
CHENNAI:
படம்: 29
நடிப்பு: விது, ப்ரீத்தி அஸ்வராணி, மகேந்திரன், அவினாஷ், பிரேம்குமார், சிந்து ஷியாம்
தயாரிப்பு: கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம்
இசை: ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்
இயக்கம்: ரத்தினகுமார்
பி ஆர் ஓ : சதீஷ் (S2).
சேலத்தில சத்யா என்கிற விது தனது 29-வது வயதில் எந்த ஒரு லட்சியமும், சரியான வேலையும் இல்லாமல் அடையாளச் சிக்கலில் தவிக்கும் ஒரு இளைஞன். அவனுக்கு கல்யாண வயது தாண்டி விட்டதால் அந்த இளைஞன் விது கேள்விக்கும் கேலிக்கும் ஆளாகிறான்.இந்த சூழலில் பல தேடுதலுக்கு பின் சென்னையில் ஒரு கம்பெனியில் விதுவுக்கு வேலை கிடைக்கிறது. 29 வயதான விது வாழ்க்கையின் மீது எந்த ஒரு கவலையும் இல்லாமல், ஏதேனும் ஒரு விஷயத்தை லட்சியமாக கையில் எடுத்து வாழவேண்டும் என்று நினைக்கிறார். தனது வாழ்க்கையி
அவளைச் சுற்றி வளைய வருகிறானே தவிர அவனுக்கு பெரிதாக லட்சியமும் கனவும் எதுவும் இல்லாமல் இருக்கிறது. விதுவிடம் ‘காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை, அதை தாண்டிய ஒரு வாழ்க்கையும், அதில் சாதிக்க வேண்டியதும் அவசியம்’ என்பதை புரிய வைக்க பிரீத்தி அஸ்ரானி முயற்சிக்கிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைய, காதலை முறித்துக்கொண்டு பிரிந்து செல்ல முடிவு செய்கிறார் பிரீத்தி அஸ்ரானி. தனக்கான அடையாளமாக நினைத்த காதலும், காதலியும் கைவிட்டு போன பிறகு, மீண்டும் தன் அடையாளத்தை தேடி பயணிக்கும் விதுவின் வாழ்க்கை என்ன ஆனது ?, கைவிட்டு சென்ற காதலியுடன் மீண்டும் இணைந்தாரா? இல்லையா ? என்பதுதான் “29” படத்தின் மீதிக் கதை.
“ரெட்ரோ” படத்தில் வில்லன் என நெகட்டிவ் கேரக்டரில் அறிமுகமான விது இப்படத்தில் சத்யாவாக நாயகனாக நடித்திருக்கிறார். காதலில் இருக்கும்போது காட்டும் வெள்ளேந்தித் தனமும், பிரிவுக்குப் பின் ஏற்படும் முதிர்ச்சியும் அவரது நடிப்பில் தெரிகிறது. பக்கத்து வீட்டு பையன் போன்ற எளிமையான தோற்றம், காதல் உணர்வுகளையும், காதலி பிரிவால் ஏற்பட்ட மன வலியையும் தன் அளவான நடிப்பின் மூலம் எதார்த்தமாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
இப்படத்தில் விஜயலட்சுமி என்கிற விஜியாக நடித்துள்ள நடிகை ப்ரீத்தி அஸ்ராணி தோற்றத்திலும் வெடுக்கென்று எதையும் வெளிப்படையாகப் பேசும் விதத்திலும் அந்தந்த சூழலுக்கு ஏற்ற வகையில் சரியான நடிப்பை வழங்கி உள்ளார். காதலியாக மட்டுமல்லாமல், வாழ்க்கையை புரியவைக்கும் துணையாகவும் தனது கதாபாத்திரத்தை அழகாக சுமந்திருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்துள்ள அவினாஸ், படத்தின் இறுக்கமான மனநிலையை அவ்வப்போது லேசாக்குகிறார். மாஸ்டர் மகேந்திரன், ஆதிரா பாண்டியலக்ஷ்மி, சிந்து ஷியாம் உள்ளிட்டவர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளனர்.
மேலும் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரேம்குமார், ஆறுமுகவேல் , ஷெனஸ் பாத்திமா ,எஸ்ஏ சதீஷ்குமார், ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப் ,அனுஸ்ரீவேலன் போன்ற நடிப்புக் கலைஞர்கள் அனைவருமே குறை இல்லாத பங்களிப்பை ஆற்றி உள்ளார்கள்.
பட்ஜெட்டுக்கும் இயக்குநரின் விருப்பத்திற்கும் ஏற்றபடியான ஒளிப்பதிவைச் செய்துள்ளார் மாதேஷ் மாணிக்கம்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் காதலின் வலிகளையும் வரிகளும் கவனிக்க வைக்கின்றன. படத்தின் காட்சி
ஒரு 29 வயது இளைஞன் வேலையில்லாமல் படும் அவமானங்களையும், அவனது தாழ்வு மனப்பான்மையையும் ரத்தின குமார் கையாண்ட விதம் அபாரமானது. காதல் கொண்டாட்டத்தோடு, அதை தாண்டிய வாழ்க்கை ஒன்று இருக்கிறது, என்ற அறிவுரையை அழகாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கிறார். ’29’ படத்தின் மூலம் வெறும் பொழுதுபோக்கு இயக்குநராக மட்டும் இல்லாமல், ஒரு தலைமுறையின் மனசாட்சியைத் தொடும் படைப்பாளியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தத்தில், ‘29’ காதலர்களின் வாழ்க்கையை சொல்லும் உன்னதமான படம்.
ரேட்டிங் 4/5.