’வங்காள விரிகுடா’ திரைப்பட விமர்சனம்!

84

 

CHENNAI:

படம்: வங்காள விரிகுடா

நடிப்பு: குகன் சக்ரவர்த்தியார், அலினா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம், வாசு விக்ரம், டிப் லெனா, அலிஷா

நடிப்பு, தயாரிப்பு , கதை, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என 21 பொறுப்புகள் : குகன் சக்ரவர்த்தியார்

பி ஆர் ஓ: நிகில் முருகன்.

தூத்துக்குடியில் மக்கள் அனைவராலும் பெரிதாக மதிக்கக்கூடிய ஒரு மனிதராக வலம் வருகிறார் அண்ணாச்சி. இவர் தான் குகன் சக்ரவர்த்தி. அனைத்து தரப்பு மக்களுக்கும் வாரி வழங்கக் கூடிய இடத்தில் அவர் இருக்கிறார். தனதுகாதலியின் நினைவில் அவ்வப்போது, அவரை நினைத்து கண்கலங்கி நிற்கிறார். இந்த சூழலில், தனது நண்பனின் மகள் ஒருவர் பள்ளியில் படிக்க, அண்ணாச்சியை திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண் கூறுகிறார்.

வயது குறைவு என்றாலும், அவரை திருமணம் செய்து கொள்கிறார் குகன் சக்ரவர்த்தி. ஆனால், அந்த பெண்ணுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் இருக்கிறார். இந்த சூழலில், தனது முன்னாள் காதலியின் கணவன் காதலிக்கு தொடர்ச்சியாக இடஞ்சல் கொடுக்க, அவரை கொன்று விடுகிறார் குகன். ஆனால் அண்ணாச்சிக்கு மனைவி மூலமும், மாஜி காதலி மூலமும் எதிர்பாராத சிக்கல்கள் வருகிறது. அது அவரது வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இர்ருக்கும் படம்தான் ‘வங்காள விரிகுடா’

அண்ணாச்சியாகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்து இப்படத்தில் நடித்திருக்கிறார் குகன் சக்ரவர்த்தி.தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகர்களை நினைவு படுத்தும்படி நடித்திருக்கிறார்.ஆடல் பாடல் சண்டை என எல்லாவற்றிலும் அதிரடி காட்டி அசத்தி இருக்கிறார்.

நாயகனின் மனைவியாக டிப்லேனாவும் காதலியாக அலினா ஷேக்கும் நடித்துள்ளனர்.இரண்டு கதாநாயகிகளையும்,வழக்கம் போல காட்சிப் பொருளாக இல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஏராளமான புதுமுகங்கள் என தங்களுக்கு கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர்,எம்.ஜி.ஆர்,அப்துல்கலாம் ஆகியோரைப் பற்றிய பாடல் இடம் பெற்று கவனம் ஈர்க்கிறது.பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒரு நடிகராக கவனம் ஈர்க்கும் குகன் சக்கரவர்த்தி, இயக்குநராக பார்வையாளர்களை கதிலங்க வைத்திருக்கிறார். ஒரு காதல் கதையாக சென்றுக் கொண்டிருந்த படம் திடீரென்று பேய் கதையாக மாறுவது பின்னர் அது அரசியல் கதையாக உருபெறுவது என காட்சிகள் விறுவிறுப்பாக செல்கின்றன. கதை,திரைக்கதையிலும் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். அனுபவஸ்தர்களே தயங்கக்கூடிய திரைக்கதையை தன்னம்பிக்கையுடன் எழுதி கையாண்டிருக்கிறார்.

மொத்தத்தில், ‘வங்காள விரிகுடா’ படத்தை ரசிக்கலாம்.

ரேட்டிங் 2.5/5.