’படையாண்ட மாவீரா’ திரைப்பட விமர்சனம்!

121

 

 

CHENNAI:

நடிகர்கள்: வ கெளதமன், சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான், சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்க்ஸ்லி, ஆடுகளம் நரேன், புஜிதா, மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, பிரபாகர் தீனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை: ஜி வி பிரகாஷ்குமார்

பின்னணி இசை: சாம் சி எஸ்

தயாரிப்பு: வி கே ப்ரொடக்‌ஷன்ஸ்

ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்.

டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த காடுவெட்டி குரு பற்றிய வாழ்க்கை கதையை ஒட்டி அவரது புகழ் பாடும் படமாக உருவாகி உள்ளது  ‘படையாண்ட மாவீரா’

அரியலூர் மாவட்டத்தில் எக்ஸ் மிலிட்டரியான சமுத்திரக்கனி, தனது ஊருக்கு எதாவது செய்ய வேண்டும் என்றெண்ணி தனது கிராமத்திற்கு வருகிறார். சமுத்திரக்கனியின் மனைவியாக வருகிறார் சரண்யா பொன்வண்ணன்.

இவர்களுக்கு குருநாதன் என்ற மகன் இருக்கிறார். கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு, பல வருடங்களாக தலைவராக இருந்த ஆடுகளம் நரேனை தோற்கடிக்கிறார் சமுத்திரக்கனி.

இதனால் வெறுப்படைந்த நரேன் சமுத்திரக்கனியை கொல்லத் துடிக்கிறார் . ஒருகட்டத்தில் சமுத்திரக்கனியை கொன்று விடுகிறார் நரேன். தனது கணவனைக் கொன்ற நரேனை தலை துண்டித்துக் கொன்று விடு என்று தனது மகன் குருநாதனிடம் கூறுகிறார் சரண்யா.

வருடங்கள் உருண்டோட, நரேனையும் தலை துண்டித்து கொல்கிறார் குரு. தொடர்ந்து, தனது கிராமத்து பெண்களுக்காகவும், பல பேரை கொலை செய்கிறார் குரு. சிமெண்ட் பேக்டரி, அந்நிய நிறுவனம் என தனது மண்ணை அடைய நினைக்கும் அனைவரையும் எதிர்த்து களத்தில் நிற்கிறார் குரு.

அதிகாரிகளாலும் அந்நிய நிறுவன முதலாளிகளாலும் குருவிற்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகனாக வ கெளதமன் குரு என்ற கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்தியிருக்கிறார். பார்வையில் வெறி, ஆக்‌ஷனில் அதிரடி, வசனத்தில் வாள் வீச்சு என அக்கதாபாத்திரத்திற்கு தேவையானதைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் வ கெளதமன்.

மேலும், படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ரெடின் உள்ளிட்ட நடிகர்களும் இயக்குனர் சொன்னதை அளவாக செய்து தங்களது கதாபாத்திரங்களில் ஜொலித்திருக்கின்றனர்.

வீரம், வீரம் என்று படம் முழுக்க அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே சென்றது சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், ஒரு போராளியின் கதையை திரையில் கொண்டுவந்ததற்காக இயக்குனர் வ கெளதமனை பாராட்டலாம்.

வன்முறையோ அல்லது தீவிரவாதமோ எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்படியான படிப்பினையை நாம் வழங்க வேண்டும். அதை விடுத்து, மற்ற பார்வையில் கவனத்தை செலுத்துவதை துளியளவும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான். பின்னணி இசையில் சாம் சி எஸ் சற்று இரைச்சலை குறைத்திருக்கலாம்.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் . சண்டைக் காட்சிகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

ரேட்டிங் 3/5