறம் காதலி பவி,
நாயகனின் அம்மா ராதிகா சரத்குமார் ,
மற்றொரு புறம் சுங்கத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணா.
இவர்கள் ஆடும் ஆடு புலி ஆட்டம் தான் படத்தின் கதை களம்.
போதைப்பொருள் கடத்தல் பற்றிய படம் .என்றதும் எடுத்தவுடன் நேரடியாக கதைக்குள் சென்றுவிடாமல் காதல் காட்சிகளில் தொடங்கி,25000 கோடி, அண்ணன், தங்கை ,அம்மா, மகன் என்று படிப்படிப்படியாக நம்மை அந்த உலகத்திற்குள் கூட்டிச் செல்கிறது படம். ஆக்ஷன் படம்தானே, என்று மேலோட்டமாக இல்லாமல் கதாபாத்திரங்கள் மிக நேர்த்தியாக ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தப் பட்டிருக்கிறது .
லிங்காவுக்காக, சரக்கை கடத்த திட்டமிட்டு
அமர் ,தீனா இருவரும்
போலி ஆவணங்கள் மூலம் , கண்டெய்னர் கடத்தப்படும் காட்சி யும்,
கடத்தல் சம்பந்தப்பட்ட கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் மாட்டாமல் இருக்க, அமர் ,தீனா இருவரும் கையாளுவதும்,
படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளது.
நாயகன் & இயக்குனர் & பின்னணி இசை
,கதை, வசனம் எழுதி இயக்குகிறார்
டி. சமய முரளி
கடத்தல் உலகத்தின் பின்னணியையும் துறைமுகங்கள், போதைப்பொருள் சரக்குகள், போலி ஆவணங்கள் ஆகியவை கதையின் மையமாக சிறப்பாக இயக்கி இருக்கிறார்
சரண் சக்தி, ஜே.டி. சக்கரவர்த்தி, லால், ராதிகா ஆகியோரின் பங்களிப்பும் இயக்குனர் தேர்வு கச்சிதமாக இருக்கிறது. இவரின்
சமூகப் பார்வையில்: வறுமையிலிருந்து வெளியேற முயலும் இளைஞர்கள் தவறான பாதையில் சென்றால் என்ன நிலை ஏற்படும் என்பதை அக்கறையுடன் படம் பேசி இருக்கிறது .
இயக்குநர் டி. சமய முரளி ஓர் இந்திய வருவாய்ப் பணி (IRS) அதிகாரி,
இவர் சுங்கத்துறை விசாரணைகளில் தனது பணிக்காலத்தில் சந்தித்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் படத்தை உருவாக்கியுள்ளார்
ஒவ்வொரு காட்சியும் ஒரு ஆச்சரியம்..
காதர், லிங்கா – , அமர் – தீனா,பவி இப்ராகிம் – ராஜ் என்கிற நெப்போலியன். இப்படி பல்வேறு காம்பினேஷன்களை உருவாக்கி அம்மா ,மகன், நட்பு , பகை, காதல் என எல்லா உணர்ச்சிகளையும் படத்தில் கொண்டு வந்திருப்பது சிறப்பாக இருக்கிறது.
இயக்குனர்.
படத்தின் பின்னணி இசையிலும் இவர் பங்களித்துள்ளார்.
படத்தின் பலமாக. திரைக்கதையின் வேகம், கதாபாத்திரங்களின் ஆழம், சண்டைக் காட்சிகளின் அமைப்பு ஆகியவை படத்திற்கு பலம் சேர்க்கிறது..
தயாரிப்பு: எஸ். ராம்பிரகாஷ்
தயாரிப்பு நிறுவனம்: எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டூடியோஸ்
சரண் சக்தி,
படத்தின் முக்கிய இளம் கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்துள்ளார். வறுமை, ஆசை, குற்ற உலகத்தின் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையே சிக்கிக்கொள்ளும் இளைஞரின் பாத்திரம் கதைக்கு வலுவானது.
காதலிக்காக உருகுவதும், கலங்குவதும் சிறப்பாக இருக்கிறது .
டி. சக்கரவர்த்தி யின்,
வில்லத்தனமும், சிறப்பான நடிப்பும் கதாபாத்திரங்கலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இப்படத்தில் லிங்கா கதாபாத்திரத்தில் சிறப்பாய் நடித்திருக்கிறார். கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு செம தீனி போட்டு இருக்கிறார்.
லால் “வலுவான குணச்சித்திர நடிப்புக்குப் பெயர்பெற்ற இவர் படத்தின் முக்கிய நடிகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.
வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
ராதிகா சரத்குமார்
படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் தாய்மையின் உணர்வை ஏற்படுத்துகிறது காமெடிக்கு பால சரவணன் கதையை நகர்த்திச் சென்றுள்ளார்.
சில நேரங்களில் இவர் தான் மெயின் வில்லன் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஸ்மேஹா மணிமேகலை
படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்
பவி “என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாய் நடித்திருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் உருக வைத்து விடுகிறார்.
தன் கணவன் தவறான வழியில் செல்ல கூடாது என்று பிடிவாதமாக இருப்பது கதாபாத்திரத்தின் சிறப்பு.
மேலும் காளி வெங்கட்,
செல்வம் என்ற கதாபாத்திரத்தில் பவி மீது அன்பு காட்டும் அண்ணனாக மிளிர்கிறார்.
மைம் கோபி,
ராஜன் என்ற கதாபாத்திரத்தில் லிங்காவுக்கு டப் கொடுத்து உயிரை விடுகிறார்.
மற்றும்
ஜாஃபர் சாதிக்,
வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் சிறப்பாக இருக்கிறது.
கா. வின் பாஸ்கர்
ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்கிறது
குஜராத் முந்த்ரா (Mundra) ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்,
என கேமரா விளையாடி இருக்கிறது.
துறைமுகத்தினுள் சரக்குக் கப்பல்களை பிரமாண்டமான முறையில் படமாக்கி, பிரமிப்பை உண்டாக்கிஆக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவாளர்
சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மொத்த டெக்னிக்கல் குழுவையும் பாராட்டலாம். குறிப்பாகப்கண்டெய்னர், வரும் காட்சிகள் என அனைத்துக்கும் மெனக்கெட்டிருக்கிறது கலை இயக்கக் குழு. விறுவிறுப்பான காட்சிகளுக்கு உதவிய படத்தொகுப்பு, அக்காட்சிகளுக்கான தொடக்கப் பகுதிகளில் கைகொடுத்துள்ளது.
இசை சாம் டேனியல்,
பின்னணி இசை டி. சமய முரளி
இருவரும் மிரட்டி இருக்கிறார்கள்.
சாமி டேனியல் இசையில் வரும் ஒரு தொடக்கப் பாடலும், ஒரு குத்து பாடலும்
மெலோடி பாடல். கடலில் தண்ணீர் நிரம்பியிருப்பதைப் போல, மொத்த படத்தையும் தன் பின்னணி இசையால் நிரப்பியிருக்கிறார் ரிப்பீட்டாகும் தீம் இசை, பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.
ஸ்ரீ வாட்சன்
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது .
சிட்டி பாபு
வின் கலை இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பலம்
துறைமுகத்தினுள் சரக்குக் கப்பல்களை பிரமாண்டமான முறையில் படமாக்கி, பிரமிப்பை தந்துள்ளார்.
தவசி ராஜ் அமைத்து இருக்கும்
சண்டைப் பயிற்சி
படத்தின் வெற்றிக்கும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கிறது.
மதிப்பீடு 3-7/5