‘ராவ் பகதூர்’ திரைப்பட விமர்சனம்!

40

 

CHENNAI:

நடிகர்கள் :சத்யதேவ், தீபா தாமஸ், விகாஸ் முப்பாலா, பாலா பரசர் மற்றும் பலர்.

இசை :ஸ்மாரன் சாய்,

ஒளிப்பதிவு :கார்த்திக் பர்மர்,

இயக்கம் : வெங்கடேஷ் மகா,

அரச குடும்பத்தைச் சேர்ந்த ராமப்பா ராவ் பகதூர் என்ற மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அரச பரம்பரையைச் சேர்ந்த நாயகன் சத்ய தேவ், வயது மூப்பு, உடல்நிலை பாதிப்பு மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தன் வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் சொன்ன கெடுவை தாண்டியும் இறக்காமல் இருக்கும் அவர், தன் மனதுக்குள் இருக்கும் ஒரு பெரிய சந்தேகம் மனதை போட்டு உறுத்துகிறது. அந்த  சந்தேகத்தை  தீர்த்து வைத்துவிட்டால், நான் நிம்மதியாக இறந்து விடுவேன், என்று தனது நண்பரும், மருத்துவருமான விகாஸிடம் தெரிவிக்கிறார். விகாஸிடம் சொன்ன அந்த சந்தேகமான விஷயம் என்ன? அவரது காதல், குடும்பம் மற்றும் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் என்ன? என்பதை  கடந்த காலமும் நிகழ்காலமும் மாறி மாறி சொல்லப்படும் கதைதான் “ராவ் பகதூர்”

ராமப்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யதேவ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல்வேறு காலகட்டத்திற்கு ஏற்றவாறு வயது, தோற்றம், கோபம், அழுகை என அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கி உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒட்டுமொத்தப் முழுப் படத்தையும் தனது தோள்களில் சுமந்து நிற்கிறார்.

சத்யதேவ் மனைவியாக நடித்திருக்கும் தீபா தாமஸ்  துணிச்சல் மிக்க கதாபாத்திரத்தில் கவனத்தை ஈர்க்கிறார் . படத்தின் பலம் தான்.

விகாஸ் முப்பாலா மற்றும் பாலா பரசர் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களை குறையில்லாமல் செய்திருக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஸ்மரன் சாய் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. கார்த்திக் பர்மார் ஒளிப்பதிவு அழகாவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

அரண்மனையில் நடக்கும் சம்பவங்களை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாகியிருக்கும் இயக்குநர் வெங்கடேஷ் மஹா, இத்திரைப்படத்தில் சமூகத்தில் ஊறிப்போயுள்ள நிறவெறி மற்றும் வர்க்கப் பாகுபாடுகளை பற்றி மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். ஆரம்பத்தில்  திகில் கலந்த மர்மமாக ஆரம்பிக்கும் படம், அடுத்தடுத்த திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை இறுதிவரை ஈர்த்து செல்கிறது. தெலுங்கு சினிமாவின் வழக்கமான கமர்ஷியல் பாணியை தவிர்த்து, உலகத் தரத்தில் ஒரு உளவியல் பீரியட் திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் வெங்கடேஷ் மஹா இப்படத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில்,  “ராவ் பகதூர்” மெதுவாக நகரும் திரைக்கதையாக இருந்தாலும்  அனைவரும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.