’ரூம் பாய்’ திரைப்பட விமர்சனம்!

39

 

CHENNAI:

படம்: ரூம் பாய்

நடிப்பு: நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண் ராஜா, பிரபாகர் கேரளா பெ ஹமின், இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரலி

தயாரிப்பு: சூரியகலா சந்திரமூர்த்தி

இசை:வேலன் சகாதேவன்

ஒளிப்பதிவு : சி.பாரதி ராஜன்

இயக்கம்: ஜெகன் ராயன்

பி ஆர் ஓ : புவன் செல்வராஜ்

கூர்நோக்கு பள்ளியில் பயின்ற படத்தின் நாயகன் நிகில், அங்கிருந்து தனது சித்தப்பா இருக்கும் ஏலகிரிக்கு செல்கிறார். அங்கிருக்கும் இமான் அண்ணாச்சியில் ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார் நிகில். அங்கு ஏற்கனவே வேலை பார்க்கும் காத்து கருப்பு கலையோடு நட்பாகிறார்.

ஒரு சம்பவத்தால், இருவரையும் வேலையை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் இமான் அண்ணாச்சி. அதன்பிறகு நிகிலும் கலையும் ஏலகிரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் ரூம் பாயாக வேலைக்கு சேருகிறார்கள்.  இந்த சூழலில் அங்கு வேலை பார்க்கும் இளைஞர்களை அங்குள்ள மேனேஜர் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல், அங்கு வரும் ஜோடிகளை ஹிடன் கேமராவில் வீடியோ எடுத்து பணம் பறிக்கும் வேலையிலும் அந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது.   அங்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல மோசடிகளை கண்டுபிடிக்கும் நிகில், அதற்கான ஆதாரங்களை கைப்பற்றுவதோடு விடுதியின் மேலாளரை கொடூரமாக கொலை செய்து விடுகிறார். இதனால், அவரை வில்லன் கும்பல் தேட, மறுபக்கம் கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் மாயமான வழக்கு தொடர்பாக காவல்துறையும் நிகிலை தேடுகிறது. எதற்காக அந்த மேலாளரை நிகில் கொலை செய்தார்? அந்த கொலையின் பின்னணி என்ன? என்பதுதான் ’ரூம் பாய்’ படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனான நிகில், மிகவும் பொருத்தமாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். அழகோடு சேர்ந்து நடிப்பிலும் நன்றாகவே மெருகேறியிருந்தார் நாயகி ஹர்ஷா. ஹர்ஷாவின் அப்பாவாக நடித்தவர், பிர்லா போர்ஸ், காத்து கருப்பு கலை, மேனேஜராக நடித்தவர், மிரட்டல் விடுத்து பணம் சம்பாதிப்பவர், ஹோட்டல் ஓனர் என கதையில் தோன்றிய அனைவருமே மிகவும் சரியான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.

வில்லனாக நடித்திருக்கும் அருண்ராஜாவை விட, கூர்நோக்கு மையத்தின் காப்பாளராக நடித்திருக்கும் பிரபாகர் வில்லத்தனத்தை மிரட்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒருபாடலுக்கு நடனமாடியிருக்கும் நிதிமரோலி,  மற்றும் இமான் அண்ணாச்சி காட்சிகளுக்கு ஏற்றவாறு   சிரிப்பு மூட்டுகிறார்.

ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜனுக்கு,மிகச்சிறிய இடங்களில் படம்பிடிக்க வாய்ப்பு கொடுத்திருந்த போதும் அந்தக் குறை தெரியாதபடி காட்சிகளை மிக நன்றாக வடிவமைத்திருக்கிறார்.

வேலன் சகாதேவன் இசையில் பட்டர் ஃபிளை கண்ணடிச்சி உட்பட பாடல்கள் கேடு ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசை திரைக்கதைக்கேற்ப அமைந்திருக்கிறது.

குடும்பத்தை இழந்து அனாதையாகும் நாயகன், தனது நிலைக்கு காரணமானவர்களை தேடி பழி தீர்க்கும் பயணம் இந்த படத்தின் மையமாக அமைத்து அதற்கேற்றவாறு திரைக்கதை எழுதி ஒரு கிரைம் திரில்லர் கதையை மிக நியாயமான முறையில் சொல்லி பார்வையாளர்களிடம் பாரட்டு பெற்று விடுகிறார் இயக்குநர் ஜெகன் ராயன்.

மொத்தத்தில்: திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் “ரூம் பாய்”

ரேட்டிங் 3/5.