
CHENNAI:
படம்: காந்தி டாக்ஸ்
நடிப்பு: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைத்ரி, சித்தார்த் ஜாதவ்
தயாரிப்பு: Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment
இசை: ஏ ஆர் ரகுமான்
ஒளிப்பதிவு: கரண் பி ராவத்
இயக்கம்: கிஷோர் பாண்டுரங் பெலிகர்
பிஆர்ஓ: சதீஷ் (AIM),
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்கும் தொழிலதிபர் அரவிந்த்சாமி சிலரின் சதியால் நஷ்டத்துக்கு ஆளாகிறார். அவரது சொத்துக்கள் ஒவ்வொன்றாக பறிபோகிறது. இந்த சூழலில் மும்பை குடிசைப் பகுதியில் வாழும் விஜய் சேதுபதி, வேலை இல்லாததால் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுகிறார். எந்தவித வருமா
மும்பையில் ஏழைகள் வாழும் குடியிருப்பு பகுதியில் உடல் நலம் இல்லாத தாயை பராமரித்து தனி ஆளாக வசிக்கும் விஜய் சேதுபதி, தன் முகபாவனைகள் மற்றும் உடல் அசைவுகள் மூலம் வறுமையின் கொடுமைகளையும், தன் இயலாமையையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
அரவிந்த் சாமி, வெளிப்படையில் அமைதியானவர் என்றாலும்,உள்ளுக்குள் எரியும் ஒரு மனிதனாக நிதானமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அதிதி ராவ், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார்.
சித்தார்த் ஜாதவ் கதாபாத்திரம், அவர் தன் உடல் அசைவுகள் மூலமாக சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத்துக்கு பளபளப்பும் மினுமினுப்பும் கூடிய செல்வச்செழிப்பில் புரளும் மும்பையையும் ஒரு வேளை உணவுக்கே போராடும் வறுமை சூழ் மும்பையையும் ஒரு சேரக் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு.
இப்படத்தில் வசனம் இல்லை என்றாலும், தன் இசையை பேச வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற வகையிலான பின்னணி இசை, படத்தின் காட்சிகளை ரசிக்க வைத்து இருக்கிறார்.
இப்படத்தில் வசனம் இல்லாததால் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு அசைவுகளையும் மிக கவனமாக, நேர்த்தியாக அனைவரையும் நடிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலிகர். தற்போது வெளி வரும் படங்கள் போல் இல்லாமல் வித்தியாசத்தை காட்டி அசர வைத்து மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார்.
மொத்தத்தில், ‘காந்தி டாக்ஸ்’ ஒரு வித்தியாசமான படம்.
ரேட்டிங் 3/5.