யோலோ – திரை விமர்சனம்

131

 

CHENNAI:

படம்: யோலோ

நடிப்பு: தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, வி ஜே நிக்கி, சுபாஷினி
கண்ணன், யுவராஜ் கணேசன், பிரவீன், சுவாதி, திவாகர், கலைக்குமார், நிதி, சுப்பிரமணியன், கோபாலகிருஷ்ணன்,

தயாரிப்பு: மகேஷ் செல்வராஜ்

இசை: சகிசானா சேவியர்

ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி

இயக்கம்: எஸ். சாம்

பிஆர்ஓ: சதீஷ் (AIM)

பொதுமக்கள் மத்தியில் ப்ராங்க் வீடியோ செயது, அதை யூ டியூப்பில் ஒளிபரப்பி அதன் மூலம் பிசினஸ் செய்து தனது பிழைப்பை நடத்தி வருபவர் நடிகர் தேவ்.

நாயகி தேவிகாவிற்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார் அவரது தந்தை படவா கோபி. தேவிகாவை பெண் பார்க்க வந்திருக்கிறார் விஜே நிக்கி.

நிக்கியின் அக்கா, தேவிகாவை பார்த்து உங்களுக்கு தான் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே என்று கூற தேவிகா உட்பட அனைவருக்குமே ஷாக்.

தான் யாரையும் திருமணம் செய்யவில்லை என்று தேவிகா கூற, உங்களது கணவர் தேவ் என்றும், உங்களை இருவரையும் ஒன்றாக பார்த்திருப்பதாகவும் கூறிவிடுகிறார் நிக்கியின் அக்கா.

தேவ் என்பவரை தான் இதுவரை பார்த்தது கூட இல்லை என்று கூறுகிறார் தேவிகா.

நாயகன் தேவ் அவர்களை தேடி கண்டுபிடிக்கிறார் தேவிகா. தேவ் அவர்களுக்கு தனக்கு தேவிகாவை யார் என்று தெரியாத நிலையில் தான் இருக்கிறார்.

ஆனால், இருவருக்கும் திருமண ஆனதற்கான சான்றுகள் இருப்பதைக் கண்டு இருவருமே அதிர்ச்சியாகின்றனர். தங்களுக்கே தெரியாமல் தங்களுக்கு எப்படி திருமணம் நடந்தது என்பதை அறிந்து கொள்ள அடுத்த அடியை எடுத்து வைக்கின்றனர் தேவும் தேவிகாவும்.

அதனை அவர்கள் கண்டுபிடித்தார்களா இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் தேவ், கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்து அசத்தியிருக்கிறார். துறுதுறுவென தனது நடிப்பால் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் தேவ்.

அழகாலும் நடிப்பாலும் நம்மை சொக்க வைக்கிறார் நாயகி தேவிகா.

படவா கோபி, ஆகாஷ் பிரேம் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது நடிப்பை அளவாக கொடுத்து பாராட்டுகளை பெற்றிருக்கின்றனர்.

நடிப்பில் இன்னும் சற்று கவனம் கொண்டு காட்சிகளில் நடித்திருக்கலாம் வி ஜே நிக்கி அவர்களே.. கோபம் வருபது போலவோ அல்லது சிரிப்பு வருவது போலவே தனது கதாபாத்திரத்தை கொண்டு போகலாம்.. ஆனால், எரிச்சல் வருவது போல மட்டும் கதாபாத்திரத்தைக் கொண்டு செல்லக்கூடாது. நிக்கியின் கதாபாத்திர நடிப்பு அப்படியாகத் தான் இருந்தது.

விஜே நிக்கிக்கு பதிலாக வேறு யாரேனும் படத்தில் நடித்திருந்திருந்திக்கலாம்.. அதுமட்டுமல்லாமல், போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபரும் காமெடி செய்கிறேன் என்கிற பெயரில் நம் கழுத்தை பதம் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

ஒரு சில படங்களின் காட்சிகள் ஆங்காங்கே வந்தும் சென்று கொண்டிருந்தது. பேயை விரட்டுபவராக வருபவர் காமெடி செய்கிறாரா வில்லத்தனம் செய்கிறார் என்று சொல்லாமலே சென்று விடுகிறார்.

கலகலப்பாக காமெடியாக கொண்டு செல்ல வேண்டிய படத்தை, சற்று கடுப்பாக்கி தான் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். பலவீனமான வில்லன், பலவீனமான திரைக்கதை என படம் முழுக்க தொடர்வதால், படத்தில் பெரிதாக எதுவும் ஈர்க்கவில்லை.

 

ரேட்டிங் 2.8/5