
CHENNAI:
படம்: காந்தா
நடிப்பு: துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திர விஜய், ஆடுகளம் நரேன், வையாபுரி, காயத்திரி சங்கர், விஜய் நாகேஷ், பக்ஸ், பரதன், நிழல்கள் ரவி, ஜாவா சுந்தரேசன்
தயாரிப்பு: ராணா டகுபதி, துல்கர் சல்மான் , பிரசாந்த் பொட்லூரி, ஜாம் வர்கீஸ்
இசை: ஜானு சந்தர்
ஒளிப்பதிவு: டேனி சாஞ்செஸ் லூபஸ்
இயக்கம்: செல்வமணி செல்வராஜ்
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்
1950களின் தமிழ் சினிமா உலகம். அந்தக் காலத்து உச்சநட்சத்திரமாக விளங்குபவர் துல்கர் சல்மான். அவரை உருவாக்கிய இயக்குநர் சமுத்திரக்கனியின் கனவு கதையாக உருவாகும் ‘சாந்தா’ என்ற படத்திலிருந்து துல்கர் விலகி விடுகிறார். பின்னர், மீண்டும் அந்தப் படத்தை தொடங்க முடிவு செய்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர். அடு
அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு, க்ளைமாக்ஸை மாற்ற சொல்கிறார் துல்கர். அதனை ஏற்க மறுக்கிறார் சமுத்திரக்கனி.
இதனால் இருவருக்கும் பெரும் ஈகோ எட்டிப் பார்க்க, மோதல் ஆரம்பமாகிறது. நின்று போன படம் சில பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது. ஆனால், தான் எடுக்கும் படமே படம் என்று மீதமிருக்கும் காட்சிகளை இயக்குகிறார் துல்கர் சல்மான். ஆனால் துல்கரின் அடாவடியை பொறுத்துக் கொண்டாலும், தான் எழுதிய கிளைமாக்ஸுடன் தான் படம் முடிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் சமுத்திரக்கனி.. அதற்காக, தன்னால் அடையாளம் காணப்பட்ட படத்தின் நாயகி பாக்யஸ்ரீ-ன் உதவியை நாடுகிறார். இருவரின் மோதல்களுக்கு இடையே தொடர்ந்து நடக்கும் படப்பிடிப்பில் துல்கர் சல்மானுக்கும், நாயகி பாக்யஸ்ரீ-க்கும் இடையே புரிதல் ஏற்படுகிறது. இதனால், மேலும் கோபமடையும் இயக்குநர் சமுத்திரக்கனி. தன்னு
இப்படத்தில் துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தி என்று அழைப்பார்கள். இப்படத்தின் மூலம் உண்மையாகவே இவரை நடிப்பு சக்ரவர்த்தி என்றே அழைக்கப்படுவார் என்று அடித்து கூறலாம். ஒவ்வொரு காட்சியையும் தாங்கி நிற்கும் தூணாக இருந்து காட்சிகளை நகர்த்திச் சென்றிருக்கிறார். ‘நடிகையர் திலகம்’ படத்தில் ஜெமினிகணேசன் வேடமேற்றுச் சிறப்பாக நடித்திருந்த துல்கர் சல்மான், இந்தப்படத்திலும் அந்தக் காலத்துக் கதாநாயகர்களைக் கண்முன்னே நிறுத்தி பாராட்டுப் பெறுகிறார்.
பழம்பெரும் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திக்கனி, இதுவரை பார்த்திராத வேறு ஒரு பரிணாமத்தில் பயணித்திருக்கிறார். தன்னுடைய கலை மீது உள்ள கர்வம், அதற்காக தன்னை அர்ப்பணிக்கும் உணர்வு ஆகியவை தெளிவாக வெளிப்பட்டுள்ளன.
நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ, அக்காலத்து நடிகைகளின் முக சாயலுடன் கவர்ந்திழுக்கும் அழகியாக வலம் வருகிறார். அளவான நடிப்பு, அப்பாவித்தனமான பேச்சு என்று தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதி அந்த வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்.
துல்கரின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி,மாமனாராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி,ரவீந்திர விஜய்,ஆடுகளம் நரேன்,பக்ஸ் மற்றும் உதவி இயக்குநராக நடித்திருக்கும் கஜேஷ்நாகேஷ் ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜானுசந்தர், பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
டானி சஞ்செஸ் லோபெஸின் ஒளிப்பதிவு நல்ல காட்சியனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.கறுப்பு வெள்ளை காலகட்டம் வண்ணக் காலம் ஆகியனவற்றை அழகாக வேறுபடுத்திக் காட்டி வரவேற்புப் பெறுகிறார்.
செல்வமணி செல்வராஜ் – எழுத்து மற்றும் இயக்கத்தில் இரண்டிலும் திறமையைக் காட்டியுள்ளார். ஒரு நடிகரும் இயக்குநரும் இடையே உருவாகும் ஈகோ மோதலை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாதி நாடகமயமாக கவர்ந்தாலும், இரண்டாம் பாதியில் த்ரில்லர் மாறுபாட்டில் சென்று வேறுவிதமான உணர்வைத் தருகிறது. தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு உலக படைப்பை எடுத்த இயக்குனர் செல்வமணி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்..
மொத்தத்தில், ‘காந்தா’ அந்த கால சினிமா அனுபவத்தைக் கொடுக்கிறது.
ரேட்டிங் 4/5.