‘மெல்லிசை’ திரைப்பட விமர்சனம்!

107

 

CHENNAI:

படம்: மெல்லிசை

நடிப்பு: கிஷோர் குமார், சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன்

தயாரிப்பு: திரவ்

இசை : சங்கர் ரங்கராஜன்

ஒளிப்பதிவு: தேவராஜ் புகழேந்தி

இயக்கம்: திரவ்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா ( D’One), அப்துல் A நாசர்

கிஷோர் ஒரு உடற்கல்வி ஆசிரியராகத் தனியார் பள்ளியில் பணிபுரிகிறார்.நல்ல வீடு மனைவி மக்கள் என்று அழகான குடும்பம், சிக்கலற்ற வாழ்க்கை என்று பயணிக்கிறார். இருந்தாலும் ,அவருக்கு இசையின் மீது ஆர்வம் உண்டு. ஒரு பாடகராக வேண்டும் என்பது அவரது கனவு. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக அவர் பெரிது முயற்சி எடுத்து இருந்தாலும், குடும்ப சூழல் காரணமாக இப்போது உடற்கல்வி ஆசிரியராகவே பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சுபத்ரா ராபர்ட் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகன் ஜஸ்வந்த் மணிகண்டன் மற்றும்  எட்டு வயது மகள் தனன்யா வர்ஷினி இவர்களும் அதேபள்ளியில் படித்து வருகிறார்கள். கிஷோரின் குரலுக்கு பெரும் ரசிகையாக இருக்கும் அவரது மகள், அவரை பெரிய பாடகராக்கி மேடை ஏற்ற ஆசைப்படுகிறார்.

 ஒரு தொலைகாட்சியில்  நடக்கும் பாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிஷோருக்கு வருகிறது. அதில் அவர் பிரபலமாகிறார். பிறகு அடுத்தடுத்த நிலைக்கு மேலே செல்கிறார்.இது அந்த பள்ளியின் முதல்வருக்குப் பிடிக்கவில்லை கிஷோரை வேலையை விட்டு நீக்குகிறார். இதற்கிடையே, அவர்களின் மகன் ஜஸ்வந்த் மணிகண்டன்  தனது பள்ளி படிப்பின் போது அதீத திறமையினால் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பெற்று சம்பாதிக்கத் தொடங்கியதும், ஏற்கனவே தந்தை மீது மகனுக்கு வெறுப்பு ஒரு பக்கம் இருக்கையில், கிஷோரின் வேலையும் இசை வாழ்க்கையும் சரிவைச் சந்திக்கிறது, ஆனாலும் அவருக்கு மனைவி மகன் மகள் நண்பர்கள் என்று அனைவரும் உறுதுணையாக கூடவே இருந்து உதவி செய்கிறார்கள். இந்த சூழலில் இதற்கு அடுத்து கிஷோர் என்ன செய்தார்..? பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான்  ‘மெல்லிசை’ . படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிஷோர் குமார், பல ஏக்கங்களோடு வாழும் ஒரு குடும்ப தலைவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.அவர் தனது அளவான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை தனது கதாபாத்திரத்துடன் ஒன்றிணைத்துஅனைவரயும் கவர்கிறார். காதல் டூயட் எதுவும் வைக்காமல் மேடையில் மட்டுமே அவர் பாடுவது போல் காட்டி இருப்பது கதாபாத்திரத்தை வலுபடுத்தி  இருக்கிறது.

கிஷோரின் மனைவி வித்யாவாக சுபத்ரா ராபர்ட் சிறந்த குடும்பத் துணையாக பாசம், கோபம் என அனைத்தையும்  குடும்பத்தின் சுமூகத்திற்காக நேர்த்தியாக வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

மகனாகநடித்திருக்கும்ஜஸ்வந்த்மணிகண்டன்  மகளாக தனன்யா வர்ஷினி, இருவரும் தலைமுறை இடைவெளிக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்

ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோருக்கு முக்கியமான கதாபாத்திரங்கள்.அவற்றில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள்.

வெளிப்புறக் காட்சிகளை மட்டுமின்றி கதாபாத்திரங்களின் முக உணர்வுகளையும் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தி.

சங்கர் ரங்கராஜன் இசையமைத்திருக்கிறார். இசையை தலைப்பிலேயே வைத்திருக்கும் படம் என்பதால் அவருக்குக் கூடுதல் பொறுப்பு என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார்.

ஒரு மென்மையான கதையை இசை லயத்துடன் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் திரவ். இவரே படமும் தயாரித்திருக்கிறார். ஆக்சன், அதிரடி, மர்மம், திகில் என்று பல்வேறு ஜானர்களில் படங்கள் வந்து கொண்டிருக்கும் போட்டியான இந்த நிலையில் மெல்லிசை என்ற மென்மையான கதையை மிகுந்த நம்பிக்கையில் இயக்குனர் கையில் எடுத்து மாறுபட்ட வகையில் திரைக்கதை அமைத்து படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘மெல்லிசை’ படம் பார்ப்பவர்களை அந்த இசை கவரும்.

ரேட்டிங் 4/5