
CHENNAI:
படம்: பாம்
நடிப்பு: அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, பால சரவணன், சிங்கம் புலி
தயாரிப்பு: சுதா சுகுமார்
இசை: டி இமான்
ஒளிப்பதிவு: பிஎம்.ராஜ்குமார்
கதை திரைக்கதை: மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட்
வசனம்: மகிழ்நன் பிஎம்
இயக்கம்: விஷால் வெங்கட்
பி ஆர் ஓ: சதீஷ் (AIM), சிவா
காளகம்மாய்பட்டி என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள மக்கள் ஒரு காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அங்குள்ள மலை உச்சியில் வருடத்திற்கு ஒருமுறை ஜோதி தெரிவதும், பின் மயில் மலை உச்சியில் நிற்பதுமென அதனை திருவிழாவாக எடுத்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஊரில் ஒருமுறை வெள்ளம் வர, ஊரே மூழ்கி விடுகிறது. அந்த சமயத்தில், பாறைகள் இரண்டாம் உடைந்து இரண்டு கற்களாக கிடக்க, அதில் ஒரு பகுதியை ஒரு சாதியினரும் மற்றொரு பகுதியை மற்றொரு சாதியினரும் பிரித்து பிரிந்து வழிபட, கிராமம் இரண்டாம் உடைகிறது.
காளப்பட்டி என்றும் கம்மாய்பட்டி என்றும் இரண்டாக பிரிய, அதிலிருந்து தொட்டதுக்கெல்லாம் இருபிரிவினருக்கும் மோதல் வெடித்துக் கொண்டே செல்கிறது.
வருடங்களும் உருண்டோடுகிறது. மேல் சாதியின் தலைவனாக சிங்கம்புலியும் கீழ் சாதியின் தலைவனாக கிச்சா ரவியும் வருகின்றனர்.
இருபிரிவினரையும் எப்படியாக இணைத்துவிட வேண்டும் என்று நாளுக்கு நாள் போராடுகிறது காளிவெங்கட். இவரது தங்கையாக வருபவர் நாயகி ஷிவாத்மிகா. காளிவெங்கட்டின் நண்பனாக வருபவர் அர்ஜூன் தாஸ்.
அடிக்கடி பிரச்சனை வருவதாலும், தன்னை அந்த ஊரில் ஒருவனாக யாரும் நினைக்காததாலும் அந்த ஊரை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இருக்கிறார் அர்ஜூன் தாஸ். என்ன நடந்தாலும், இந்த ஊரை இணைக்காமல் விட மாட்டேன் என்ற வைராக்யத்தில் இருக்கிறார் காளி வெங்கட்.
ஒருநாள், காளி வெங்கட் இறந்து விட, அதிர்ச்சியில் உறைகிறது கிராமம். இறந்து போனாலும், அவர் உடலிலிருந்து குசுவானது அவ்வப்போது வந்து கொண்டிருக்க, தனது நண்பன் இறக்கவில்லை என்று நம்புகிறார் அர்ஜூன் தாஸ்.
இரண்டு ஊருக்கும் நடுவே இருக்கும் ஆலமரத்தடியில் காளி வெங்கட்டை தூக்கிச் சென்று வைக்கிறார் அர்ஜூன் தாஸ். அவர் குசு விட்டு, உடல் ஆட்டம் காணுவதால், ஊர் பூசாரி நம்ம ஊருக்கு சாமி வந்திருக்கிறது என்று கூறுகிறது.
இதனால், இரண்டு கிராமமும் இணைந்து காளி வெங்கட்டை சாமியாக வணங்குகிறது. காளிவெங்கட்டால் இந்த இரு கிராமத்தினரும் இணைகிறார்களா இல்லையா.? சாதி மக்களை பிரிக்குமா.? என்பதற்கான விடையை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.
கதையின் நாயகனான அர்ஜூன் தாஸ், தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு பெரிதான ஸ்கோப் இல்லை என்றாலும் அதை அழகாக செய்து முடித்திருக்கிறார். எந்த வித ஹீரோயிசம் காட்சிகளும் படத்தில் இல்லாத போது, அதனை திறம்பட கையாண்டிருக்கிறார் அர்ஜூன் தாஸ்.
நாயகி ஷிவாத்மிகா, அழகான தேவதையாக வந்து செல்கிறார். ஆரம்பத்தில் கருத்தாக நடித்தபின்பு, மிகவும் பொறுமையாக பிணமாக நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார் காளி வெங்கட்.
ராட்சசன் சரவணனின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது,.. அதுமட்டுமல்லாமல், பாலசரவணன், விலங்கு ரவி, டி எஸ் கே என படத்தில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரங்களும் கதைக்கேற்ற நாயகர்களாக ஜொலித்திருந்தனர்.
படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவு சிறிய காட்சிகளைக் கூட மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறது.
மூட நம்பிக்கைகளை வைத்து தெளிவான ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். அதேசமயம், அம்மக்களை முட்டாளாக்கவும் முயற்சித்திருக்கிறார் இயக்குனர். அதனை தவிர்த்திருந்திருக்கலாம். அர்ஜூன் தாஸ் ஏதோ துணை நடிகர் போல வந்து சென்றது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான்.
அதே சமயம், ஒளி வந்தால் மட்டுமே மக்கள் ஒன்றாக இருக்க முடியும் என்று பாசிடிவாக படத்தினை முடித்துவிட்டார் இயக்குனர்.
மொத்தத்தில், ‘பாம்’ படம் ரசிக்க கூடியது.
ரேட்டிங் 3/5