
CHENNAI:
படம்: கிராணி
நடிப்பு: வடிவுக்கரசி,
திலீபன், சிங்கம் புலி, கஜராஜ், அனந்த நாக், அபர்ணா
தயாரிப்பு: விஜயா மேரி
இசை: செல்லையா பாண்டியன்
ஒளிப்பதிவு: A. மணிகண்டன்
இயக்கம்: விஜயகுமாரன்
பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா.
தமிழக கேரள எல்லை பகுதியில் படத்தின் கதை ஆரம்பமாகிறது. அந்த கிராமத்தில் 10 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து போகிறது. இந்த கொலை வழக்கு விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டர் திலீபன் அங்கு செல்கிறார்.
அங்கு அவருக்கு கிடைக்கும் தகவலை எடுத்துக்கொண்டு அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்த சூழலில் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த ஆனந்த் நாக் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பூர்வீக வீட்டில் வந்து குடியேறுகிறார்.
அந்த வீட்டை சரி செய்யும் வேலையில் இருந்தபோது, வீட்டின் முன்பு வயதான மூதாட்டி ஒருவர் மயங்கி கீழே விழுந்ததை பார்த்து அதிர்ச்சி ஆகிறார் ஆனந்த். அவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்கிறார். அவருக்கு முதல் உதவியும் செய்கிறார்.
அப்போது அங்கு வரும் ஊர் தலைவர் அவரைப்போலவே இருக்கும் ஒரு மூதாட்டியை பற்றி ஒரு பயங்கரமான கதை ஒன்றை சொல்கிறார். அந்த கதை கேட்டதும் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து செல்கிறார் ஆனந்த் நாக்.
ஆனால், ஆனந்த் அவர்களின் மனைவி அபர்ணா அந்த செய்தியை விசாரிக்க ஆரம்பிக்கிறார். பல திடுக்கிடும்தகவல்களை பற்றி அவர் அறிந்து கொள்கிறார். அதே சமயத்தில் மூதாட்டி பற்றி அறிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் திலீபன், அந்த கிராமத்திற்கு வருகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களையும், அந்த மூதாட்டி யார் ? என்பதை என்பதற்கு திகிலுடன் பதிலளிக்கும் படம்தான் ‘கிராணி’
வயதான கதாபாத்திரத்தில் சரியான ஒப்பனையோடு தனது கேரக்டரை உள்வாங்கி மிரட்டலான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் மூத்த நடிகை வடிவுக்கரசி.அகோர முகம், கொடூர பார்வை, கணவன், மனைவியை கம்பால் அடித்து சாய்ப்பது என்று திகிலூட்டுகிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் திலீபன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சிங்கம்புலி, ஊர் தலைவராக நடித்திருக்கும் கஜராஜ், வீட்டின் உரிமையாளராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்ணா மற்றும் குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் கன்ஷியாம், பேபி சாண்ட்ரியா என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஏ.மணிகண்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பயமுறுத்தும் படியாக இருந்தது படத்திற்கு பெரிதாக கை கொடுத்து இருக்கிறது.
டாக்டர் செல்லைய்யா பாண்டியன் இசையில் கு.கார்த்திக்கின் எழுத்தில் பாடல்கள் கேட்டு ரசிக்கும் ரகம் என்றாலும் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் விஜய குமாரன், குழந்தைகளுக்கு சொல்லப்படும் மாய மந்திர கதைகளை மையமாக வைத்து, ஒரு சுவாரஸ்யமான திகில் கதையை சொல்லியிருப்பதோடு, அதன் பின்னணியில் ஒரு மூதாட்டியை வைத்து ரசிகர்களை பயமுறுத்தி இருக்கிறார். கதைக்குப் பொருத்தமாக நடிகர்களையும் தேர்வு செய்திருப்பது அவருடைய பலம் என்று சொல்லலாம்.
மொத்தத்தில், ‘க்ராணி’ படம் அனைவரையும் பயமுறுத்தும்.
ரேட்டிங் 3/5