
CHENNAI:
படம்: ‘தீயவர் குலை நடுங்க’
நடிப்பு: அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம்,
பிரவீன் ராஜா ,
லோகு Nkps, ,ராம்குமார்
தங்கதுரை, பேபி அனிகா,
பிராங்க்ஸ்டர் ராகுல்
பிரியதர்ஷினி, சையத்
ஜிகே. ரெட்டி
பி எல். தேனப்பன், ஓ ஏ கே. சுந்தர்,
வேலா ராமமூர்த்தி, பத்மன்
தயாரிப்பு: ஜி. அருள்குமார்
இசை: பரத் ஆசிவகன்
ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யு
கதை & இயக்கம்: தினேஷ் இலெட்சுமணன்
பிஆர்ஓ: யுவராஜ்
முகமூடி அணிந்த மர்ம நபரால் பிரபல எழுத்தாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜூன் விசாரிக்கிறார். மறுபக்கம் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிப்பதோடு, அவருடன் நெருக்கமாக பழக தொடங்குகிறார். இந்த சூழலில் காவல்துறை அதிகாரி அர்ஜூன் இந்த கொலையைப்பற்றி விசாரிக்கும்போது எந்த தடயங்களும் சரியாகக் கிடைக்காமல் குற்றத்தின் நுனி புரியாமலும், குற்றவாளிகளின் நிறம் தெரியாமலும் திணறுகிறார். அதற்குப் பிறகு தொடர்ந்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. இந்தச் சமயத்தில் யார் கொலை செய்தது என்பதை கண்டுபிடித்து குற்றவாளிகளை நெருங்குகிறது காவல்துறை. நெருங்கிக் குற்றவாளியை பிடிக்கும் போது காவல்துறை ஒரு எதிர்பாராத நிலைப்பாட்டை எடுக்கிறது .அது என்ன? ஏன்? அந்தக் குற்றவாளி யார் ?என்பதுதான் ’தீயவர் குலை நடுங்க’ படத்தின் மீதிக் கதை.
மகுடபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார் அர்ஜூன். வழக்கமான தனது உடல்மொழியை வைத்துக் கொண்டு இன்வஸ்டிகேஷன் நடத்து விதம் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. தனது பாணியில் அட்டகாசமான சண்டைக்காட்சி ஒன்றையும் நிகழ்த்தி தனது ரசிகர்களை திருப்தியடைய செய்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரமானது இப்படத்தில் சற்று வித்தியாசமானது தான். ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா. வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் அசத்தியிருக்கிறார்.
ஆட்டிசம் பாதித்த சிறுமியாக நடித்திருக்கும் அனிகா, மிக இயல்பாக நடித்து வியக்க வைக்கிறார்.
பிரவீன் ராஜா, லோகு.என்.பி.கே.எஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதை மற்றும் காட்சிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பளித்துள்ளது.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, ஆரம்பக் காட்சியிலேயே மிரட்டி விடுகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் வேகத்தை அதிகரித்து பார்வையாளர்களிடமும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் தினேஷ் லட்சுமணன்.திரை மொழிக்குத் தேவையான திடுக்கிடும் திருப்பங்களுடன் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார். இப்படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை, அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்புடன் பயணிக்கும் திரைக்கதை, பார்வையாளர்களுக்கு சிறந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கிறது.
‘தீயவர் குலை நடுங்க’ பார்வையாளரை பயமுறுத்தும்.
ரேட்டிங் 3/5