சட்டமும் நீதியும்-2 – இணையத் தொடர்

34

 

போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறார். அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யும் காவல்துறை, குற்றவாளிகளாக நான்கு போலீஸ்காரர்களை கைது செய்கிறது. இன்ஸ்பெக்டர் மரணத்துக்கு முன்பாக இந்த நால்வரும் தான் அவருடன் ஒரு முக்கிய பிரச்சினைக்காக மல்லுக்
கட்டியவர்கள். ஆனால், அந்த நான்கு போலீஸ்காரர்
களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்று அவர்களது குடும்பத்தார் சார்பில் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி கோர்ட்டில் வழக்கை எதிர்கொள்கிறார்.
இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி சந்திரா
 பிரபல வழக்கறிஞர் . அதோடு பார் கவுன்சில் தலைவரும் கூட. அதனாலயே இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் கோர்ட்டில் ஆஜராக கூடாது. மீறினால் பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சைலன்ட் மிரட்டல் விடுக்கப்பட..
 கொலைக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவர்கள் நிஜமாகவே நிரபராதிகளாக இருந்தால் அவர்களுக்கு உரிய நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதை உணர்ந்து இந்த கேசில் அவர்களின் வழக்கறிஞராக களம் காண்கிறார் சுந்தரமூர்த்தி.
அதுவரை மற்ற வழக்கறிஞர்களால் ஒரு பொருட்டாக கூட மதிக்கப் படாதவர் முதன் முதலாக (அதாவது முதல் பாகத்தில்) ஒரு சிக்கலான வழக்கில் ஆஜராகி அதில் வெற்றி பெற்ற பிறகு, தன்னை தேடி நிறைய வழக்குகள் வரும் என்று
 எதிர்பார்த்தார். ஆனால் அப்படி ஒன்றும் அதிசயம் நடந்துவிடவில்லை.
இந்த நேரத்தில் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாக, திருமணத்திற்கு போதிய பணம் திரட்ட வேண்டிய நிலை. அதனாலும்
கூட பார் கவுன்சில் ஒதுக்கி வைத்தாலும் பரவாயில்லை என்ற முடிவோடு இந்த வழக்கில் ஆஜராக முன் வருகிறார்.
எதிரணியும் பலம் வாய்ந்தது. அதுவும் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பார் கவுன்சில் தலைவி சந்திராவின் கணவர். அவர் கொல்லப்பட்டதாகவே நம்பும் சந்திரா, தனக்கே
உரித்தான
வாதத்
திறமையில், கைதான நான்கு போலீஸ்காரர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் தீவிர முனைப்புடன் செயல்படுகிறார்.
பலம் பொருந்திய வாதத்திறமை மிக்க வழக்கறிஞர் சந்திராவுடன் மோதும் சுந்தரமூர்த்தி, தனது நுணுக்கமான ஆதாரங்கள் மூலம் அவரை வீழ்த்த முயற்சிக்கிறார். இருவருக்குமான இந்த சட்டப் போராட்டத்தில் யார் வென்றது? என்பதை காட்சிக்கு காட்சி திருப்பங்களோடு சொல்வதே இந்த
‘சட்டமும் நீதியும் 2’.
வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக வரும் சரவணன், முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திலும் தன் அனுபவ நடிப்பில் ஜொலிக்கிறார். கோர்ட்டில் வாதங்களை எடுத்து வைக்கும் விதத்திலும், வீடு தேடி வந்த லஞ்சப் பணத்தை நாசூக்காக தவிர்க்கும் இடத்திலும் அனுபவ நடிப்பு நன்றாகவே கை கொடுக்கிறது. தீர்ப்பு வந்த பிறகு தெரிய வந்த உண்மைக்காக மனம் உடைந்து போகும் இடத்தை நடிப்பில் அழகாக மெருகேற்றி தருகிறார்.
முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திலும் இவரது உதவியாளராக வரும் லாவண்யா திரைக்கு கிடைத்த இன்னொரு இயல்பான நட்சத்திரம்.
கணவரை கொலை செய்தவர்கள் மீது கோபம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் நீதிமன்றத்தில் ஒரு திறமையான வழக்கறிஞராக வாதங்களை அடுக்கும் சந்திரா கேரக்டரை நடிப்பில் அழகாக எதிர்கொண்டு இருக்கிறார்,
வரலட்சுமி சரத்குமார். இவரது கணவராக வரும் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், குற்றவாளி போலீஸ்காரர்களாக நடித்திருக்கும் கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத், பவன் உள்ளிட்ட அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பின் மூலம் தொடரை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
இவர்களில் மகனைப் பறிகொடுத்த தந்தையாக வரும் கல்லூரி வினோத் நடிப்பில் தனித்து தெரிகிறார்.
 விசாரணை அதிகாரியாக வரும் ஷிவின் அந்த கேரக்டரில் விரைப்பு காட்டுகிறார்.
எஸ்.கோகுலகிருஷ்ணனின் கேமரா காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது.
விபின் பாஸ்கரின் பின்னணி இசை கதாபாத்திரங்களின்
உணர்வுகளை நமக்குள் கச்சிதமாக கடத்தி விடுகிறது.
இயக்கி இருக்கிறார் பாலாஜி செல்வராஜ். ஒரு போலீஸ் அதிகாரியின்
 திடீர் மரணம், அது கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எழும் வாதங்கள், திரைக்கதையின் போக்கை எதிர்பார்ப்புக்கு
 உரியதாக மாற்றி விடுகிறது. அதுவே இந்த இணைய தொடரின் பலமாகவும் மாறிவிடுகிறது.
தீர்ப்பு வந்த பிறகு ஏற்படும் அந்த திடீர் திருப்பம் நல்ல திரைக்கதைக்கான அடையாளம்.
பிளஸ்: முதல் பாகத்தின் வெற்றி, இந்த தொடருக்கும் அடையாளமாகி இருப்பது.
பிளாஷ்: அடிக்கடி
யூ டர்ன் அடித்து கதைக்குள் நிகழும் திருப்பங்கள்.
ரேட்டிங்: 3/5