‘லாக்டவுன்’ திரைப்பட விமர்சனம்!

132

 

CHENNAI:

படம்: லாக் டவுன்

நடிப்பு: அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், ராம்ஜி, விநாயக ராஜ், விது, சஞ்சீவ், பிரியா கணேஷ், ஆஷா

தயாரிப்பு: லைக்கா ப்ரொடக்ஷன் சுபாஷ்கரன்

தயாரிப்பு தலைமை நிர்வாகி: ஜி கே எம் தமிழ் குமரன்

இசை: என் ஆர் ரகுநாதன், சித்தார்த்தன் விபின்

ஒளிப்பதிவு: கே ஏ சக்திவேல்

இயக்கம்: ஏ ஆர் ஜீவா

பி ஆர் ஓ: சதீஷ்குமார் (S2)

அனுபமா பரமேஸ்வரன் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு எதார்த்த நாயகி. வேலைக்காக பல கம்பெனிகள் ஏறி இறங்கி கொண்டிருக்கும் இவருக்கு தன் தோழி மூலம் ஒரு பார்ட்டிக்கு செல்ல, அங்கு வற்புறுத்தி மது அருந்த வைக்கிறார்கள். போதை மயக்கத்தில் இவர் கற்பு பறி போகிறது. தன்னை கற்பழித்தவர் யார் என்கிற காரணம் தெரியவில்லை. வீட்டிற்கு தெரிந்தால் அவமானம்.. என்ன செய்வது என்று தெரியாமல் கருவை கலைக்க அவர் போராடுகிறார்.  இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் வந்து விட அவரால் எந்த செயலும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்புடன் சொல்கின்ற படம்தான் “லாக்டவுன்”

அனுபமா பரமேஸ்வரன் படத்தின் நாயகியும் இவரே. நாயகனும் இவரே.. இவரின் பண்பட்ட நடிப்பால் தன் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். தான் கர்ப்பமான விஷயம் தெரியாமல் அவர் டாக்டரிடம் சண்டை போடுவதும் சரி, தன் கற்பை கலைக்க காலில் விழுந்து கெஞ்சுவதிலும் சரி, மாறுபட்ட நடிப்பை மிக சிறப்பாக செய்திருக்கிறார். பல பிரச்சனைகளை எதிர்கொண்டு, அதில் இருந்து மீள்வதற்காக போராடும் காட்சிகளில் அடித்து விளையாடியிருக்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கு விருது உறுதியாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

கதாநாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சார்லி மற்றும் நிரோஷா ஆகியோரது எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்கிறது.

பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிகக் குறைந்த கதைக்களத்தில் நிறைவான காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.

என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை இந்த கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறது.

பருவ வயதில் பெற்றோர் பாதுகாப்பில் இருப்பதே பெண்களுக்கு சிறந்தது என்பதை படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.ஜீவா,  நாயகியின் கர்ப்பத்துக்கு யார் காரணம்? என்கிற பெரும் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பார்வையாளர்கள்,ஒருகட்டத்தில் அதை மறந்து திகைக்கும்படி படத்தைக் கொண்டு சென்று, நமக்கு தெளிவாக சொல்ல முனைந்து இருக்கிறார்.

மொத்தத்தில், ‘லாக்டவுன்’ விருது கிடைக்கும் படம்.

ரேட்டிங் 3.5/5.