’ஹாட் ஸ்பாட் 2’ திரைப்பட விமர்சனம்

88

 

’ஹாட் ஸ்பாட் 2’ திரைப்பட விமர்சனம்

நடிப்பு : பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பிரிஜிதா, பவானி ஸ்ரீ, ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், அஷ்வின், சஞ்சனா திவாரி, கே.ஜே.பாலமணிமார்பன், விக்னேஷ் கார்த்திக்
இயக்கம்: விக்னேஷ் கார்த்திக்
தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் அறிமுக இயக்குநரின் நான்கு வெவ்வேறு கதைகள் மூலம் பார்வையாளர்களின் ஆதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் தொடர்ச்சி தான் ‘ஹாட் ஸ்பாட் 2’. முதல் பாகத்தைப் போலவே இதிலும், அதே தயாரிப்பாளரிடம் அறிமுக இயக்குநர் கதை சொல்ல வருகிறார். அவரது நோக்கமும் முதல் பாகத்தின் இயக்குநருடையது தான் என்றாலும், அவர் பேச இருக்கும் விசயம் தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல, ஒரு சமூகத்திற்கானது. அது என்ன ? , அதன் மூலம் மக்களுக்கு இயக்குநர் எதை புரிய வைக்க முயற்சிக்கிறார் ? என்பது தான் ‘ஹாட் ஸ்பாட் 2’.
திரை நட்சத்திரங்களின் வெறித்தனமான ரசிகர்கள், பெண்ணியம் மற்றும் ஆடை சுதந்திரம் என்ற பெயரில் பெரியவர்கள் மனதை புரிந்துக் கொள்ளாத இளசுகள், காதலின் தற்போதைய நிலையை எண்ணி கவலை கொள்ளும் ஆண்கள், ஆகிய மூன்று தரப்பினரையும் அலசும் வெவ்வேறு கதைகளில், இரு தரப்பிலும் இருக்கும் நியாயத்தை பேசியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இந்த மூன்று கதைகளை விவரிக்கும் அறிமுக இயக்குநரின் சொந்த கதை மூலம் உலகளவில் பேசுபொருளாக உள்ள ஒரு விசயத்தை பற்றி அழுத்தமாக அல்லாமல் மேலோட்டமாக பேசியிருக்கிறார்.
ஒரு கதைக்கருவுக்கு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து பார்வையாளர்களை திருப்திப்படுத்த போராடுவதை விட, சமூகப் பிரச்சனைகளை பேசும் குட்டி குட்டி கதைகளை ஒன்று சேர்த்து சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், அதையே தனது பாணியாக தொடர்ந்திருப்பது முதல் பாகத்தைப் போலவே கைகொடுத்…
அழுத்தமான கதாபாத்திரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கவனம் ஈர்ப்பது போல், தனது அதிரடியான செயல் மூலம் 2கே கிட்ஸுகளுக்கு அதிரடியான அறிவுரை வழங்கி தம்பி ராமையா அதிர்ச்சியளித்திருக்கிறார்.
நான்கு கதைகள் மற்றும் அவற்றுக்கான களங்களுக்கு ஏற்ப ஒளிப்பதிவில் வித்தியாசத்தை காட்டி கவனம் ஈர்த்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால்.
சதிஷ் ரகுநாதன் இசையில் ஹாட் ஸ்பாட்டின் முதல் பாகத்திற்கான பீஜியம் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.
யு.முத்தயனின் படத்தொகுப்பும் சி.சண்முகத்தின் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக், சூடான விசயங்களை சுவைபட சொல்வதோடு, அதில் இருக்கும் இரு தரப்பினர் பக்கம் இருக்கும் நியாயத்தை சமமாக பேச…

 

ரேட்டிங் 3/5