‘இதயம் முரளி’ திரைப்பட விமர்சனம்

69

 

 

CHENNAI:

படம்: இதயம் முரளி

நடிப்பு: அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி, தமன் எஸ், நிஹாரிகா, ரக்சன், டிராவிட் ஏஞ்சலின், அஞ்சு குரியன், சுதாகர், யஷாஸ்ரீ, ஜோனிதா

தயாரிப்பு: டான் பிக்சர்ஸ் (DAWN PICTURES )

இசை : தமன் எஸ்

ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா, சி எச் சாய்

இயக்கம்: ஆகாஷ் பாஸ்கரன்

பிஆர்ஓ : சதீஷ் (AIM), சுரேஷ் சந்திரா.

இன்றைய சூழலில் ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் தோல்விகளில் சிக்கும் கதாநாயகனின் கதைதான் இதயம் முரளி.நாயகனாக நடித்திருக்கும் அதர்வா,பள்ளிப் பருவத்தில் ப்ரீத்தி முகுந்தன் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் தோல்வி அடைகிறது.கல்லூரிப் பருவத்தில் கயாடு லோஹர் மீது காதல் கொள்கிறார். பல காதல் தோல்விகளை சந்தித்த இளைஞன், இறுதியில் குடும்பம் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மனைவியிடம் காதலை தேட முயற்சிக்கிறான். அந்த முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சிக்கும் படம்தான்  ‘இதயம் முரளி’.

90 காலகட்டத்தில் இதயம் படத்தில் முரளி நடித்த அதே போன்ற கதாபாத்திரத்தை ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வா ஏற்றிருக்கிறார். குறிப்பாக அவரது கண்களிலேயே காதல், ஏக்கம், வலி, மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளும் வெளிப்படுவது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகிகளாக வரும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாது லோஹர் இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். குறிப்பாக கயாது லோஹரின் இயல்பான நடிப்பும், கவர்ச்சிகரமான முகமும் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. சிறப்புத் தோற்றத்தில் வரும் ஃபஹத் ஃபாசில் குறுகிய நேரமே வந்தாலும், தனது அனுபவம் மிக்க நடிப்பால் கதைக்கு கூடுதல் வலுவூட்டியிக்கிறார்.

முக்கியவேடத்தில் நடித்திருக்கும் நட்டி,முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பரிதாபங்கள் சுதாகர்,ட்ராவிட் செல்வம்,தமன்,நிஹாரிகா,ரக்‌ஷன் ஆகிய அனைவரும் தங்கள் இருப்பை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளனர்.ரைசா வில்சன், சின்னி ஜெயந்த், பப்லு பிரித்விராஜ் ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த பணியை செய்து இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாகவும் வண்ணமயமாகவும் காட்சியளிக்கிறது.

தமன் எஸ். இசையில் பாடல்கள் ஓரளவு கவர்ந்தாலும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் வசனங்களும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஏற்கெனவே சொல்லப்பட்ட முரளி நடித்த ‘இதயம்’ படத்தில் சொல்லப்பட்ட கதைதான் என்றாலும் அதைப் புதிதுபோல் ஆக்கும் முயற்சியில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். பழைய நினைவுகளையும், இன்றைய தலைமுறையின் உணர்வுகளையும் இணைத்து அனைவரும் ரசிக்கும் வகையில் ஒரு நேர்த்தியான காதல் திரைப்படத்தை வழங்கியுள்ளார்.

மொத்தத்தில், ‘இதயம் முரளி’ காதலர்களை கவரும் படம்.

ரேட்டிங் 3/5.